பேச்சு:பெயின்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கருத்து
(வேறுபாடு ஏதுமில்லை)

15:43, 21 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

தமிழில் பெயிந்து, பெயிண்டு, பெயின்று என்றுதான் எழுத வகை உண்டு (எல்லா மொழிகளிலும் இப்படியான சிக்கல்கள், அல்லது முறைமைகள், இயல்புகள் மெய்யொலிக்கூட்ட விதிகள் உண்டு). பெயின்ட் என்று -ன்ட்- ஏற்றுக்கொள்லலாம் எனில் அது புது விதியே (தமிழில் கூறப்பட்ட விதியை மீறிய முறை). இதனால் வரும் சிக்கல் என்னவென்றால் மிக நுட்பமான ஒலிப்பு முறை சீர்கெடும். மாற்றாக பெயின்.ட்டு என்று இடையே புள்ளிவைத்து எழுதலாம். இப்படி சொல்லிடையே (பிறமொழிச்சொல்லிடையே புள்ளி வைத்து) எழுதும் வழக்கம் உரோமன் எழுத்திலும் உண்டு. இதனை ஏற்க வேண்டும் என்றோ ஏற்கத்தான் வேண்டும் என்றோ நான் கூற வரவில்லை (என் பரிந்துரைப்பின் நோக்கம் இதனைக் கருத வேண்டும் என்பதே- இதுவும் புதுமை. இப்படி விக்கியில் புதுமை செய்தல் கூடாது. விக்கி அதற்கான இடம் கிடையாது, என்பதை நன்கு அறிவேன். ஆனால் பெயின்ட் என்பதும் புதுமை தமிழ் விதிகளுக்கு அப்பாற்பட்டது. பலர் தவறாக எழுதினால் ஏற்கலாம் என்று கூறுவதும் பொருந்தாது.) நாம் நான்கு நன்கு என்ற சொற்களை naanku, nanku என்று வல்லின ககரம் கொண்டு ஒலிக்க இது வழிவகுக்கும், இதனால் குழப்பம் வரும். எனவேதான் பெயின்.ட்டு என்று பரிந்துரைக்கின்றேன். அல்லது பெயின்ட்*டு என்றும் மாற்றிக்காட்டலாம். அண்மையில் Naki என்பதை ஒரு பயனர் (பார்வதி என நினைக்கின்றேன்) நாகி என்று எழுத்துப் பெயர்த்திருந்தார். நாகி என்பது naagi என்றுதான் ஒலிக்கும் தமிழில் (கி என்னும் ஒலிப்பில் சிலர் சிறிது காற்ரொலி கலப்பர் ஆனால் வல்லின ககரம் ஆகாது). Naki என்பதைத் தமிழில் எழுதப் நாக்கி என்றுதான் என்றுதான் எழுதுதல் வேண்டும். நாகி என்று எழுதி Nagi என்று படித்தால் பிழை இல்லை. ஒரே சீரான அமைப்பைக் கொள்வது தேவை. penta என்பதைத் தமிழில் பென்.டா என்று எழுதலாம். --99.237.20.227 15:43, 21 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெயின்ட்&oldid=1194091" இலிருந்து மீள்விக்கப்பட்டது