தொடர்வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: gn:Mba'yjua
சி r2.7.2) (தானியங்கி அழிப்பு: cr:Ishkuteutapan
வரிசை 64: வரிசை 64:
[[ca:Tren]]
[[ca:Tren]]
[[chy:Ma'aataemeo'o]]
[[chy:Ma'aataemeo'o]]
[[cr:Ishkuteutapan]]
[[cs:Vlak]]
[[cs:Vlak]]
[[cy:Trên]]
[[cy:Trên]]

15:36, 16 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

மேற்கு ஆஸ்திரேலிய மின் தொடர்வண்டி ஒன்று

தொடர்வண்டி அல்லது தொடருந்து (புகைவண்டி, இரயில், இலங்கை வழக்கு- புகையிரதம், கோச்சி) என்பது இரும்புப் பாதைகள் என்று சொல்லப்படும் தண்டவாளங்களின் வழியாக ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு போக்குவரத்து வண்டியாகும். இதற்கு பயன்படும் தண்டவாளங்கள் இரண்டு உருக்கினாலான தடங்களாகவோ, அல்லது புதுவரவான ஒற்றைத் தண்டவாளமாகவோ, அல்லது காந்தத் தண்டவாளமாகவோ இருக்கலாம்.

தொடர்வண்டி முன்னர் செல்வதற்கான உந்து சக்தியானது ஒரு தனியான வண்டி மூலமோ அல்லது பல மோட்டார்கள் மூலமோ அளிக்கப்படுகிறது. தொடர்வண்டி அறிமுகமான கால கட்டத்தில் குதிரைகள் மூலமும் அதன் பின்னர் பல வருடங்களுக்கு நீராவி மூலமும் அதன் பின்னர் தற்பொழுது டீசல் அல்லது மின் ஆற்றல் மூலமும் உந்து சக்தி அளிக்கப்படுகிறது.

பழங்காலத்தில் குதிரைகள் இழுத்துச் செல்லும் தண்டவாளத்தில் ஓடும் வண்டி

தொடர்வண்டிகளின் வகைகள்

பயன்பாட்டிற்கு ஏற்ப பலவகையான புகைவண்டிகள் புழக்கத்தில் உள்ளன. பயணியர் தொடர் வண்டிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் சரக்குத் தொடர்வண்டிகள் நிலக்கரி, பெட்ரோல், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படிகின்றன. இன்னும் சில இடங்களில் பயணிகள், சரக்கு இரண்டும் ஒரே தொடர் வண்டியில் கொண்டு செல்லப்படுகின்றன. தண்டவாளங்களை மராமத்து செய்வதற்காக சிறப்பு இரயில்களும் பயன்பாட்டில் உள்ளன.

உந்து ஆற்றல்

தொடர்வண்டி பயன்பாட்டிற்கு வந்த தொடக்க காலத்தில் குதிரைகளைக் கொண்டோ அல்லது புவியீர்ப்பு விசையினாலோ நகர்த்திச் செல்லப்பட்டன. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவிப் பொறி பயன்படுத்தப் பட்டது. 1920களில் இருந்து நீராவி வண்டிகளின் பயன்பாடு டீசல் அல்லது மின் ஆற்றலைப் பயன்படுத்தும் வண்டிகளின் அறுமுகத்தால் குறைந்து வந்தது. தற்காலத்தில் ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் நீராவி வண்டிகள் வழக்கொழிக்கப் பட்டாலும் சில நாடுகளில் குறிப்பாக சீனாவில் பயன்பாட்டில் உள்ளது. எனினும் இவையும் சிறுது சிறிதாக நிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல நாடுகளில் வரலாற்றுச் சின்னமாக இவை பயன்படித்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் நீலகிரி மலை இரயில், டார்ஜிலிங் மலை இரயில் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.

பயணியர் தொடர்வண்டி

டிஜிவி (TGV) மிகுவிரைவு தொடர்வண்டி பாரிசில் இருந்து புறப்படும் காட்சி

பயணியர் தொடர்வண்டி என்பது பயணியர் பெட்டிகளைக் கொண்டிருக்கும். இவை பயணிகளை ஒரு இரயில் நிலையத்தில் இருந்து மற்றோர் நிலையத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நிலையங்களுக்கு இடையேயான தொலைவு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை இருக்கலாம். பயணநேரமும் நிமிடக்கணக்கில் இருந்து நாள்க்கணக்கு வைர மாறுபடும். இவற்றுள் பலவகைகள் உள்ளன.

  • நெடுந்தொலைவு வண்டிகள் - நாட்டின் இருவேறு பகுதிகளுக்கு இடையே ஓடுகின்றன. சில இரு வேறு நாடுகளையும் இணைக்குன்றன.
  • அதுவிரைவு வண்டிகள் - இவை பகல் நேரங்களில் பெரும்பாலும் இயக்கப்படிகுன்றன. இவை பொதுவாக மக்கள் தொகை மிகந்து பெருநகரங்களை இணைக்கன்றன. பிரான்சில் உள்ள டிஜிவி (TGV) என்னும் மிகுவிரைவு தொடர்வண்டி, ஏப்ரல் 3, 2007 அன்று, மணிக்கு 574.8 கிலோ.மீ சராசரி விரைவில் ஓடி, உலகில் ஒரு புதிய அரிசெயல் நிகழ்த்தியுள்ளது[1]
  • நகரிடை வண்டிகள் - இடையில் நில்லாமல் குறிப்பிட்ட இரு நகரங்களை இணைக்குன்றன.
  • பயணியர் இரயில்கள் - நகரங்களுக்கு உள்ளே மாணவர்கள், பணியாளர்கள் போன்ற மக்குளின் அன்றாடப் போக்குவரத்துக்கான வண்டிகள் ஆகும்.

சரக்குத் தொடர்வண்டி

கொங்கண் இரயில்வேயில் இரயில் மீது சரக்குந்துகள்

சரக்குத் தொடர்வண்டிகள் சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்கின்றன. திட, நீர்மப் பொருட்களை எடுத்துச் செல்ல வெவ்வேறு பெட்டிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து தொடர்வண்டிகள் மூலமே நடைபெறுகிறது. சாலையை விட தொடர்வண்டியில் பொருட்களை எடுத்துச் செல்வது பயனுறுதிறன் மிக்கதாகும்.

சில நாடுகளில் சரக்குள்ள சரக்குந்துகளே நேரடியாக தொடர்வண்டியின் மீது வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சரக்குகளே ஏற்றி இறக்கும் நேரம் மிச்சப்படுத்தப் படுகிறது. இந்தியாவிலும் கொங்கண் இரயில்வேயில் இத்தகைய நடைமுறை உள்ளது.[2]

Album


மேற்கோள்

  1. http://www.bloomberg.com/apps/news?pid=20601085&sid=aW23Aw20niIo&refer=europe
  2. http://www.hinduonnet.com/2004/06/12/stories/2004061211920300.htm

.

மேலும் பார்க்க

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்வண்டி&oldid=1213087" இலிருந்து மீள்விக்கப்பட்டது