தமிழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
[[தமிழ்ச் சூழல்|தமிழ்ச் சூழலில்]] வளர்ச்சி பெற்ற இசை '''தமிழிசை''' ஆகும். குறிப்பாக [[தமிழர்]]களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. [[தாலாட்டு|தாலாட்டில்]] இருந்து [[ஒப்பாரி]] வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. [[இயல்]], இசை, [[நாடகம்]] என்று [[தமிழ்|தமிழை]] [[முத்தமிழ்|முத்தமிழாகப்]] பாகுபடுத்தி, இசைக்கு முன்னுருமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் [[பண்]] இசை, செவ்வியல் தமிழ் இசை, [[பக்தி இசை]], [[தமிழ் நாட்டார் பாடல்கள்|நாட்டார் இசை]], [[தமிழ் திரையிசை|திரையிசை]], [[தமிழ் ராப் இசை|சொல்லிசை]] என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன, வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்டுக்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.
[[தமிழ்ச் சூழல்|தமிழ்ச் சூழலில்]] வளர்ச்சி பெற்ற இசை '''தமிழிசை''' ஆகும். குறிப்பாக [[தமிழர்]]களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. [[தாலாட்டு|தாலாட்டில்]] இருந்து [[ஒப்பாரி]] வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. [[இயல்]], இசை, [[நாடகம்]] என்று [[தமிழ்|தமிழை]] [[முத்தமிழ்|முத்தமிழாகப்]] பாகுபடுத்தி, இசைக்கு முன்னுரிமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் [[பண்]] இசை, செவ்வியல் தமிழ் இசை, [[பக்தி இசை]], [[தமிழ் நாட்டார் பாடல்கள்|நாட்டார் இசை]], [[தமிழ் திரையிசை|திரையிசை]], [[தமிழ் ராப் இசை|சொல்லிசை]] என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன; வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.

== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==
வரிசை 9: வரிசை 9:
[[தமிழ் வாய்மொழி இலக்கியம்|வாய்மொழி இலக்கியங்கள்]], [[தமிழ் இலக்கியம்|எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள்]], [[கல்வெட்டு|கல்வெட்டுக்கள்]], [[தமிழிசை ஆய்வுகள்]], [[தமிழிசை பற்றிய அயல்நாட்டார் குறிப்புகள்|அயல்நாட்டார் குறிப்புகள்]] ஆகியவை தமிழிசை பற்றிய் அறிய எமக்கு உதவுகின்றன. [[சங்க இலக்கியம்|சங்க நூல்களான]] [[தொல்காப்பியம்]], [[கூத்தநூல்]], [[பரிபாடல்]], [[புறநானூறு]], [[அகநானூறு]], [[பத்துப்பாட்டு]] ஆகிய நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன..<ref>[[பி. டி. செல்லத்துரை]]. (2005). தென்னக இசையியல். திண்டுக்கல்: [[வைகறைப் பதிப்பகம்]]. பக்கம்: 194.</ref> [[பெருநாரை]], [[பெருங்குருகு]], [[பேரிசை]], [[சிற்றிசை]], [[இசைநுணுக்கம்]], [[பஞ்ச மரபு]] போன்ற தற்போது கிடைக்கப்பெறாத பல பண்டைத் தமிழிசை நூல்கள் பற்றிய குறிப்புகளையும் பிற நூல்கள் வரையாக அறியமுடிகிறது.

சங்கம் மருபிய நூலான [[சிலப்பதிகாரத்தில் தமிழிசை|சிலப்பதிகாரம் தமிழிசை]] பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] [[அரும்பதவுரை]]யும், [[அடியார்க்கு நல்லாருரை]]யும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தில் எழுதப்பெற்ற [[மணிமேகலை]], [[திருமந்திரம்]], [[சீவக சிந்தாமணி]] ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. இதே காலப் பகுதியிலேயே தோன்றிய [[காரைக்கால் அம்மையார்]] அருமையான தமிழிசைப் பாடல்களை ஆக்கி உள்ளார்.

பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை [[அப்பர்]], [[திருஞான சம்பந்தர்]], [[சுந்தரர்]] முதலான [[நாயன்மார்கள்|நாயன்மார்களினது]] [[தேவாரம்|தேவாரங்களும்]], பன்னினு [[ஆழ்வார்|ஆழ்வார்களினது]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்|நாலாயிரத்திவ்ய பிரபந்தமும்]] வளப்படுத்தின. இக் காலத்தில் இயற்றப்பெற்ற [[திவாகரம்]], [[பிங்கலம்]] போன்ற நிகண்டுகளிலும் தமிழிசைச் சொற்களுக்கு விளக்கங்கள் உள்ளன. [[பட்டினத்தார்]], [[இடைக் காட்டுச்சித்தர்]] ஆகியோரும் இக் காலத்தவரே.

