விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 240: வரிசை 240:


வாழ்த்துக்கள்! --[[பயனர்:மதனாஹரன்|மதனாஹரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 01:43, 11 ஏப்ரல் 2012 (UTC)
வாழ்த்துக்கள்! --[[பயனர்:மதனாஹரன்|மதனாஹரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 01:43, 11 ஏப்ரல் 2012 (UTC)
::வாழ்த்துக்கள் தேனி எம்.சுப்பிரமணி.மேலும் மேலும் தங்கள் புகழ் வளரட்டும். தமிழ்விக்கிபீடியாவில் பங்களித்தவன் என்ற வகையில் தமிழ்விக்கிபீடியாவிற்கு தங்களால் ஆற்றப்படும் பணிபற்றி நான் நன்கு அறிவேன். தங்கள் பணி தொடரப் பிரார்த்திக்கின்றேன்.
<!-- இது இப்பக்கத்தின் அடிப்பகுதி. தங்கள் கருத்துகளை இதற்கு மேலே இடுங்கள். -->
<!-- இது இப்பக்கத்தின் அடிப்பகுதி. தங்கள் கருத்துகளை இதற்கு மேலே இடுங்கள். -->
<!-- This is end of page. Please post your comments above this line -->
<!-- This is end of page. Please post your comments above this line -->

02:44, 11 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

அனைத்து ஆலமரத்தடித் தொகுப்புகளிலும் தேட...
குறுக்கு வழி:
WP:VP
WP:AM
தொகுப்பு

காப்பகம் (தொகுப்புகள்)


நிலுவையில் உள்ள பணிகள்
0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17b 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72






ஆலமரத்தடிக்கு வருக! இங்கு விக்கிப்பீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் போன்றவை இடம் பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


ஏப்பிரல் 7, 2012 இல் நூலகம் கனடா: அறிமுக நிகழ்வுல் தமிழ் விக்கி

வணக்கம்: வரும் சனிக்கிழமை ஏப்பிரல் 7, 2012 இல் இசுகார்புரோவில் நடைபெறவுள்ள நூலகம் கனடா: அறிமுக நிகழ்வில் "தமிழ் விக்கியூடகங்கள் - கூட்டாசிரியப் பொதுமங்கள்" என்ற தலைப்பில் செயல்முறை விளக்கம் ஒன்றை செல்வா தரவுள்ளார். கனடிய விக்கி பயனர்களை அந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 00:46, 3 ஏப்ரல் 2012 (UTC)

நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள். -- சுந்தர் \பேச்சு 14:52, 4 ஏப்ரல் 2012 (UTC)

நிறுவனப் பெயரிடல்

Hindustan Insecticides Limited என்ற நிறுவனத்திற்கு தமிழில் எப்படி பெயர் வைப்பது என்று உதவுங்கள். தேடியவரை ஹிந்துஸ்தான் பூச்சிக் கொல்லி மருந்து நிறுவனம் என்றுதான் வழஙகப்படுகிறது. 'Limited' என்பதற்கு ஒப்பான சொல் எது என்றும் கூறுங்கள். நன்றி --நீச்சல்காரன் (பேச்சு) 03:55, 3 ஏப்ரல் 2012 (UTC)

இந்துசுத்தான் பூச்சி மருந்து வரம்பியம். ஏதோ எனக்குத் தெரிந்தது.:)---தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:25, 3 ஏப்ரல் 2012 (UTC)
Limited என்பது பங்குகள் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனத்தைக் குறிக்கும் அதாவது இதன் பங்குகள் கூட்டுப்பங்குகளாக இருக்கும். தனியார் மட்டும் பங்குதாரர்களாக இருப்பின் அந்நிறுவனம் Private limited என்றும் அரசும் குறிப்பிட்ட விகிதத்தில் பங்குகள் வைத்திருப்பின் public Limited என்றும் வழங்கப்படுகிறது. Limit என்பது வரம்பு எனப் பொருள்படினும் Limited என்பது பொதுவாக நிறுவனம் என்றே வழங்கப்படுகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:14, 3 ஏப்ரல் 2012 (UTC)
தலைப்பில் இந்துத்தான் பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனம் என்றும், கட்டுரையினுள்ளே இந்துத்தான் பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) என்றும் குறிப்பிடலாம்.--Kanags \உரையாடுக 12:38, 3 ஏப்ரல் 2012 (UTC)
கனகுடன் உடன்பட்டாலும் மருந்து என்ற விளக்கம் தேவையா என எண்ணுகிறேன். பூச்சிக்கொல்லி என்றாலே போதாதா ? அல்லது இந்த நிறுவனம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நுண்ணுயிரிகளை வழங்குவதை தனது நிறுவன முற்போக்கு வணிகத் திட்டமாகக் கொள்ளவில்லை எனில் பூச்சி மருந்து நிறுவனம் என்று கூறலாம்--மணியன் (பேச்சு) 13:20, 3 ஏப்ரல் 2012 (UTC)

