பாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பாட்டி என்னும் சொல் பழந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி வி. ப. மூலம் பகுப்பு:தமிழர் வாழ்வியல் சேர்க்கப்பட்டது
வரிசை 17: வரிசை 17:
==அடிக்குறிப்பு==
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:தமிழர் வாழ்வியல்]]

13:32, 25 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

பாட்டி என்னும் சொல் பழந்தமிழில் இருவேறு பொருள்களையும், இன்றைய தமிழில் முறைப்பெயரையும் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

அகத்திணை வாயில்

அகத்திணை மாந்தர்களில் அகத்திணை வாயிலாகச் செயல்படுவோரில் ‘பாட்டி’ எனபவரும் ஒருவர். தொல்காப்பியம் கற்பியல் 52 இங்குப் பாட்டி என்னும் சொல் பாடினியைக் குறிக்கும். ஒப்புநோக்குக திருவாளன் – திருவாட்டி

மீனவப்பெண்

பாணன் வரால் மீனைக் கொடுத்து நறவுக் கள்ளைப் பண்டமாற்றாக வாங்கி உண்டு வேட்டைக்குச் செல்வதை மறந்து படுத்துக் கிடந்தவனுக்குப் ‘பாட்டி’ (பாடினி) ஆம்பல் இலையில் சுடச்சுடப் பொங்கல் சோறும், இனிப்பும் புளிப்பும் கலந்த பிரம்புப் பழமும் விடியல் பொழுதில் இட்டு உண்ணச் செய்வாளாம்.

நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து
நாள்துறைப் பட்ட மோட்டிரு வராஅல்
துடிக்கட் கொழுங்குறை நொடுத்துண்டு ஆடி
வேட்டம் மறந்து துஞ்சுங் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகலிலை அமலைவெஞ் சோறு
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து
விடியல் வைகறை இடூஉம் ஊர – அமநானூறு 196

பெண்நாய், பெண்பன்றி

விலங்கினத்தில் பெண்ணைக் குறிக்கும் சொற்கள் எனத் தொல்காப்பியர் 13 பெயல்களைக் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்று ‘பாட்டி’. தொல்காப்பியம் மரபியல் 3

பெண் நாயையும், பெண் பன்றியையும் பாட்டி என வழங்கிவந்தனர். தொல்காப்பியம் மரபியல் 66

அடிக்குறிப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டி&oldid=1242791" இலிருந்து மீள்விக்கப்பட்டது