பன்னாட்டுத் தாய்மொழி நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gl:Día Internacional da Lingua Materna
சி தானியங்கி அழிப்பு: sd:ماءُ ٻوليءَ جو بين الاقوامي ڏڻ (deleted)
வரிசை 62: வரிசை 62:
[[ru:Международный день родного языка]]
[[ru:Международный день родного языка]]
[[sco:Internaitional Mither Tongue Day]]
[[sco:Internaitional Mither Tongue Day]]
[[sd:ماءُ ٻوليءَ جو بين الاقوامي ڏڻ]]
[[su:Poé Basa Ibu Internasional]]
[[su:Poé Basa Ibu Internasional]]
[[sv:Internationella modersmålsdagen]]
[[sv:Internationella modersmålsdagen]]

20:39, 24 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

ஷாஹித் மினார்: பெப்ரவரி 21, 1952 இல் உயிர்நீத்த மாணவர்கள் நினைவாக டாக்காவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி

அனைத்துலக தாய்மொழி நாள் பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.