எசுப்பானியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: lez:Испан чIал
வரிசை 445: வரிசை 445:
[[lad:Lingua castilyana]]
[[lad:Lingua castilyana]]
[[lb:Spuenesch]]
[[lb:Spuenesch]]
[[lez:Испан чӀал]]
[[lez:Испан чIал]]
[[li:Castiliaans]]
[[li:Castiliaans]]
[[lij:Lengua spagnòlla]]
[[lij:Lengua spagnòlla]]

08:37, 19 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

எசுப்பானியம், காசிட்டிலியன் (Castilian)
Español, Castellano
உச்சரிப்பு/espaˈɲol/, /kasteˈʎano/ - /kasteˈʝano/
பிராந்தியம்எசுப்பானியம் பேசும் நாடுகளும் ஆட்சிப் பகுதிகளும்:
 அர்கெந்தீனா,
 பொலிவியா,
 சிலி,
 கொலம்பியா,
 கோஸ்ட்டா ரிக்கா,
 கியூபா,
 டொமினிக்கன் குடியரசு,
 எக்குவடோர்,
 எல் சல்வடோர,
 எக்குவடோரியல் கினி,
 குவாத்தமாலா,
 ஒண்டுராசு,
 மெக்சிக்கோ,
 நிக்கராகுவா,
 பனாமா,
 பரகுவை,
 பெரு,
 புவேர்ட்டோ ரிக்கோ,
 எசுப்பானியா,
 உருகுவை,
 வெனிசுவேலா,
இவை தவிர, குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்டவை:
 பெலீசு,
 கிப்ரல்டார்,
 ஐக்கிய அமெரிக்கா,
 பிலிப்பீன்சு,
 அந்தோரா.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
முதன் மொழியாகப் பேசுவோர்a: 350 million
aஎல்லா தொகைகளும் அண்ணளவானவை.  (date missing)
இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பம்
Latin (Spanish variant)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
21 நாடுகள், ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், Organization of American States, Organization of Ibero-American States, ஆபிரிக்க ஒன்றியம், Latin Union, Caricom, North American Free Trade Agreement, Antarctic Treaty, உலக வணிக அமைப்பு.
Regulated byஎசுப்பானிய மொழி நிறுவனங்களின் கூட்டமைப்பு (Real Academia Española மட்டும் 21 ஏனைய தேசிய எசுப்பானிய மொழி நிறுவனங்கள்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1es
ISO 639-2spa
ISO 639-3spa

Information:
  எசுப்பானிய மொழி அரசகரும மொழியாகவுள்ள நாடுகள்.
  அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்படாது பேசப்படு நாடுகளும் பிராந்தியங்களும்

எசுப்பானிய மொழி (Español) அல்லது எசுப்பொன்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.

வரலாறு

எசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியேற்ற வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[2][3]. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாம்மிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

மொழி அமைப்புகள்

எசுப்பானிய மொழி உலகிலேயே ஒலிப்பொழுக்கம் (phonetic) மிக்க மொழிகளில் ஒன்றாகும். எழுத்துக்கூட்டல்களைக் கொண்டு சொற்களை எளிதாகவும் துல்லியமாகவும் ஒலிக்கலாம்.

எசுப்பானிய மொழியின் நெடுங்கணக்கு அல்லது அகரவரிசை

எசுப்பானிய மொழியில் மொத்தம் 29 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன:

a, b, c, ch, d, e, f, g, h, i, j, k, l, ll, m, n, ñ, o, p, q, r, s, t, u, v, w, x, y, z.

அகர வரிசையில் உள்ள எழுத்துக்களும் அவைகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தலைப்பு எழுத்துவகை, சிறிய எழுத்துவகை ஆகிய இரண்டும் காட்டப்பட்டுள்ளன. பிறைக்குறிகளுக்கிடையே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்துலக ஒலியன் குறிகள் ஆகும். k, w ஆகிய இரண்டும் வேற்றுமொழிகளில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களில் மட்டும் வழங்குவன.

