நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: hi:इस्लाम के पैग़म्बर
வரிசை 59: வரிசை 59:
[[fr:Prophètes de l'islam]]
[[fr:Prophètes de l'islam]]
[[he:נביאי האסלאם]]
[[he:נביאי האסלאם]]
[[hi:इस्लाम के पैग़म्बर]]
[[hr:Proroci u islamu]]
[[hr:Proroci u islamu]]
[[hy:Մարգարեները մահմեդականությունում]]
[[hy:Մարգարեները մահմեդականությունում]]

20:39, 4 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

நபி என்பது அரபிச் சொல்லாகும். இசுலாமிய நம்பிக்கையின்படி முதல் மனிதராக ஆதம் நபி (சல்) அவர்களை இறைவன் படைத்தான். பின் அவர்களின் விலா எலும்பில் இருந்து ஃஅவ்வா என்பவரை படைத்தான். பின் இவர்களின் சந்ததிகள் இந்த உலகை நிரப்பினர். அந்த மக்கள் இறைவனை மறந்து அநீதியின் பக்கம் சாயும் பொழுது, அவர்களை நல்வழிப்படுத்த இறைவன் தனது தூதர்களை அனுப்பினான். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களையே நபி என்று இசுலாமியர் அழைகின்றனர். இப்ராஃகிம் (ஆபிரகாம்). மூசா (மோசசு), ஈசா (இயேசு) ஆகியோர் நபிகளில் சிலர். இசுலாமிர்களின் நபியாக போற்றப்படும் ஈசா நபியையே கிறித்தவ சமயத்தோர் இறைவனாக வணங்குகின்றனர். இதன் பிறகே முகம்மது நபி இறைவனால் அனுப்பப்பட்டார். அதில் முதல் நபி ஆதம் (சல்) அவர்களுக்கும் கடைசி நபி முகம்மது (சல்) அவர்களுக்கும் இடையில் பல நபிமார்கள் தோன்றியதாக இசுலாம் கூறுகிறது. அவர்களில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இறைச்செய்தியை மனிதர்களுக்கு அறிவிக்கும் தூதர்கள் என்பதைத்தவிர சாதாரண மனிதர்களேயாகும் ஆவார்கள் என்பது இசுலாமியரின் நம்பிக்கை ஆகும்.

திருக்குர் ஆனில் நபிமார்கள்

முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

  1. ஆதம் (அலை)
  2. இத்ரீஸ் (அலை)
  3. நூஹ் (அலை)
  4. ஹுது (அலை)
  5. சாலீஹ் (அலை)
  6. இப்ராஹீம் (அலை)
  7. இஸ்மாயீல் (அலை)
  8. இஸ்ஹாக் (அலை)
  9. லூத் (அலை)
  10. யாகூபு (அலை)
  11. யூசுப் (அலை)
  12. சுஹைபு (அலை)
  13. அய்யூப் (அலை)
  14. மூசா (அலை)
  15. ஹாரூன் (அலை)
  16. துல்கர்னைன் (அலை)
  17. தாவூது (அலை)
  18. சுலைமான் (அலை)
  19. இலியாஸ் (அலை)
  20. யஹ்யா (அலை)
  21. யூனுஸ் (அலை)
  22. ஜக்கரியா (அலை)
  23. அல் யச (அலை)
  24. ஈசா (அலை)
  25. முஹம்மத் (ஸல்)

ஸல்/அலை

நபிமார்களின் பெயர்களை செவியுறும்பொழுது "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று கூறுவார்கள். அதற்கு பொருள், இறைவன் அவருக்கு அருளைப்பொழிவானாக.

முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.

முகம்மது நபி அல்லாத ஏனைய பிற எல்லா நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நபி&oldid=1182405" இலிருந்து மீள்விக்கப்பட்டது