குருதிப்புனல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கதை: தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22: வரிசை 22:


[[பகுப்பு:1995 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1995 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்‎]]


[[en:Kuruthipunal]]
[[en:Kuruthipunal]]

09:39, 28 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

குருதிப்புனல்
இயக்கம்பி.சி ஸ்ரீராம்
தயாரிப்புகமலஹாசன்
கதைகோவிந்த் நிகலனி (கதை)
இசைமகேஷ் மகாதேவன்
நடிப்புகமலஹாசன்
அர்ஜூன்
நாசர்
கே.விஷ்வனாத்
கௌதமி
கீதா
சுபலேகா சுதாகர்
அனுசா
பசுபதி
அஜெய் ரத்னம்
ஒளிப்பதிவுபி.சி ஸ்ரீராம்
விநியோகம்ராஜ்கமல் பில்ம்ஸ் இண்டெர்நேஷனல்
வெளியீடு1995
ஓட்டம்137 நிமிடங்கள்
மொழிதமிழ்

குருதிப்புனல் (1995) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி.சி ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன், அர்ஜூன், கௌதமி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். பாடல்களே இல்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஆதி நாராயணனும் (கமலஹாசன்) அப்பாசும் (அர்ஜூன்) காவல் துறை அதிகாரிகள்.தீவிரவாத அமைப்பொன்றின் தலைவனான பத்ரி (நாசர்) குழுவினுள் காவல் துறையினரைச் சேர்ந்த இருவர் வேவுபார்ப்பதற்காக அனுப்பப்படுகின்றனர். மேலும் பத்ரியினை ஒரு சம்பவத்தில் கைது செய்து கொள்ளும் ஆதி நாராயணன் தீவிரவாதக் குழுக்கள் பற்றியும் விசாரணைகள் நடத்துகின்றார். ஆனால் அவரே அத்தீவிரவாத குழுக்களின் தலைவரென்பதனை அறியவும் இல்லை ஆதி. பின்னர் அறிந்து கொண்டபோது ஆதியின் குடும்பத்திற்கு தீங்குகள் விளைகின்றன. ஆதியின் மகன் தீவிரவாதிகளின் அதிஉயர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டுக் காயமடைகின்றான். இதனை அறிந்து கொள்ளுன் ஆதி பத்ரியினைக் கொலை செய்யப்போவதாகவும் பயமுறுத்துகின்றார். இதனைப் பார்த்துப் பயப்படாத பத்ரி ஆதியின் குடும்பத்தாருக்குத் தீங்கு விளையப் போகின்றது எனக் கூறுகின்றார். அவர் தான் தீவிரவாதிகளின் தலைவன் என்பதனை அறியாத ஆதி அவரை விடுதலையும் செய்கின்றார். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் இடத்திற்குச் சென்ற இரு காவல்துறையினர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் அத்தீவிரவாதிகளின் இடத்தினை நோக்கிச் செல்கின்றார் அப்பாஸ் அங்கு அவர் பத்ரியால் கைது செய்யப்பட்டு கொலையும் செய்யப்படுகின்றார். பின்னர் அப்பாஸைத் தேடிச் செல்லும் ஆதி அங்கு இருக்கும் வேவு பார்க்கும் காவல்துறையினரைச் சந்தித்துக் கொள்ளவே இதனை அறிந்து கொண்டு உள்ளே நுழைய முனைந்த தீவிரவாதிகளிடமிருந்து அவ்வேவு பார்ப்பவர்களை அடையாளம் காட்டாத வண்ணமிருப்பதற்காகத் தன்னைச் சுடவும் சொல்கின்றார் ஆதி. அவ்வாறே அக்காவல்துறை அதிகாரியும் செய்கின்றார்.