A a a ['äˑ]| J j jota ['xo̞ˑ.t̪ä], ['χo̞ˑ.t̪ä], ['ho̞ˑ.t̪ä]| ஹோத்தா R r ere,erre ['e̞ˑ.r͈e̞]| எர்ரே
B b be ['be̞ˑ] 'பே
be alta [ˌbe̞ 'äl̪.t̪ä] 'பே ஆல்ட்டா
be grande [ˌbe̞ 'ɰɾän̪.d̪e̞] 'பே 'கிராண்டே
be larga [ˌbe̞ 'läɾ.ɰä] 'பே லார்கா
K k S s எஸெ
C c ce ['s̻e̞ˑ] ஸே, ['θe̞ˑ] ஸ்தே L l ele ['e̞ˑ.le̞] எலெ T t te ['t̪e̞ˑ] தெ
Ch ch செ Ll ll doble ele 'டோ'ப்லெ எலெ elle எயெ D d de ['d̪e̞ˑ] 'டெ M m eme ['e̞ˑ.me̞] எமெ U u u ['uˑ]
E e e ['e̞ˑ] N n ene ['e̞ˑ.ne̞] எனெ V v uve ['uˑ.β̞e̞] உபெ
ve ['be̞ˑ] 'பெ
ve baja [ˌbe̞ 'β̞äˑ.hä] 'பெ பஹா, [ˌbe̞ 'β̞äˑ.xä]
ve chica 'பெ சிக்கா [ˌbe̞ 'ʧiˑ.kä]
ve corta [ˌbe̞ 'ko̞ɾ.t̪ä] 'பெ கோர்த்தா
F f efe ['e̞ˑ.fe̞] எஃவெ Ñ ñ eñe ['e̞ˑ.ɲe̞] என்யெ W w uve doble [ˌu.β̞e̞ 'ð̞o̞ˑ.β̞le̞] ஊபெ 'டோப்லெ
doble ve 'டோ'ப்லெ வே ['do̞ˑ.β̞le̞ ˌβ̞e̞]
doble u ['do̞ˑ.β̞le̞ ˌu] 'டோப்லே உ
ve doble ['ˌβ̞e̞ do̞ˑ.β̞le̞] வே 'டோப்லெ, 'பெ 'டோப்லெ
G g ge ['xe̞ˑ] ஃஎ, ['çe̞ˑ] ஸெ, ['he̞ˑ] ஹெ O o o ['o̞ˑ] X x equis ['e̞ˑ.kis̻] எக்கிஸ், ['e̞ˑ.kis̺]எக்கிஸ்
H h hache ['äˑ.ʧe̞] ஹாச்செ, ['äˑ.ʨe̞] P p pe ['pe̞ˑ] பே Y y ye ['ʝe̞ˑ] யெ, ['ʒe̞ˑ], ['ʃe̞ˑ]
இ கிரியேகா [ˌi 'ɰɾje̞ˑ.ɰä]
I i i ['iˑ]
i latina [ˌi lä't̪iˑ.nä] இ லத்தினா
Q q cu ['kuˑ] கு Z z zeta, ceta ['θe̞ˑ.t̪ä] த்ஸேத்தா, ['s̻e̞ˑ.t̪ä] ஸேத்தா
zeda, ceda ['s̻e̞ˑ.ð̞ä] ஸேதா, ['θe̞ˑ.ð̞ä] த்ஸேதா

உயிரொலிகள் உயிரெழுத்துகள்

இம்மொழியில் ஐந்து உயிரொலிகள் (உயிரெழுத்துக்கள்) உள்ளன.

அவை: a (அ), e (எ), i or y (இ), o (ஒ), u (ஊ).

மெய்யொலிகள் மெய்யெழுத்துகள்

எசுப்பானிய மொழியின் அகரவரிசையில் உள்ள 29 எழுத்துக்களுள் 5 உயிரொலிகளும், வேற்றுமொழி சொற்களில் மட்டும் பயன்படும் w என்னும் எழுத்தும் நீங்கலாக மொத்தம் 23 மெய்யொலி எழுத்துக்கள் உள்ளன (y என்னும் எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டால்). அவற்றுள் ஈரெழுத்து கூட்டங்களாகிய ch மற்றும் ll ஆகிய இரண்டும் எசுப்பானிய மொழியில் தனி மெய்யெழுத்துக்களாகக் கருதப்படுகின்றன. மெய்யெழுத்துக்களில் n என்னும் எழுத்து வேறு ñ என்னும் எழுத்து வேறு.

மெய்யொலிகளில் ஆங்கிலத்தில் இல்லாத 4 ஒலிகள் உண்டு.

அவையாவன:

  • ch (தமிழிலுள்ள "ச்" போன்று உச்சரிக்கப்படும்.)
  • ll (தமிழிலுள்ள "ய்" போன்று உச்சரிக்கப்படும்.)
  • ñ (ஆங்கிலத்திலுள்ள canyon என்னும் சொல்லில் வரும் "ன்ய்" என்பது போன்று உச்சரிக்கப்படும்.)
  • rr (தமிழிலுள்ள 'ற்' போன்று உச்சரிக்கப்படும்.)

