மாதுளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: el:Ροδιά மாற்றல்: ckb:ھەنار, ku:Hinar
வரிசை 64: வரிசை 64:
[[bs:Šipak]]
[[bs:Šipak]]
[[ca:Magraner]]
[[ca:Magraner]]
[[ckb:هەنار]]
[[ckb:ھەنار]]
[[co:Mela granata]]
[[co:Mela granata]]
[[cs:Granátové jablko]]
[[cs:Granátové jablko]]
வரிசை 70: வரிசை 70:
[[da:Granatæble]]
[[da:Granatæble]]
[[de:Granatapfel]]
[[de:Granatapfel]]
[[el:Ροδιά]]
[[en:Pomegranate]]
[[en:Pomegranate]]
[[eo:Granato]]
[[eo:Granato]]
வரிசை 96: வரிசை 97:
[[ko:석류나무]]
[[ko:석류나무]]
[[ks:دٲن]]
[[ks:دٲن]]
[[ku:Henar]]
[[ku:Hinar]]
[[la:Punica granatum]]
[[la:Punica granatum]]
[[lbe:Сунув]]
[[lbe:Сунув]]

11:36, 31 மே 2012 இல் நிலவும் திருத்தம்

மாதுளை
மாதுளை பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
துணைவகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. granatum
இருசொற் பெயரீடு
Punica granatum
L.
வேறு பெயர்கள்
Punica malus
Linnaeus, 1758
மரத்தில் மாதுளை
பிளந்துவைத்துள்ள மாதுளை
உண்ண வைத்துள்ள மாதுளை முத்து

மாதுளை ( Pomegranate) வெப்ப இடைவெப்ப வலயத்திற்குரிய ஒரு பழமரமாகும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

மாதுளம்பழத்தின் பயன்கள்

  • தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.
  • தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
  • ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
  • மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
  • அதிக தாகத்தைப் போக்கும்.
  • மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
  • மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.
  • மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
  • வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
  • பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.


மாதுளம்பூவின் பயன்கள்

  • மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
  • மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
  • மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
  • மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
  • மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.


மாதுளம்பழத் தோலின் பயன்கள்

  • மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுளை&oldid=1124314" இலிருந்து மீள்விக்கப்பட்டது