து. உருத்திரமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வெளி இணைப்புக்கள்: மேலும் சில நூல்கள் - நூலகம் திட்டம்
வரிசை 141: வரிசை 141:


== வெளி இணைப்புக்கள் ==
== வெளி இணைப்புக்கள் ==
=== நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள் ==
* [http://www.noolaham.net/library/books/01/53/53.htm வள்ளி - நூலகம் திட்டம்]
* [http://www.noolaham.net/library/books/01/44/44.htm கண்மணியாள் காதை - நூலகம் திட்டம்]
* [http://www.noolaham.net/library/books/01/53/53.htm வள்ளி]
* [http://www.noolaham.net/library/books/01/44/44.htm கண்மணியாள் காதை]
* [http://noolaham.net/library/books/04/391/391.pdf மஹாகவியின் ஆறு காவியங்கள்]
* [http://noolaham.net/library/books/04/319/319.pdf குறும்பா]
* [http://noolaham.net/library/books/03/274/274.pdf வீடும் வெளியும்]
* [http://noolaham.net/library/books/02/106/106.htm கோடை]

=== பிற இணைப்புக்கள்===
* [http://balachandran05.blogspot.com/2007/02/4.html என்னைக் கவர்ந்தவர்கள் - 4 கவிஞர் மஹாகவி]
* [http://balachandran05.blogspot.com/2007/02/4.html என்னைக் கவர்ந்தவர்கள் - 4 கவிஞர் மஹாகவி]



17:54, 15 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

மஹாகவி ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். நீலாவணன், முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர்.

வாழ்க்கை

பெயர்: துரைசாமி உருத்திரமூர்த்தி. (ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'மகாகவி உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார்.)

வேறு புனைபெயர்கள்: பண்டிதர், மாபாடி, காப்பியாற்றூப் காப்பியனார், மகாலட்சுமி, பாணன், வாணன்.

பிறப்பு: 09. 01. 1927

கல்வி: எஸ். எஸ். சி. (ஆங்கில மொழி மூலம்) Senior school certificate (English) தமிழில் அதி உயர் சித்தி

தொழில்: 20. 11. 45 - 58 வரை: எழுதுவினைஞர், திறைசேரி, கொழும்பு.

1959-1961: எழுதுவினைஞர், கடற்படை அலுவலகம், திருக்கோணமலை.

1962-1967: எழுதுவினைஞர், குடிவரவு/ குடியகல்வுத் திணைக்களம், கொழும்பு.

1967: இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் வெற்றி பெறுதல் (CAS/SLAS). மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம். மாரடைப்பு முதலாவது தாக்குதல்.

1968-1969: மாவட்டக் காணி அதிகாரி, யாழ்ப்பாணம்.

1970: அரச செயலகத் துணைவர் (OA), மட்டக்களப்பு.

1971: உதவி ஆணையாளர், அரசகரும மொழித் திணைக்களம், கொழும்பு.

திருமணம்: 30. 08. 1954

வாழ்க்கைத்துணை: பத்மாசினி முத்தையா

மகன்/ மகள்: பாண்டியன், சேரன், சோழன், இனியாள், ஔவை

மருமக்கள்: எஸ். கே. விக்னேஸ்வரன், ந. இரவீந்திரன், கல்பனா சோழன், ஸ்வெட்லானா பாண்டியன்

பேரப்பிள்ளைகள்: அரசி, அனிச்சா, எல்லாளன், ஆன்யா, செந்திரு, செழியன்

இறப்பு: ஜூன் 20, 1971

மஹாகவியின் காவியங்கள்

கல்லழகி எழுதப்பட்டது டிசம்பர் 1959. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.

சடங்கு எழுதப்பட்டது 1961 இறுதியாக இருக்க வேண்டும். 1962 ஜனவரி முதல் தினகரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.

தகனம் 1962ல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு தேனருவி சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.

ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் சுதந்திரனில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1971ல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.

கண்மணியாள் காதை எழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967ல் விவேகியில் (அதே பெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968ல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது.

கந்தப்ப சபதம். எழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.

இதுவரை வெளிவந்த மஹாகவியின் நூல்கள்

  • வள்ளி ('மஹாகவி' கவிதைகள்)

முதற்பதிப்பு: ஆடி 1955 வரதர் வெளியீடு- விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசதுறை வீதி, யாழ்ப்பாணம்.

  • மஹாகவியின் குறும்பா

முதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966 அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு- 13.

  • மஹாகவியின் கண்மணியாள் காதை

(வில்லுப்பாட்டு) எழுதியது: நவம்பர் 1966 முதல் வானொலி பரப்பியது: மே 1967 முதல் மேடையேற்றியது: டிசம்பர் 1967 முதல் அச்சேற்றியது: நவம்பர் 1968 அன்னை வெளியீட்டகம், 89/1, கோவில் வீதி யாழ்ப்பாணம்.

  • மஹாகவியின் கோடை(பா நாடகம்)

எழுதியது: பெப்ரவரி 1966 முதல் மேடையேற்றம்: ஓகஸ்ட் 1969 முதல் பதிப்பு: செப்டெம்பர் 1970 இரண்டாம் பதிப்பு: நவம்பர் 1988 மூன்றாம் பதிப்பு: ஜூன் 1990 வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.

  • ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்

1971

  • வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி)

முதற் பதிப்பு: ஜூன் 1973 வாசகர் சங்கம், 'நூறிமன்சில்', கல்முனை- 6. (வாசக சங்க வெளியீடு -6)

  • மஹாகவியின் இரண்டு காவியங்கள்

1. கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம் 2. சடங்கு

முதற்பதிப்பு: ஜூலை 1974 பதிப்பாசிரியர்: டாக்டர் சாலை இளந்திரையன், தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி-7. பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை-1.

  • மஹாகவி கவிதைகள்

1984

  • புதியதொரு வீடு

1989

  • மஹாகவியின் ஆறு காவியங்கள்

1. கல்லழகி 2. சடங்கு 3. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் 4. கண்மணியாள் காதை 5. கந்தப்ப சபதம் 6. தகனம்

முதற்பதிப்பு: மார்ச் 2000 வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.

  • மஹாகவியின் மூன்று நாடகங்கள்

1. கோடை 2. புதியதொரு வீடு 3. முற்றிற்று

முதற்பதிப்பு: ஜூன் 2000 வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஸன் பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான்

வெளி இணைப்புக்கள்

= நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்

பிற இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=து._உருத்திரமூர்த்தி&oldid=124018" இலிருந்து மீள்விக்கப்பட்டது