பிற முக்கியமான மெய்யெழுத்து ஒலிப்பு விதிகள்

  • c என்னும் மெய்யெழுத்துக்குப் பின் e அலது i வந்தால் c என்னும் எழுத்தை ஆங்கிலத்தில் sit என்னும் சொல்லில் வரும் s என்பதுபோல ஒலிக்க வேண்டும். ஆனால் எசுப்பானியாவில் பேசப்படும் காஸ்ட்டில்லியன் என்னும் எசுப்பானிய மொழி வடிவத்தில் இதனை ஆங்கிலச் சொல்லாகிய think என்பதில் வரும் "th" போல ஒலிக்க வேண்டும். ஆங்கிலத்தில் think என்பதை ஸ்திங்க் என்பதுபோல சற்றே காற்றொலி கலந்து முதல் தகரத்தை ஒலிக்க வேண்டும்.
  • எசுப்பானிய மொழியில் h என்னும் எழுத்தை ஒலிப்பது கிடையாது.
  • எசுப்பானியர்கள் b, v ஆகிய இரண்டையுமே ஈரிதழ் ஒலியாக b என்பதுபோல்தான் ஒலிக்கிறார்கள்.

எசுப்பானிய மொழி ஒலியன்கள்

எசுப்பானிய மொழி ஒலியன்களை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.

எசுப்பானிய மொழி ஒலியன்கள்
ஈரிதழ் இதழ்-
பல்லுறழ்
பல்லுறழ் நுனிஅண்ணம் நுனிஅண்ணம் மேலண்ணம் தொண்டை
மூக்கொலி m n ɲ
Plosive p b t d k g
Fricative f θ s ʝ x
Affricate ʧ
Trill r
Tap ɾ
Lateral l ʎ
Approximant j
ஒலியன் முக்கிய இணையொலிகள் எழுத்துக்கூட்டல் Distribution and quality of allophones
/p/ ஈரிதழ் வல்லினம் "p" (pipa)
/b/ [b], ஈரிதழ் வெடிப்பொலி
[β̞], ஈரிதழ் வெடிப்பொலி அண்மியம்
"b" (burro) or "v" (vaca) [b] appears initially (in some accents) and after nasals (bomba, envidia), [β̞] elsewhere (nube, la bodega). In rapid speech, [β̞] can replace [b] in the initial position. After /l/, there is variation among speakers (el burro can be either [elˈburo] or [elˈβ̞uro]).
/t/ பல்லுறழ் வல்லினம் "t" (tomate) எசுப்பானிய மொழியில் [t̪] என்னும் ஒலி நுனிநாக்குத் துடிப்பான ஒலியாக இல்லாமல் சற்று மென்மையாக (தகரம் கலந்ததாக) இருக்கும்.
/d/ [d̪], பல்-அண்ண வெடிப்பொலி
[ð̞], பல்-அண்ண வெடிப்பொலி அண்மியம்
"d" (dedo) [d̪] முதலொலி , மூக்கொலிகளுக்குப் பிறகு (donde), /l/க்குப் பிறகு (maldito), [ð̞] பிற இடங்களில் (nido, la deuda). In most or all of Spain and the Caribbean it is usually omitted in the endings -ado and -ados, in Southern Spain also in the endings -ada and -adas (manadas: [maˈnaːs]), and less frequently in endings -ido and -idos. In Venezuela it is omitted in intervocalic position in a final syllable: peludo is pronounced as [peˈl̪uo]. In Latin America and Spain it is often omitted in final position: usted = [usˈt̪e] or [usˈt̪eð̞]. In Madrid this phoneme may undergo devoicing in final position, merging with /θ/.
/k/ தொண்டை ஒலி வல்லினம் "c" (casa), "qu" (queso), "k" (kiosko)
/g/ [g], தொண்டை வெடிப்பொலி
[ɰ], தொண்டை வெடிப்பொலி அண்மியம்
"g" (gato), "gu" (guerra). [g] appears after nasals (ganga), and, very frequently but not always, at the beginning (gato), where /ɰ/ is also used, though it is less common. [ɰ] occurs elsewhere (lago, la garganta). After /l/, there is variation among speakers (el gato can be either [el ˈgat̪o] or [el ˈɰat̪o]).
Fricatives
/s/ [s], voiceless alveolar fricative
[ɹ], alveolar approximant
[h], voiceless glottal fricative
"s" (sapo) In Northern/Central Spain and Antioquia, Colombia it is apicoalveolar; in Southern Spain and most of Latin America it is lamino-alveolar (often called "dental") [s].

