திருவண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°08′N 79°04′E / 12.13°N 79.07°E / 12.13; 79.07
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:തിരുവണ്ണാമലൈ; மேலோட்டமான மாற்றங்கள்
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:蒂鲁瓦纳马莱
வரிசை 120: வரிசை 120:
[[vi:Tiruvannamalai]]
[[vi:Tiruvannamalai]]
[[war:Tiruvannamalai]]
[[war:Tiruvannamalai]]
[[zh:蒂鲁瓦纳马莱]]

16:03, 13 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

திருவண்ணாமலை
—  சிறப்பு நிலை நகராட்சி  —
திருவண்ணாமலை
இருப்பிடம்: திருவண்ணாமலை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°08′N 79°04′E / 12.13°N 79.07°E / 12.13; 79.07
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ், இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர் என்.பாலச்சந்தர்
ஆணையர் ஆர். சேகர்
மக்களவைத் தொகுதி திருவண்ணாமலை
மக்களவை உறுப்பினர்

சி. என். அண்ணாத்துரை

மக்கள் தொகை

அடர்த்தி

3,80,301 (2001)

27,881/km2 (72,211/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

13.64 சதுர கிலோமீட்டர்கள் (5.27 sq mi)

171 மீட்டர்கள் (561 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/thiruvannamalai


திருவண்ணாமலை (ஆங்கிலம்:Tiruvannamalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலைநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.

திருவண்ணாமலைத் திருத்தலம்

கோவில்நகரம்

சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். மற்றபிற தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தையும், காளகஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.

திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் (November) அல்லது டிசம்பர் (December) மாதம் வரும்.

இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று, காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்.[4] இந்த தீபமானது தொடர்ந்த்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.

இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.

இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி இறக்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°13′N 79°04′E / 12.22°N 79.07°E / 12.22; 79.07 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,80,301 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். திருவண்ணாமலை மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவண்ணாமலை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அருணாசலேஸ்வரர் மலையிலிருந்து அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத் தோற்றம்

சிறப்புகள் அருணாச்சலேச்சுவரர் ஆலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. இறைவன் பெயர் - அருணாசலேச்சுவரர் (அண்ணாமலையார்) இறைவி பெயர் - அபீதகுஜாம்பாள் (உண்ணாமுலை அம்மன்) புகழ் பெற்ற விழா - திருகார்த்திகை தீபம் விழா காலம் - கார்த்திகை மாதம்

போக்குவரத்து

− திருவண்ணாமலை தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கபட்டுள்ளது.

− −

தொடருந்துப் போக்குவரத்து

− − திருவண்ணாமலையில் நான்கு ரயில் நிலையங்கள் உள்ளன.

− − தென்னக இரயில்வேயின் பழய மெயின் லைன் எனப்படும் சித்தூர்,காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருகோவிலூர்,கடலூர்ரயில் பாதையில் திருவண்ணாமலை உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை சந்திப்பில் இருந்து வழியாக சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது.

− −

சாலைப் போக்குவரத்து

− − திருவண்ணாமலை நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். புதுச்சேரி , சிதம்பரம், மற்றும் விழுப்புரம் போன்ற திருவண்ணாமலை நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, போன்ற முக்கிய நகரங்கள செல்ல அடிக்கடி பேருந்துகள் சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. திருவண்ணாமலை இருந்து மூன்று நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை

  • தேசிய நெடுஞ்சாலை 234 (அ) எஸ்.எச்.9 - கடலூர் சித்தூர் சாலை (கடலூர் - நெல்லிக்குப்பம் - பண்ருட்டி - திருகோவிலூர் - திருவண்ணாமலை - வேலூர் - காட்பாடி- சித்தூர்)

  • தேசிய நெடுஞ்சாலை 66 - பெங்களூரு - ஓசூர் - கிருட்டிணகிரி - ஊத்தங்கரை - செங்கம் - திருவண்ணாமலை - கீழ்பெண்ணாத்தூர் -செஞ்சி - திண்டிவனம் - பாண்டிச்சேரி.

  • தேசிய நெடுஞ்சாலை 269 - திருவண்ணாமலை - சங்கராபுரம் -

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. The Hindu: திருவண்ணாமலையில் 10 இலட்சம் பக்தர்கள் தீப தரிசனம்
  5. "Tiruvannamalai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவண்ணாமலை&oldid=1233154" இலிருந்து மீள்விக்கப்பட்டது