தரக்கண்காணிப்பு

விக்கிப்பீடியா:தர மேம்படுத்தல் யோசனைகள் இப்பக்கத்தில் தர மேம்படுத்தல் யோசனைகளை பகிரலாமே. உதாரணத்திற்கு இங்கு நிர்வாக தரத்திலுள்ளவரகள் மேற்கோள் சேர்க்கும் போதோ, படிமப் பயன்பாடு பற்றி அறிவதற்கோ (காப்புரிமை - டின் ஐ) சில குறுக்கு வழிகளை பயன்படுத்துவர். அதை இங்கு பகிரலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:38, 3 ஏப்ரல் 2012 (UTC)

ஊடகப் போட்டி பணம் மறுபயன்பாடு

ஊடகப் போட்டி வரவு செலவு கணக்கினை முடித்து விட்டேன். போட்டி செலவுகள் போக 695665 இந்திய ரூபாய்கள் என்னிடம் மீதமுள்ளன. (முழு கணக்கு அறிக்கை நாளை வெளியாகும்). விக்கிமீடியா அறக்கட்டளைக்கு அறிக்கை அளிக்கும் போது திட்டத்தில் எஞ்சிய பணத்தை மறுபயன்பாடு (repurpose) செய்வதற்கு ஒரு தெரிவு உள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்த 695665 ரூபாயை குறுந்தொடுப்பு வழங்கிக்கான (tawp.in) இவ்வாண்டு சந்தாவுக்கு ஒதுக்கக் கோரலாம் என எண்ணுகிறேன். (ஓராண்டு சந்தா 12.99 $ - செலவு பொருந்தி வருவதால் இந்த யோசனை உண்டானது). தற்போது இச்செலவினை ஸ்ரீகாந்த் ஏற்று வருகிறார். குறுந்தட்டுத் திட்டம் முடிவடைந்தால் இதே வழங்கி குறுந்தட்டின் ISO பிம்பத்தையும் வழங்கும். இந்த மறுபயன்பாட்டுப் பரிந்துரைக்கு ஏதேனும் மறுப்பிருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன். (மறுபயன்பாடு கோரவில்லையெனில் எஞ்சிய பணத்தை அறக்கட்டளைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்) --சோடாபாட்டில்உரையாடுக 08:56, 4 ஏப்ரல் 2012 (UTC)