[s] may become the approximant [ɹ] before a rhotic (israelita: [iɹraeˈlit̪a]). In many places it debuccalizes to [h] in final position (niños), or before another consonant (fósforo) - in other words, the change occurs in the coda position in a syllable. In the Colombian Caribe gemination may occur before /k/ or /f/ consonants (pescado: [peˈkːað̞o] or [peˈkːao], fósforo: [ˈfofːoro]). Before voiced consonants, /s/ is sometimes lightly voiced or a fully voiced [z] (desde).

பல நாடுகளில் எசுப்பானிய மொழி பேசுவோரின் எண்ணிக்கை

கீழ்க்காணும் அட்டவணையில் பல நாடுகளில் எசுப்பானிய மொழி பேசும் மக்கள்தொகை காட்டப்பட்டுள்ளது.

நாடு தாய்மொழியாகக் கொண்டவர்கள்[4]
1 மெக்சிக்கோ 109,711,000
2 எசுப்பானியா 45,054,000
3 கொலம்பியா 34,000,000
4 அர்ஜென்டினா 33,000,000
5 வெனிசுவேலா 26,480,000
6 பெரு 20,000,000
7 சிலி 13,800,000
8 கியூபா 10,000,000
9 ஈக்வடோர் 9,500,000
10 டொமினிக்கன் குடியரசு 6,886,000
11 குவாத்தமாலா 4,673,000
12 ஒண்டூராஸ் 5,600,000
13 பொலிவியா 3,483,700
14 எல் சால்வடோர் 5,900,000
15 நிக்கராகுவா 4,347,000
16 பராகுவே 186,880
17 கோஸ்ட்டா ரிக்கா 3,300,000
18 புவெர்ட்டோ ரிக்கோ 3,437,120 (1996)
19 உருகுவே 3,000,000
20 பனாமா 2,100,000

கீழ்க்காணும் அட்டவணையில் உலகின் பிற பகுதிகளில் வாழும் எசுப்பானிய மொழி பேசும் மக்கள்தொகையின் தோராய மதிப்பீடு தரப்பட்டுள்ளது.

வார்ப்புரு:NPOV-section

நாடு பேசுவோர்
1 அமெரிக்கா 32,200,000(b)
2 கனடா 245,000[5]
3 பெலீசு 206,404[6]
4 மொராக்கோ 57,132 [மேற்கோள் தேவை](c)
5 கிப்ரால்ட்டர் 24,000 [மேற்கோள் தேவை](d)
(b) Only includes people of 5 years of age and older. Also, people who use the language at work or other settings but not at home are not included[7]
(c) Although part of the Spanish Empire, Arabic language and Arabic culture remains the dominant cultural production in Western Sahara. Spanish is only spoken by expatriate Spanish speakers and people of Spanish ancestry.
(d) The majority of Gibraltarians are bilingual speaking English as well as Spanish due to Gibraltar's proximity to Spain. Despite both these languages being widely spoken by most (together with their creole, Llanito), English remains the only official language.

ஆங்கிலமும் எசுபானியமும்

ஆங்கிலத்தில் இன்று வழங்கும் பல சொற்கள் எசுப்பானிய மொழிவழி பெற்றாவையாகும். எடுத்துக்காட்டாக aligator (முதலை), cargo (ஏற்றுபொருள்), cork (தக்கை), ranch (வயல்/கள வீடு), mosquito (கொசு), tornado (குழல் காற்று) முதலியவற்றைச் சுட்டலாம். அமெரிக்காவில் பல இடப்பெயர்களும் எசுப்பானிய மொழியில் இருந்து பெற்றவை. லாஸ் ஏஞ்சலஸ் (Los Angles), சான் ஃவிரான்சிஸ்க்கோ (San Francisco), ஃவுளோரிடா (Florida), நெவாடா (Neveda) முதலியவற்றைச் சுட்டலாம்.

மேலும் காண்க


குறிப்புகள்

  1. [1].
  2. Universidad de México
  3. Instituto Cervantes ("El Mundo" news)
  4. According to Ethnologue. வேறு குறிப்பு இல்லையென்றால், கொடுக்கப்பட்ட மக்கள்தொகை 1995 ஆண்டுக்கான கணக்கீட்டின் அடிப்படையில் உள்ளதாகும்.
  5. "Population by mother tongue". Statistics Canada.
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Belizecen என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; US Spanish என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுப்பானியம்&oldid=1237484" இலிருந்து மீள்விக்கப்பட்டது