வேதநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
| name = வேதநாயகம் பிள்ளை
| name = வேதநாயகம் பிள்ளை
| birthname = சாமுவேல் வேதநாயகம் பிள்ளை
| image = vedanayagam.jpg
| image = vedanayagam.jpg
| caption = வேதநாயகம் பிள்ளை
| caption = வேதநாயகம் பிள்ளை

05:35, 22 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

வேதநாயகம் பிள்ளை
வேதநாயகம் பிள்ளை
வேதநாயகம் பிள்ளை
பிறப்புசாமுவேல் வேதநாயகம் பிள்ளை
11 அக்டோபர் 1826
குளத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு21 சூலை 1889(1889-07-21) (அகவை 62)
தொழில்கவிஞர், எழுத்தாளர், தமிழறிஞர்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - சூலை 21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர், திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்கு தொடர்வண்டியில் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் இவர் பிறந்தார்.[சான்று தேவை] தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார். 1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார்.[1]

வாழ்க்கை

தொடக்கக் கல்வியைத் தமது தந்தையிடம் கற்ற வேதநாயகம் ஆங்கிலம், தமிழ் மொழிக்கல்வியை தியாகராச பிள்ளை என்பாரிடம் பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.[1]

இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.[1]

அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.

ஆக்கங்கள்

உசாத்துணை

கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1963.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 [1]

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதநாயகம்_பிள்ளை&oldid=1240057" இலிருந்து மீள்விக்கப்பட்டது