சார்லமேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ur:چارلیمان
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: an:Carlos Magno
வரிசை 13: வரிசை 13:
[[af:Karel die Grote]]
[[af:Karel die Grote]]
[[als:Karl der Große]]
[[als:Karl der Große]]
[[an:Carlemanyo]]
[[an:Carlos Magno]]
[[ang:Carl sē Micel Francena Cyning]]
[[ang:Carl sē Micel Francena Cyning]]
[[ar:شارلمان]]
[[ar:شارلمان]]

20:03, 13 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Charlemagne coin.JPG
KAROLVS IMP AVG என்ற பொறிப்புடன் கூடிய சார்லமேன் காலத்து நாணயம்

சார்லமேன் (Charlemagne - 742 – 28 ஜனவரி 814) பிராங்குகளின் அரசராவார். இவர் கிபி 768 முதல் 814ல் இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார். இவர் பிராங்கு அரசுகளை, மேற்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா ஆகியவற்றில் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பிராங்கியப் பேரரசு ஆக்கினார். இவரது ஆட்சிக் காலத்தில் இத்தாலியைக் கைப்பற்றிய இவர், கிபி 800 டிசம்பர் 25 ஆம் நாள் பேரரசர் அகஸ்டஸ் என்னும் பெயருடன், மூன்றாம் பாப்பரசர் லியோவினால் முடிசூட்டப்பட்டார். இவர் கான்ஸ்டன்டினோப்பிளில் அமைந்திருந்த பைசன்டைன் பேரரசருக்குப் போட்டியாக விளங்கினார். கத்தோலிக்கத் திருச்சபை ஊடாக கலை, மதம், பண்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட கரோலிங்கிய மறுமலர்ச்சிக்கும் இவரது ஆட்சி காரணமாக அமைந்தது. இவரது வெளிநாட்டுக் கைப்பற்றல்களும், உள்நாட்டில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களும், மேற்கு ஐரோப்பாவிற்கும், மத்திய காலத்துக்கும் ஒரு வரைவிலக்கணத்தைக் கொடுத்தன. பிரான்ஸ், ஜேர்மனி, புனித ரோமப் பேரரசு ஆகியவற்றின் அரசர்கள் பட்டியலில் இவர் முதலாம் சார்ல்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர், குட்டைப் பிப்பின் என அழைக்கப்பட்ட பிராங்குகளின் அரசனுக்கும், லாவோனின் பெட்ராடா என்னும் அவரது மனைவிக்கும் மகனாகப் பிறந்தார். தந்தைக்குப் பின் தனது உடன்பிறந்தானான முதலாம் கார்லோமன்னுடன் கூட்டாக ஆட்சி நடத்தி வந்தார். பின்னர் சார்லமேனுக்கும், கார்லோமனுக்கும் இடையில் போர் ஏற்படுமளவுக்குப் பிணக்கு ஏற்பட்டதாயினும், 771ல் கார்லோமன் இறந்துவிட்டதனால் போர் தவிர்க்கப்பட்டது. சார்லமேன் கத்தோலிக்கத் திருச்சபை குறித்துத் தனது தந்தையின் கொள்கைகளையே கடைப்பிடித்து வந்ததுடன் அதன் காவலனாகவும் இருந்தார். இதற்காக இத்தாலியில் ஆட்சியிலிருந்த லொம்பார்டுகளை ஆட்சியில் இருந்து அகற்றியதுடன், ஸ்பெயினில் இருந்து இவரது ஆட்சிக்குத் தொல்லை கொடுத்துவந்த சரசென்களுடனும் போராடினார். இப் போர்களில் ஒன்றிலேயே இவர் தனது வாழ்நாளின் பெரும் தோல்விகளுள் ஒன்றைச் சந்தித்தார். ரான்செஸ்வயஸ் சண்டை (Battle of Roncesvalles) என அழைக்கப்பட்ட இப் போர் ரோலண்டின் பாடலில் நினைவு கூரப்பட்டுள்ளது. இவர் கிழக்குப் பகுதிகளிலிருந்த மக்களுக்கு, சிறப்பாக சக்சன்களுக்கு எதிராகவும் படையெடுப்புக்களை மேற்கொண்டு, நீண்டகாலப் போருக்குப் பின் அவர்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டுவந்தார். கட்டாயப்படுத்திக் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றியதன் மூலம் அவர்களைத் தனது ஆட்சிக்குள் ஒன்றிணைத்தார்.

இன்று இவர் பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றின் முடியாட்சிகளின் தந்தையாக மட்டுமன்றி, ஐரோப்பாவின் தந்தையாகவும் கருதப்படுகிறார். ரோமர்களுக்குப் பின்னர் இவரது பேரரசே பெரும்பாலான மேற்கு ஐரோப்பியப் பகுதிகளை ஒன்றிணைத்தது. அத்துடன் கரோலிங்கன் மறுமலர்ச்சி மூலம் ஐரோப்பாவுக்கு ஒரு பொது அடையாளம் ஏற்படுவதற்கும் வழி வகுத்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லமேன்&oldid=1163018" இலிருந்து மீள்விக்கப்பட்டது