நெடுங்குழு (தனிம அட்டவணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: is:Efnaflokkur
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: az:Dövri cədvəl qrupu
வரிசை 53: வரிசை 53:
[[ar:مجموعة جدول دوري]]
[[ar:مجموعة جدول دوري]]
[[ast:Grupu de la tabla periódica]]
[[ast:Grupu de la tabla periódica]]
[[az:Dövri cədvəl qrupu]]
[[bg:Група на периодичната система]]
[[bg:Група на периодичната система]]
[[bs:Grupa periodnog sistema elemenata]]
[[bs:Grupa periodnog sistema elemenata]]

22:59, 26 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

நெடுங்குழுஅல்லது கூட்டம் அல்லது தொகுதி என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளதால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருப்பதில் வியப்பில்லை.முன்பு பயன்பாட்டில் இருந்து வந்த அட்டவணையில் ரோம எண்கள் பயன்படுத்தப்பட்டன. இதே போன்று அமெரிக்க அட்டவணையிலும் ரோம எண்களே இருந்தன. தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் அவற்றின் தொகுதிகளில் ஒரே எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்றுள்ளன. மேலும் அவை அவற்றின் வெளிக்கூட்டு ஆர்பிட்டாலில் சம எண்ணிக்கையில் எலக்ட்ரான்களையும், ஒரே பண்புகளையும் பெற்றுள்ளன. 18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய மற்றும் புதிய எண்களையும் வகைபடுதிய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொகுதி

புதிய ஐயுபிஏசி எண் பழைய ஐயுபிஏசி எண் அமெரிக்க எண் பெயர்
நெடுங்குழு 1 IA IA கார மாழைகள் அல்லது லித்தியம் தொகுதி
நெடுங்குழு 2 IIA IIA காரக்கனிம மாழைகள் அல்லது பெரிலியம் தொகுதி
நெடுங்குழு 3 IIIA IIIB இசுக்காண்டியம் தொகுதி
நெடுங்குழு 4 IVA IVB டைட்டேனியம் தொகுதி
நெடுங்குழு 5 VA VB வனேடியம் தொகுதி
நெடுங்குழு 6 VIA VIB குரோமியம் தொகுதி
நெடுங்குழு 7 VIIA VIIB மாங்கனீசு தொகுதி
நெடுங்குழு 8 VIII VIIIB இரும்பு தொகுதி
நெடுங்குழு 9 VIII VIIIB கோபால்ட் தொகுதி
நெடுங்குழு 10 VIII VIIIB நிக்கல் தொகுதி
நெடுங்குழு 11 IB IB செப்பு தொகுதி
நெடுங்குழு 12 IIB IIB துத்தநாகம் தொகுதி
நெடுங்குழு 13 IIIB IIIA போரான் தொகுதி
நெடுங்குழு 14 IVB IVA கரிமம் தொகுதி
நெடுங்குழு 15 VB VA நைத்ரசன் தொகுதி
நெடுங்குழு 16 VIB VIA உயிர்வளிக்குழு அல்லது ஆக்சிசன் தொகுதி
நெடுங்குழு 17 VIIB VIIA ஆலசன் அல்லது புளோரின் தொகுதி
நெடுங்குழு 18 நெடுங்குழு 0 VIIIA அருமன் வாயு