சேரமான் பெருமாள் தொன்மக்கதைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4: வரிசை 4:


==சேரநாடு==
==சேரநாடு==
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான [[சேரர்|சேர]] வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய [[கேரளம்|கேரள]] மாநிலமும் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அராபியர்களுடன் வியாபார, கப்பல் தொடர்பைக் கொண்டிருந்தது. பல்வேறு [[கிறித்தவம்|கிறித்துவ]] மதத்தினரும் [[யூதம்|யூத மதத்தினரும்]] அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான [[சேரர்|சேர]] வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய [[கேரளம்|கேரள]] மாநிலமும் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தென் பகுதியும் இருந்தது. அப்போது [[சேர நாடு]] அராபியர்களுடன் வியாபார, கப்பல் தொடர்பைக் கொண்டிருந்தது. பல்வேறு [[கிறித்தவம்|கிறித்துவ]] மதத்தினரும் [[யூதம்|யூத மதத்தினரும்]] அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.


== நிலவை பிரிக்கும் அதிசயம் ==
== நிலவை பிரிக்கும் அதிசயம் ==

01:57, 29 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

சேரமான் பெருமாள் என்ற பெயரில் வாழ்ந்த நாயனார் பற்றி கழறிற்றறிவார் நாயனார் கட்டுரையைப் பார்க்க.

படிமம்:Cheraman Juma Masjid.gif
சேரமான் பெருமாள் ஜுமா மசூதி - இந்தியாவின் முதல் மசூதி.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜுமா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

சேரநாடு

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அராபியர்களுடன் வியாபார, கப்பல் தொடர்பைக் கொண்டிருந்தது. பல்வேறு கிறித்துவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்

மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர் பலரிடமும் விசாரித்தார். அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அராபியர் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர். இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அந்த அராபியர்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அராபியர் கூட்டம் தாங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாளை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இசுலாத்தை ஏற்றல்

தனது அரசை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாழ்ந்து வருகின்றனர்). அதன் பிறகு சேரமான் பெருமாள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றார். அங்கு முகம்மது நபியை (ஸல்) நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அங்கேயே இசுலாம் மதத்தை ஏற்றார். மேலும் முகம்மது நபியால் (ஸல்) தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின் முகம்மது நபிக்கு (ஸல்) தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார். இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு கலன் நிறைய ஊறுகாய்களை கொண்டு வந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது."

இறப்பு

சேரமான் பெருமாள் அரேபியாவிலுள்ள ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

சேரமான் பெருமாள் அடக்கத்தலம்

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை

மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தார். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இசுலாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் கட்டினார்.

சில தகவல்கள்

  • சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.
  • சேரமான் பெருமாள் ஜுமா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜுமா மசூதி மதினாவில் உள்ளது)
  • சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
  • சேரமான் பெருமாள் மற்றும் மாலிக் பின் தீனார் (ரலி) ஆகிய இருவரது சமாதியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது.

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

  • a b William Logan, Malabar Manual, Asian Educational Services, 1996 ISBN 8120604466, 9788120604469
  • saheehain al mustadrak reported by Al Imam Al Hafiz Abi Abdillah AL HAKIM -vol 4 chap 33 kitabul ath’ama page 241