பக்தி காலத்தைத் தொடர்ந்த இடைக் காலத்தில் தமிழிசை நலிவுற்று இருந்தது. எனினும் கிபி 15 ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் [[திருப்புகழ்|திருப்புகழ்]] இயற்றினார். இதில் உள்ள [[இசை]]த்[[தாளம்|தாளங்கள்]] தனித்தன்மை பெற்றவை. [[குமரகுருபரர்]], [[முத்துத் தாண்டவர்]] ஆகியோர் இக் காலத்தைச் சேர்தவர்கள்.

== வரலாறு ==
== வரலாறு ==
வரிசை 25: வரிசை 25:
* தற்காலம்
* தற்காலம்

[[சங்க காலத்தில்|சங்க காலத்தில்]] தமிழிசை சிறப்புற்று இருந்தது. இதை சங்க இலக்கியங்கள் ஊடாக அறிய முடிகிறது. அதைத் தொடர்ந்து [[சமணர்]] தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்தினர். சமணர் இசையை எதிர்த்தனர். அதனால் இசை நலிவுற்றது. இது தமிழிசையின் முதல் இருண்டகாலமாகக் கூறப்படுகிறது.<ref>"தமிழகத்தின் இசை மரபைப்பற்றிய விவாதத்தில் இரண்டு ‘இருண்ட’ காலகட்டங்கள் பேசப்படுகின்றன. முதல் காலகட்டம் களப்பிரர்களுடையது. [http://www.jeyamohan.in/?p=2540 தமிழிசையா] - ஜெயமோகன்</ref> ஏறக்குறைய கிபி 7 ம் நூற்றாண்டில் [[தமிழ்ப் பக்தி இயக்கம்]] வீச்சுக் கொண்டது. [[சைவம்|சைவமும்]] [[வைணவம்|வைணவமும்]] செல்வாக்குப் பெற்றன. [[நாயன்மார்|நாயன்மார்களின்]] [[தேவாரம்|தேவாரங்கள்]] ஊடாகவும், [[ஆழ்வார்|ஆழ்வார்களின்]] [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம்|பிரபந்தங்கள்]] ஊடாகவும் தமிழிசை வளர்ச்சி பெற்றது.

கிபி 14 ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்கள் தமிழகத்தை ஆக்கிரமிக்கித்தார்கள். அதன் போது கோயில்கள் அழிக்கப்பட்டன, தமிழகத்தின் கலைகள் நலிவுற்றன. இது தமிழிசைக்கு இரண்டாம் இருண்டகாலம்.<ref>[http://www.jeyamohan.in/?p=2540 தமிழிசையா] - ஜெயமோகன்</ref> இதைத் தொடர்ந்து தொலுங்கு [[விசய நகரப் பேரரசு|விசய நகர அரசர்கள்]] தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள். இவர்கள் கோயில்களுக்கு ஆதரவு தந்தார்கள், ஆனால் தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. மாற்றாக தெலுங்கு மொழிக்கும், இசைக்கு ஆதரவு தந்தார்கள். 16 ம் நூற்றாண்டில் தமிழிசையின் மரபுகள் நுணுக்கங்கள் பல உள்வாங்கப்பட்டு கருநாடக இசையாக உருவகப்படுத்தப்பட்டது. இதனால் இருபதாம் நூற்றாண்டு வரை, [[தமிழிசை இயக்கம்]] தொடங்கும் வரை தமிழிசை நலிவுற்று, தேக்க நிலையில் இருந்தது.
கிபி 14 ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்கள் தமிழகத்தை ஆக்கிரமிக்கித்தார்கள். அதன் போது கோயில்கள் அழிக்கப்பட்டன, தமிழகத்தின் கலைகள் நலிவுற்றன. இது தமிழிசைக்கு இரண்டாம் இருண்டகாலம்.<ref>[http://www.jeyamohan.in/?p=2540 தமிழிசையா] - ஜெயமோகன்</ref> இதைத் தொடர்ந்து லுங்கு [[விசய நகரப் பேரரசு|விசய நகர அரசர்கள்]] தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள். இவர்கள் கோயில்களுக்கு ஆதரவு தந்தார்கள், ஆனால் தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. மாற்றாக தெலுங்கு மொழிக்கும், இசைக்கும் ஆதரவு தந்தார்கள். 16 ம் நூற்றாண்டில் தமிழிசையின் மரபுகள் நுணுக்கங்கள் பல உள்வாங்கப்பட்டு கருநாடக இசையாக உருவகப்படுத்தப்பட்டது. இதனால் இருபதாம் நூற்றாண்டு வரை, [[தமிழிசை இயக்கம்]] தொடங்கும் வரை தமிழிசை நலிவுற்று, தேக்க நிலையில் இருந்தது.

