மூட செல்வந்தன் உவமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி தானியங்கிஅழிப்பு: simple:Parable of the Rich Fool (deleted)
வரிசை 23: வரிசை 23:
[[pt:Parábola do Rico Insensato]]
[[pt:Parábola do Rico Insensato]]
[[sh:Priča o bogatoj budali]]
[[sh:Priča o bogatoj budali]]
[[simple:Parable of the Rich Fool]]
[[sr:Прича о богатој будали]]
[[sr:Прича о богатој будали]]
[[vi:Dụ ngôn Người giàu ngu dại]]
[[vi:Dụ ngôn Người giàu ngu dại]]

10:43, 18 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

மூட செல்வந்தன் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக்கதையாகும். இது லூக்கா 12:16-21 இல் எழுதப்பட்டுள்ளது. இவ்வுவமை, இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது சொத்து பிரச்சினை ஒன்றை தீர்த்துக்கொள்ள வந்த இரு சகோதரரை பார்த்து கூறிய உவமையாகும். அவர்களுக்கும் போதனையை கேட்க குழுமியிருந்தா மக்களையும் நோக்கி இவ்வுலக செல்வங்களை சேர்ப்பது வீணானது என்பதை விளக்க கூறப்பட்ட உவமையாகும்.

உவமை

ஒரு செல்வந்தனின் நிலம் நன்றாய் விளைந்தது. அவன், "நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே." என்று எண்ணினான். "ஒன்று செய்வேன் என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன் அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்". பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன நீ ஓய்வெடு உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.

பொருள்

இதன் பொருள் தெளிவானது. அதாவது இவ்வுலக செல்வங்கள் ஒருவனது மரணத்தை தடைசெய்யாது. மரணம் அறியாத நேரத்தில் வரும், அதற்கு மனிதர் தயாரக இருக்க வேண்டும். மனிதனின் திட்டங்கள் கடவுள் முன்னதாக அறிவிலியின் உளரல் போன்றது.

இவற்றையும் பார்க்கவும்


உசாத்துணைகள்

வெளியிணப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூட_செல்வந்தன்_உவமை&oldid=1089217" இலிருந்து மீள்விக்கப்பட்டது