அந்திரேயா (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: diq:Andreas
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: sl:Sveti Andrej
வரிசை 89: வரிசை 89:
[[simple:Saint Andrew]]
[[simple:Saint Andrew]]
[[sk:Ondrej (apoštol)]]
[[sk:Ondrej (apoštol)]]
[[sl:Sveti Andrej (apostol)]]
[[sl:Sveti Andrej]]
[[sq:Shna Ndreu]]
[[sq:Shna Ndreu]]
[[sr:Андрија Првозвани]]
[[sr:Андрија Првозвани]]

23:04, 22 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

திருத்தூதர்
புனித அந்திரேயா
புனித பெலவேந்திரர்
Saint Andrew (Apostle)
புனித அந்திரேயாவின் அழைப்பு, ஹரோல்ட் காப்பிங்
திருத்தூதர், முதல் அழைப்பு பெற்றவர், கிறித்துவை அறிமுகம் செய்பவர்
பிறப்பு~ கிபி 1 (முற்பகுதி)
பெத்சாயிதா
இறப்பு~ கிபி 1 (பிற்பகுதி)
பத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டார்
ஏற்கும் சபை/சமயங்கள்எல்லா கிறித்தவப் பிரிவுகளும்
முக்கிய திருத்தலங்கள்புனித அந்திரேயா ஆலயம், பத்ராஸ்
திருவிழாநவம்பர் 30
சித்தரிக்கப்படும் வகை'X' வடிவ சிலுவை, ஏட்டுச்சுறுள்
பாதுகாவல்இசுக்காட்லாந்து, உக்ரைன், உருசியா, சிசிலி, கிரேக்க நாடு, பிலிப்பைன்ஸ், உருமேனியா, மீனவர், கடற்படையினர், தரை படையினர், கையிறு நெய்பவர், பாடகர்

புனித அந்திரேயா (அ) புனித பெலவேந்திரர் (Saint Andrew, கிரேக்கம்: Ἀνδρέας, அந்திரேயாஸ்; 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்), இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். இவர் புனித பேதுருவின் சகோதரர். கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர், மீன் பிடித்து வந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்தார். பின்னர் இயேசுவோடு சேர்ந்தார். இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். (யோவான் 1:29-39). அடுத்த நாள் தன் சகோதரன் பேதுருவையும் அழைத்து வந்தார். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார். இயேசு அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே. கோவிலின் அழிவை முன்னறிவித்த போது 'அழிவு எப்போது வரும்?' என கேட்டவர் இவரே.

தூய ஆவியின் வருகைக்குப் பிறகு கப்பதோசியா, கலாசியா, மாசிதோனியா, பைசண்டைன் பேரரசு மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார்.

புனித அந்திரேயா சிலுவையில் அறையப்படல்

பத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். அச்சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றார். புனித அந்திரேயா ஆலயம், பத்ராசில் இவரது புனித பண்டம் வைக்கப்பட்டுள்ளது.

புனித அந்திரேயா ஆலயம், பத்ராஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்திரேயா_(திருத்தூதர்)&oldid=1194877" இலிருந்து மீள்விக்கப்பட்டது