கூரத்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி வி. ப. மூலம் பகுப்பு:வைணவ சமயம் சேர்க்கப்பட்டது
வரிசை 14: வரிசை 14:
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
* [http://www.amanushyam.com/2011/07/blog-post_1634.html இணையச் செய்தி]
* [http://www.amanushyam.com/2011/07/blog-post_1634.html இணையச் செய்தி]

[[பகுப்பு:வைணவ சமயம்]]

23:02, 11 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

கூரத்தாழ்வார் இராமானுசரின் முதன்மை மாணாக்கர். பட்டர்பெருமானின் தந்தை. காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவரது இயற்புயர் ஸ்ரீவத்சாங்கர். இவரது மனைவியின் பெயர் ஆண்டாள். இவர் தன்னிடமிருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் தானமாக வழங்கியவர். பின் குருவைத் தேடிச் சென்று இராமானுசரைக் குருவாகப் பெற்றார். இவரது மாணாக்கர் திருவரங்கத்தமுதனார்

திருமங்கையாழ்வார் பாடல்களில் 'பெரிய திருமொழி'க்கு இவர் தனியன் பாடிய புலவர்.

இவரைப் பற்றிய கதை

இராமானுசர் திருவரங்கத்தில் இருந்தபோது தன் மனைவியை அழைத்துக்கொண்டு திருவரங்கம் சென்றார். வழியில் திருடர் பற்றிய பேச்சு வந்தது. "மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம். ஏதாவது வைத்திருக்கிறாயா" என்றார், மனைவிடம். மனைவி வெள்ளித்தட்டு ஒன்று செலவுக்காக வைத்திருப்பதாகச் சொல்லவே அதனை வாங்கி விட்டெறிந்துவிட்டுச் சென்றாராம்.
திருவரங்கத்தில் உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தனர். மனைவி ஆண்டாள் இறைவன் அரங்கநாதனிடம் வேண்டினாள். அரங்கநாதன் வழிப்போக்கன் உருவில் வந்து உணவு வழங்கினார்.
'நாராயணனன் ஒருவனே பரம்பொருள்' என்னும் வாதத்தை அக்கால உறையூர்ச் சோழன் ஏற்றுக்கொள்ளவில்லை. இராமானுசரின் கண்ணைத் தோண்ட ஆடையிட்டான். கூரத்தாழ்வார் தம் குவைப்போல் வேடம் தரித்துக்கொண்டு அரசனிடம் சென்று அவர் கூறியதையே கூறினார். அதற்காக அரசன் ஆணையால் கூரத்தாழ்வாரின் கண்கள் தோண்டப்பட்டன. 12 ஆண்டுகள் குருடராகத் திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்ந்துவந்தார்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் காஞ்சியில் கூரத்தாழ்வாரும், இராமானுசரும் சந்தித்தனர். தனக்காக இழந்த கண்ணை தெரியச் செய்யும்படி இராமானுசர் வரதராசப்பெருமாளிடம் வேண்டினார். இறைவன் அருளினார். அத்துடன் கூரத்தாழ்வாரைத் திருநாட்டுக்கு அழைத்துக்கொண்டார். இராமானுசர் வருந்தினார். கூரத்தாழ்வார் இராமானுசரை வரவேற்க முன்னரே திருநாடு செல்வதாக முகமன் கூறிச் சென்றார்.

கருவிநூல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூரத்தாழ்வார்&oldid=1187340" இலிருந்து மீள்விக்கப்பட்டது