துறவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: io:Monako, gd:Manach, lv:Mūks
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ka:ბერ-მონაზვნობა, km:ព្រះសង្ឃ
வரிசை 80: வரிசை 80:
[[is:Munkur]]
[[is:Munkur]]
[[ja:修道士]]
[[ja:修道士]]
[[ka:ბერ-მონაზვნობა]]
[[km:ព្រះសង្ឃ]]
[[ko:수사 (기독교)]]
[[ko:수사 (기독교)]]
[[la:Monachus]]
[[la:Monachus]]

07:33, 28 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

திருவண்ணாமலைத் துறவி

துறவி என்பது உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர், ஆசையை விட்டவர், சந்நியாசி. [1][2] துறவிகள் பெரும்பாலும் காவி அணிவது வழக்கம்.

படிமம்:Tenzin Gyatzo foto 1.jpg
தலாய் லாமா

இந்து மதம்

இந்து மதக் கருத்து

இந்து சமயம் "மனிதனின் வாழ்க்கையை பெரியோர்கள் நான்குவகையாக பிரித்தார்கள். அவைகள் பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், துறவறம் என்று கூறப்படுகின்றன. அவற்றில் பிரம்மச்சரியம் என்பது கிரகஸ்தம் ஆவதற்கு முன்பு கடைபிடிக்கும் சாதகர் நிலை(பயிற்சி நிலை) எனவும், வனப்பிரஸ்தம் என்பது துறவறம் மேற்கொள்வதற்கான சாதகர் நிலை எனவும் கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை பிறந்ததிலிருந்து பதினாறு வயது வரை பாலபருவம் எனவும் ,அந்த சமயம் அவனை எந்த நியதிகளும் கட்டுபடுத்துவதில்லை. அடிப்படைக் கல்வி மட்டுமே கட்டுபடுத்தும்.

பதினாறு வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை அவன் பிரம்மச்சாரி, அந்த சமயம் வாழ்க்கைகல்வியை கிரகஸ்தனாக இருப்பதற்கு வேண்டிய சகல விதமான விஷயங்களையும் படிப்பறிவாக அறிந்து கொள்கிறான்.

இருபத்து நான்கு வயதில் பிரம்மச்சரிய நிலையை முடித்து தான் கற்ற கல்வியை தனக்கென்று இறைவனால் உருவாக்கப்பட்ட மனைவியுடன் சேர்ந்து கிர்கஸ்தனாகி அனுபவ நிலைக்கு கொண்டு வருகின்றான். அந்த நிலை ஐம்பத்தாறு வயது வரை நீடிக்கிறது.

ஐம்பத்தாறு வயதிலிருந்து மனிதன் வனப்பிரஸ்த நிலைக்கு சென்றுவிடவேண்டும். அதாவது எதிலும் பொதுவான நோக்கம் கொண்டு துறவு நிலைப்பற்றி முழுமையாக படிப்பறிவாக அறிய வேண்டும். அதிகபட்சமாக அவன் எழுபத்திரண்டு வயதுக்கு மேல் வாழ்ந்தால் முற்றிலும் துறவியாகி விடவேண்டும்." [3] என்று மனிதன் வாழ்க்கையை நான்காகப் பிரித்துத் துறவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்கிறது

கிறித்துவ மதம்

ஆசிர்வாதப்பர் சபைத் கிறித்தவ துறவி

கிறித்தவத்தில் துறவி எனப்படுவோர் துறவற சபையில் சேர்ந்து, அச்சபையின் சட்டங்களுக்கு கீழ்படிந்து, கற்பு, ஏழ்மை, கேழ்படிதல் என்னும் வார்த்தை பாடுகளை எடுத்துக் கொண்டோரைக் குறிக்கும்.

கிறித்தவ துறவிகளுக்கும் குருக்களுக்கும் வேறுபாடு உள்ளது. எல்லா குருக்களும் துறவிகள் அல்லர்.

ஆதி திருச்சபைகளில் வனத்து சின்னப்பரை போல் துறவிகள் தனியே வாழ்கை நடத்தினர். பிற்காலத்தில் இத்தகையோர் ஒருங்கே கூடி ஒரு குழுமமாக செப வாழ்வில் இடுபட்டனர். இத்தகையோரை ஒழுங்கு படுத்த புனித ஆசிர்வாதப்பர் பல சட்டங்களை இயற்றினார்[4]. இவையே இன்றளவும் பல இடங்களில் உள்ளது.

இசுலாம் மதம்

இசுலாம் மதத்தைப் பொறுத்தவரை துறவுக்கு அனுமதியில்லாத நிலையே உள்ளது. இது குறித்து இசுலாம் தத்துவ நூல்களில் பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. [5]

இதையும் பார்க்க‌

கன்னித்துறவி

வெளியிணைப்புக்கள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=துறவி&oldid=1149024" இலிருந்து மீள்விக்கப்பட்டது