19 ம், 20 ம் நூற்றாண்டுகளில் தமிழ் மொழியும் இலக்கியமும் போன்றே தமிழிசையும் மறுமலர்ச்சி பெற்றது. தமிழிசையை ஆழமாக விரிவாக ஆராய்ந்து [[ஆபிரகாம் பண்டிதர்]] [[கருணாமிர்த சாகரம்]] என்ற 1346 பக்கங்கள் கொண்ட நூலை 1917 இல் வெளியிட்டார். இன்றுவரை தமிழ்சை ஆய்வுகளுக்கு இது ஒரு முல நூலாக உள்ளது.<ref>[http://www.jeyamohan.in/?p=369 தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்] - ஜெயமோகன்</ref>
19 ம், 20 ம் நூற்றாண்டுகளில் தமிழ் மொழியும் இலக்கியமும் போன்றே தமிழிசையும் மறுமலர்ச்சி பெற்றது. தமிழிசையை ஆழமாக விரிவாக ஆராய்ந்து [[ஆபிரகாம் பண்டிதர்]] [[கருணாமிர்த சாகரம்]] என்ற 1346 பக்கங்கள் கொண்ட நூலை 1917 இல் வெளியிட்டார். இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இது ஒரு முல நூலாக உள்ளது.<ref>[http://www.jeyamohan.in/?p=369 தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்] - ஜெயமோகன்</ref>

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

18:41, 13 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

இசை வடிவங்கள்
தமிழிசை
நாட்டுப்புற இசை
கருநாடக இசை
மெல்லிசை
திரையிசை
தமிழ் ராப் இசை (சொல்லிசை)
தமிழ் பாப் இசை
துள்ளிசை
தமிழ் ராக் இசை
தமிழ் இயைபிசை (fusion)
தமிழ் கலப்பிசை (Remix)
பாடல் வகைகள்
நாட்டார் பாடல்கள்
கானா பாடல்கள்
சித்தர் பாடல்கள்
ஈழப்போராட்ட பாடல்கள்
கிறித்துவப் பாடல்கள்
பக்திப் பாடல்கள்
இசுலாமியப் பாடல்கள்
பன்மொழிப் பாடல்கள்
[[]]
[[]]

தொகு

தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்ற இசை தமிழிசை ஆகும். குறிப்பாக தமிழர்களின் செவ்விய இசை முறைமையைக் குறிக்கிறது. தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரை தமிழர் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் இசை ஒரு முக்கிய கூறு. இயல், இசை, நாடகம் என்று தமிழை முத்தமிழாகப் பாகுபடுத்தி, இசைக்கு முன்னுரிமை தொன்று தொட்டு தரப்பட்டது. பண்டைப் பண் இசை, செவ்வியல் தமிழ் இசை, பக்தி இசை, நாட்டார் இசை, திரையிசை, சொல்லிசை என தமிழிசையின் வடிவங்கள் பல. கால ஓட்டத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்த காலங்களும் உள்ளன; வேற்று மொழிகளின் மரபுகளின் ஆதிக்கத்தில் தேக்க நிலையில் இருந்த காலங்களும் உள்ளன. 20 ம் நூற்றாண்டில் தமிழிசை மீட்கப்பட்டு, மீளுருவாக்கம் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது.

ஆதாரங்கள்

இசைவாணர்கள் வாத்தியக் கருவிகள் இசைக்கும் காட்சி - திருவண்ணாமலை கோயில் சிற்பம்

வாய்மொழி இலக்கியங்கள், எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், தமிழிசை ஆய்வுகள், அயல்நாட்டார் குறிப்புகள் ஆகியவை தமிழிசை பற்றிய் அறிய எமக்கு உதவுகின்றன. சங்க நூல்களான தொல்காப்பியம், கூத்தநூல், பரிபாடல், புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன..[1] பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைநுணுக்கம், பஞ்ச மரபு போன்ற தற்போது கிடைக்கப்பெறாத பல பண்டைத் தமிழிசை நூல்கள் பற்றிய குறிப்புகளையும் பிற நூல்கள் வரையாக அறியமுடிகிறது.

சங்கம் மருபிய நூலான சிலப்பதிகாரம் தமிழிசை பற்றி பல விரிவான விளக்கங்களைத் தருகிறது. சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன. இக் காலத்தில் எழுதப்பெற்ற மணிமேகலை, திருமந்திரம், சீவக சிந்தாமணி ஆகிய நூல்களிலும் தமிழிசை பற்றிய செய்திகள் உள்ளன. இதே காலப் பகுதியிலேயே தோன்றிய காரைக்கால் அம்மையார் அருமையான தமிழிசைப் பாடல்களை ஆக்கி உள்ளார்.

