அசோக் குமார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 122.174.85.170 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1216039 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 43: வரிசை 43:
==இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்==
==இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்==
இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. [[பாபநாசம் சிவன்]] பாடல்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன:
இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. [[பாபநாசம் சிவன்]] பாடல்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன:
* ''பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்'' (பாகவதர்)
* ''பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்'' (தியாகராஜ பாகவதர்)
* ''உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ'' (ராகம்: [[பைரவி]], தாளம்: [[ஆதி தாளம்|ஆதி]], பாகவதர்)
* ''உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ'' (ராகம்: [[பைரவி]], தாளம்: [[ஆதி தாளம்|ஆதி]], தியாகராஜ பாகவதர்)
* ''சத்வகுண போதன்'' (ராகம்: [[ஜோன்புரி]], தாளம்: ஆதி, பாகவதர்)
* ''சத்வகுண போதன்'' (ராகம்: [[ஜோன்புரி]], தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
* ''மனமேநீ ஈசன் நாமத்தை'' (ராகம்: [[குந்தவராளி]], தாளம்: ஆதி, பாகவதர்)
* ''மனமேநீ ஈசன் நாமத்தை'' (ராகம்: [[குந்தவராளி]], தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
* ''தியானமே எனது மனது நிறைந்தது'' (ராகம்: காப்பி, தாள: ஆதி, தியாகராஜ பாகவதர்)


==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==

12:03, 21 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

அசோக்குமார்
படிமம்:Asokkumar.jpg
இயக்கம்ராஜா சந்திரசேகர்
கதைஇளங்கோவன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
வி. நாகையா
ரங்கசாமி ஐயங்கார்
என். எஸ். கிருஷ்ணன்
கே. மகாதேவய்யர்
எம். ஜி. இராமச்சந்திரன்
கே. வி. வெங்கட்ராமய்யர்
முறாலி
பி. கண்ணாம்பா
டி. வி. குமுதினி
டி. ஏ. மதுரம்
வெளியீடு1941
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அசோக்குமார் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி. இராமச்சந்திரன், பி. கண்ணாம்பா, டி. ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். நியூடோன் ஸ்டுடியோவில் மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டது.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

யுத்தகளம் சென்று வெற்றி விஜயனாக வந்த தனது மகன் குணாளனை (தியாகராஜ பாகவதர்), தன் இளையாளான திஷ்யரக்ஷிதைக்கு (கண்ணாம்பா) அறிமுகப்படுத்தினார் அசோகர் (வி. நாகையா). அப்பால் அவனுக்கு சீக்கிரமே யுவராஜ பட்டாபிஷேகம் செய்யவும் நினைத்தார்.

இந்த மகிழ்ச்சிச் செய்தியை தன் காதலி காஞ்சனமாலாவிடம் (டி. வி. குமுதினி) தெரிவித்தான் குணாளன். அதை ஒட்டுக்கேட்ட திஷ்யரக்ஷதையின் தோழி பிரமீளா (டி. ஏ. மதுரம்) ஆத்திரங் கொண்டு யுவராஜ்ய பட்டாபிஷேகம் நடக்காதவாறு செய்துவிடவேண்டுமென முயற்சித்தாள். ஆயினும் யுவராஜரது பட்டாபிஷேகம் நடக்காது நிறகவில்லை. அந்த பட்டாபிஷேகத்தின் போது, திஷ்யரக்ஷதை குணாளன் நெற்றியில் திலகமிட்டாள். அவனது ஸ்பரிசம் பட்டதும் தன்னையுமறியாமல் அவன்மீது காதல் கொண்டாள். அன்றிரவு காஞ்சனமாலையும் குணாளனும் உல்லாசமாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவர்களது காதல் பாட்டு திஷ்யரக்ஷதையின் காமத்தீயை நன்றாகக் கிளறிவிட்டுவிட்டது.

மறுநாள் தன் தந்தையின் விருப்பப்படி குணாளன் திஷ்யரக்ஷதையின் முன் பாடினான். அவன் பாடிக்கொண்டிருக்கும் போதே, அசோகர் மந்திரியின் அழைப்பிற்கிணங்க, வேலையாக வெளியே சென்றார். இதுதான் சமயம் என்று குணாளனைத் தன் இச்சைக்கு இசையத் தூண்டினாள் இளையராணி. குணாளன் மறுத்தான். இளையராணி வெகுண்டாள். அசோகர் வந்தார். குணாளன் மீது வீண்பழிசுமத்தினாள் திஷ்யரக்ஷதை.

குணாளன் தேசப்ரஷ்டனானான். கர்ப்பவதியான காஞ்சனமாலாவையும் வெளியில் துரத்தினாள். குணாளனின் இரு கண்களையும் பிடுங்கச் செய்து வெளியில் துரத்தினாள். கண்ணற்ற குணாளனும், திக்கற்ற காஞ்சனமாலையும் ஒரு கிராமத்தில் சந்தித்து அங்கு கொஞ்ச நாள் தங்க, காஞ்சனமாலைக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அங்கிருந்து குழந்தையுடன் ஊரூராக பிச்சை யெடுத்துப் போய்க் கொண்டிருக்க, திடீரென்று குழந்தை இறந்து விடுகின்றது.

இதற்கிடையே மகனின் பிரிவாற்றாமையினால் மனம் நொந்து தேக அசௌக்கியமடைந்து, அரச வைத்தியர் சொற்படி, ஸ்வர்ணகிரியில் திஷ்யரக்ஷதையுடன் வந்திருந்த அசோகர், பாட்டுப்பாடி பிச்சையெடுத்துத் திரிந்த குணாளனின் குரலைக் கேட்டு, அவர்களை வரவழைத்து உணமை அறிந்தார். திஷ்யரக்ஷதை விஷமருந்தி மாண்டாள்.

பௌத்தபிக்கு உபகுப்தாச்சாரியாரின் (கே. மகாதேவய்யர்) உதவியால் பகவான் புத்தரின் சந்நிதானத்தில் குணாளனின் இழந்த கண்கள் இரண்டையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்

இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் பின்வரும் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றிருந்தன:

  • பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர் (தியாகராஜ பாகவதர்)
  • உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ (ராகம்: பைரவி, தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
  • சத்வகுண போதன் (ராகம்: ஜோன்புரி, தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
  • மனமேநீ ஈசன் நாமத்தை (ராகம்: குந்தவராளி, தாளம்: ஆதி, தியாகராஜ பாகவதர்)
  • தியானமே எனது மனது நிறைந்தது (ராகம்: காப்பி, தாள: ஆதி, தியாகராஜ பாகவதர்)

வெளியிணைப்புகள்