தலைமை அமைச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: ilo:Umuna a Ministro
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: az:Baş Nazir
வரிசை 13: வரிசை 13:
[[am:ጠቅላይ ሚኒስትር]]
[[am:ጠቅላይ ሚኒስትር]]
[[ar:رئيس الوزراء]]
[[ar:رئيس الوزراء]]
[[az:Baş Nazir]]
[[be:Прэм'ер-міністр]]
[[be:Прэм'ер-міністр]]
[[be-x-old:Прэм’ер-міністар]]
[[be-x-old:Прэм’ер-міністар]]

20:07, 27 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

பிரதமர் (Prime minister) என்பவர் நாடு ஒன்றின் அமைச்சரவையின் மிக மூத்த அமைச்சர் ஆவார். பெரும்பாலும் பிரதமரே அமைச்சரவையின் உறுப்பினர்களை தேர்வு செய்வதும் நீக்குவதுமான பணிகளை செய்வார். மேலும் அரசில் உறுப்பினர்களுக்கான பதவிகளை வகுப்பதும் பிரதமரே ஆகும். பெரும்பாலும் பிரதமர் அமைச்சரவைத் தலைவராக இருப்பார். ஒருசில அமைப்புகளில் பிரதமர் என்பவர் உள்நாட்டு சேவைகள் மற்றும் நாட்டின் தலைவரின் கட்டளைகளை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாவார்.
வெஸ்ட்மினிஸ்டர் அமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புகளில் பிரதமரே அரசின் தலைவராவார். அவருக்கே அனைத்து செயல்பாடுகளையும் செயலாக்கும் அதிகாரம் உள்ளது. இத்தகைய நாடாளுமன்ற அமைப்புகளில் நாட்டின் தலைவர் (குடியரசுத்தலைவர்) பெரும்பாலும் பெயரளவிற்க்கான அதிகாரங்களை கொண்டிருக்கிறார்.ஒரு சில சிறப்பு அதிகாரங்களை தவிர நாட்டின் தலைவருக்கு எத்தகைய செயலாக்குதல் அதிகாரமும் இல்லை.

பெரும்பாலான அமைப்புகளில் பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் பிரதமர் மசோதாக்கள் சட்டப்படி நிறைவேறுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவராவார். மேலும் பிரதமர் தன்கீழ் ஒருசில முக்கியமான அமைச்சுகளை வைத்துக்கொள்வார். எடுத்துக்காட்டாக இந்தியப் பிரதமர் திட்டமிடுதல் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளை தன் கீழ் வைத்துள்ளார்[1].

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைமை_அமைச்சர்&oldid=1148789" இலிருந்து மீள்விக்கப்பட்டது