எவரெசுட்டு சிகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ga:Teomólungma (Sliabh Everest)
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: ga:Sliabh Everest (Teomólungma)
வரிசை 77: வரிசை 77:
[[fr:Everest]]
[[fr:Everest]]
[[fy:Mount Everest]]
[[fy:Mount Everest]]
[[ga:Teomólungma (Sliabh Everest)]]
[[ga:Sliabh Everest (Teomólungma)]]
[[gan:珠穆朗瑪峰]]
[[gan:珠穆朗瑪峰]]
[[gd:Beinn Everest]]
[[gd:Beinn Everest]]

00:29, 17 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

எவரெசுட்டு சிகரம்
உயர்ந்த இடம்
உயரம்8,848.86 m (29,031.7 அடி) Edit on Wikidata
இடவியல் புடைப்பு8,848.86 m (29,031.7 அடி) Edit on Wikidata
இடவியல் தனிமை40,008 km (24,860 mi) Edit on Wikidata
பட்டியல்கள்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Everest
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


எவரெசுட்டு சிகரம் (அல்லது எவரெஸ்ட் சிகரம்) உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும். இது நேபாள-திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது. இக்கொடுமுடியை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதன் முதலாக எடுமண்டு இல்லரி என்னும் நியூசிலாந்துக்காரரும் டென்சிங் நார்கே என்னும் நேப்பாளத்து செர்ப்பாக்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே ஒப்பரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கோடுதனையே (கோடு = மலை உச்சி) மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணிப் உலகம் பெருமைப்பட்டது. மலையேற்றத்தில் மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே எவரெசுட்டு உச்சியை எட்ட முடியும். என்றாலும் அண்மையில் இரு கால்களும் இல்லாதவரும், கண் பார்வை அற்றவர்களும் இக்கொடுமுடியை எட்டிப் புகழ் படைத்துள்ளனர்[மேற்கோள் தேவை]. எவரெசுட்டுக்கு பல பழம் பெயர்கள் வழக்கில் உள்ளன தேவ'கிரி, தேவ'துர்கா என்று வடமொழியிலும், (அண்மைக்காலத்தில், சுமார் 1960ல் இருந்து சாகர்மாதா என்றும்), திபேத்திய மொழியில் கோமோலுங்குமா (= அண்டங்களின் தாய்) என்றும் அழைக்கபடுகின்றது. இம்மலை ஆண்டொன்றுக்கு 4 மில்லி மீட்டர் உயரம் கூடுவதாக அறிஞர்கள் கண்டுள்ளனர்[மேற்கோள் தேவை]. இப்பெருமலைத்தொடர் எவ்வாறு உருவாகியது என்பது பெரு வியப்பான செய்தி இமயமலை கட்டுரையைப் பார்க்கவும்.

உயர அளவீடும் பெயர் சூட்டும்

இராதானாத் சிக்தார் (1813-1870) என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் இதன் உயரம் சுமார் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ தொலைவில் இருந்து கொண்டே தியோடலைட்டு என்னும் கருவியினால் முக்கோண முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார். இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை கொடுமுடி-15 என்றுமட்டும்தான் குறித்து வைத்திருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந்த சியார்ச் எவரெசுட்டு (George Everest) என்பாரின் பெயரை இக்கொடுமுடிக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாகு (Andrew Waugh)என்பார் சூட்டினார். இச்சிகரம் கடல் பரப்பின் அடிமட்டத்திலிருந்து 28844 அடி உயரமுடையது.

எவரெசுட்டு மலை

உயரம் பற்றிய கருத்துவேறுபாடு

நேபாளம் இதன் உயரத்தை 8848மீ என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் சீனா இதன் உயரம் 8844மீ என்கிறது. சீனா எவரெசுட்டின் பாறையை உயரத்தை அளக்க அளவுகோலாக கொள்ளவேண்டும் என்கிறது. நேபாளம் பனியையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறது, உலகின் மற்ற கொடுமுடிகளின் உயரம் அதன் உச்சியில் உள்ள பனியை கணக்கில் கொண்டுதான் அளக்கப்படுகிறது என்று நேபாளம் கூறுகிறது. உயரம் தொடர்பாக நேபாளத்திற்கும் சீனாவிற்கும் நடந்த பேச்சில் இறுதியான உடன்பாடு எட்டப்படவில்லை. 1999 மே மாதத்தில் அமெரிக்க குழு புவியிடங்காட்டி கொண்டு எவரெசுட்டின் உயரம் 8850மீ என்று கணித்தது, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை 8850மீ என்பதையே பயன்படுத்துகிறது. இதை நேபாளம் ஏற்கவில்லை. [1]

மேற்கோள்கள்

  1. எவரைசுட்டு உயரத்தை அளந்து அது குறித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்க நேபாளம் முயற்சி

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=எவரெசுட்டு_சிகரம்&oldid=1190891" இலிருந்து மீள்விக்கப்பட்டது