பக்தி காலத்தில் (கிபி 700 - 1200) தமிழிசையை அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் முதலான நாயன்மார்களினது தேவாரங்களும், பன்னினு ஆழ்வார்களினது நாலாயிரத்திவ்ய பிரபந்தமும் வளப்படுத்தின. இக் காலத்தில் இயற்றப்பெற்ற திவாகரம், பிங்கலம் போன்ற நிகண்டுகளிலும் தமிழிசைச் சொற்களுக்கு விளக்கங்கள் உள்ளன. பட்டினத்தார், இடைக் காட்டுச்சித்தர் ஆகியோரும் இக் காலத்தவரே.

பக்தி காலத்தைத் தொடர்ந்த இடைக் காலத்தில் தமிழிசை நலிவுற்று இருந்தது. எனினும் கிபி 15 ம் நூற்றாண்டில் தோன்றிய அருணகிரிநாதர் திருப்புகழ் இயற்றினார். இதில் உள்ள இசைத்தாளங்கள் தனித்தன்மை பெற்றவை. குமரகுருபரர், முத்துத் தாண்டவர் ஆகியோர் இக் காலத்தைச் சேர்தவர்கள்.

வரலாறு

முதன்மைக் கட்டுரை: தமிழிசை வரலாறு

தமிழிசை வரலாற்றை ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.

  • சங்க காலம் (கிமு 500+ - கிபி 300)
  • சமணர் காலம் (கிபி 300 - கிபி 600)
  • பக்தி காலம்
  • இடைக் காலம்
  • தற்காலம்

சங்க காலத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்தது. இதை சங்க இலக்கியங்கள் ஊடாக அறிய முடிகிறது. அதைத் தொடர்ந்து சமணர் தமிழ்நாட்டில் செல்வாக்குச் செலுத்தினர். சமணர் இசையை எதிர்த்தனர். அதனால் இசை நலிவுற்றது. இது தமிழிசையின் முதல் இருண்டகாலமாகக் கூறப்படுகிறது.[2] ஏறக்குறைய கிபி 7 ம் நூற்றாண்டில் தமிழ்ப் பக்தி இயக்கம் வீச்சுக் கொண்டது. சைவமும் வைணவமும் செல்வாக்குப் பெற்றன. நாயன்மார்களின் தேவாரங்கள் ஊடாகவும், ஆழ்வார்களின் பிரபந்தங்கள் ஊடாகவும் தமிழிசை வளர்ச்சி பெற்றது.

கிபி 14 ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்கள் தமிழகத்தை ஆக்கிரமிக்கித்தார்கள். அதன் போது கோயில்கள் அழிக்கப்பட்டன, தமிழகத்தின் கலைகள் நலிவுற்றன. இது தமிழிசைக்கு இரண்டாம் இருண்டகாலம்.[3] இதைத் தொடர்ந்து லுங்கு விசய நகர அரசர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள். இவர்கள் கோயில்களுக்கு ஆதரவு தந்தார்கள், ஆனால் தமிழிசைக்கு ஆதரவு தரவில்லை. மாற்றாக தெலுங்கு மொழிக்கும், இசைக்கும் ஆதரவு தந்தார்கள். 16 ம் நூற்றாண்டில் தமிழிசையின் மரபுகள் நுணுக்கங்கள் பல உள்வாங்கப்பட்டு கருநாடக இசையாக உருவகப்படுத்தப்பட்டது. இதனால் இருபதாம் நூற்றாண்டு வரை, தமிழிசை இயக்கம் தொடங்கும் வரை தமிழிசை நலிவுற்று, தேக்க நிலையில் இருந்தது.

19 ம், 20 ம் நூற்றாண்டுகளில் தமிழ் மொழியும் இலக்கியமும் போன்றே தமிழிசையும் மறுமலர்ச்சி பெற்றது. தமிழிசையை ஆழமாக விரிவாக ஆராய்ந்து ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகரம் என்ற 1346 பக்கங்கள் கொண்ட நூலை 1917 இல் வெளியிட்டார். இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இது ஒரு முல நூலாக உள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. பி. டி. செல்லத்துரை. (2005). தென்னக இசையியல். திண்டுக்கல்: வைகறைப் பதிப்பகம். பக்கம்: 194.
  2. "தமிழகத்தின் இசை மரபைப்பற்றிய விவாதத்தில் இரண்டு ‘இருண்ட’ காலகட்டங்கள் பேசப்படுகின்றன. முதல் காலகட்டம் களப்பிரர்களுடையது. தமிழிசையா - ஜெயமோகன்
  3. தமிழிசையா - ஜெயமோகன்
  4. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் - ஜெயமோகன்

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழிசை&oldid=1162896" இலிருந்து மீள்விக்கப்பட்டது