+1. 695 இந்திய ரூபாயைத் திருப்பி அனுப்பினால், நாணய மாற்றுக்கே பத்தாது :) இந்தப் பணம் தளப் பெயரைப் புதுப்பிக்கத் தான் போதுமானதாக இருக்கும். ISO கோப்பு வழங்க ஏகப்பட்ட bandwidthம் செலவும் ஆகுமே? இதற்கு விக்கிமீடியா வழங்கியிலேயே இடம் கிடைக்குமா என்று பார்க்கலாம். அல்லது, இயன்ற அளவு torrents வழங்கலைப் பயன்படுத்தலாம்--இரவி (பேச்சு) 09:04, 4 ஏப்ரல் 2012 (UTC)
சிறு திருத்தம், சந்தா வழங்கிக்கு அல்ல இணைய முகவரிக்கு(Domain Name). அளவில்லா bandwidth கொண்ட நட்புதிட்டங்களின் வளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 09:13, 4 ஏப்ரல் 2012 (UTC)
  1. ஆதரவு --மணியன் (பேச்சு) 12:50, 4 ஏப்ரல் 2012 (UTC)
  2. ஆதரவு -- சுந்தர் \பேச்சு 14:50, 4 ஏப்ரல் 2012 (UTC)
  3. ஆதரவு பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
  4. ஆதரவு--பவுல்-Paul (பேச்சு) 22:11, 4 ஏப்ரல் 2012 (UTC)
  5. ஆதரவு--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:00, 5 ஏப்ரல் 2012 (UTC)
  6. ஆதரவு-- மாகிர் (பேச்சு) 03:04, 5 ஏப்ரல் 2012 (UTC)
  7. ஆதரவு--shanmugam (பேச்சு) 04:17, 5 ஏப்ரல் 2012 (UTC)
  • தமிழ் விக்கிபிடியாவில் இதே முறையை பொருத்தலாம். அதற்குரிய தொழில்நுட்பத்தை விக்கிபீடியாவிலே பொருத்துவது நீண்ட கால நோக்கத்தில் சிறந்தது. tawp.in இதே தொழில் நுட்பத்தை விக்கிபீடியாவில் பொருத்தினால் வேலை செய்யாது என்று கூறினால்/இருப்பின் tawp.in-யை குறுந்தொடுப்புக்கு உபயோகம் செய்யலாம்.--Pitchaimuthu2050 (பேச்சு) 06:35, 5 ஏப்ரல் 2012 (UTC)
இது பல காலமாக (வெறும் 7 ஆண்டுகளாகத் தான்) முயற்சி செய்யப்ப்ட்டு வருகிறது. பார்க்க bugzilla:1450. இது வந்தால் நன்றாகத் தான் இருக்கும், ஆனால் அதுவரை(எவ்வளவாண்டுகளாயினும்), tawp.in பயன்படும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 08:05, 5 ஏப்ரல் 2012 (UTC)

இனி யாருக்காவது மறுப்பு இருந்தால் மட்டும் தெரிவிக்கவும் :) இது போன்று பொதுக்கருத்து ஒருமித்து இருக்கும் நிலை தெளிவாக இருக்கும் போது, கூடுதல் ஆதரவைத் தெரிவிக்கத் தேவையில்லை :) --இரவி (பேச்சு) 05:12, 5 ஏப்ரல் 2012 (UTC)

ஊடகப் போட்டி நல்கை அறிக்கை

meta:Grants:Tamil_Wikimedians/TamilWiki_Media_Contest/Report தயார். தமிழ் விக்கிக்கான அறிக்கை இன்னும் சில நாட்களில் தயாராகும்(தாமதத்திற்கு வருந்துகிறோம்). போட்டி முழுவதும் அனைவரின் ஆதரவு, உதவி, பங்களிப்புகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் ஸ்ரீகாந்த் (பேச்சு) 08:05, 5 ஏப்ரல் 2012 (UTC)

புனித வெள்ளி வாழ்த்துகள்

அனைத்து விக்கிப் பயனர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இனிய புனித வெள்ளி, மற்றும் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 01:28, 6 ஏப்ரல் 2012 (UTC)

ஒப்பளிக்கப்பட்ட சொற்றொகை (authorized terms) தேவை

ஆலமரத்தடியில் சில கருத்துக்களை முன் வைக்க ஆசைப்படுகிறேன் . சற்று நீண்ட தொகுப்பு இது.
கட்டுப்படுத்தப்பட்ட சொற்றொகை (Controlled vocabularies) என்பது அறிந்த செய்தி; தகவல் (knowledge) போன்றவற்றை (எ.கா.விக்கிபீடியா கட்டுரைகள்) அமைத்து பின்னர் தேவைக்கேற்ப ஆவணமீட்பு அல்லது தகவல் மீட்பு (document retrieval or information retrieval ) தற்பரிமாறல்களைச் (service) செய்வதற்குப் பெரிதும் துணைபுரிகிறது எனலாம்.
கட்டுரைகளைக் குறியீடு செய்தற்கு தேவைப்படுவன பொருளடைவு (subject index) எனப்படும் பொருள் அட்டவணையும் பொருள் பகுப்புகளும் (subject categories) ஆகும். கட்டுப்படுத்தப்பட்ட சொற்றொகை திட்டங்கள் கட்டாயம் வேண்டுவது முன்வரையரை (predefined) செய்து ஒப்பளிக்கப்பட்ட சொற்றொகை (authorized terms) ஆகும். இந்த சொற்றொகை இயற்கை மொழியில் (Natural Language) காணப்படும் வழுக்களை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கபடுவாதால் தகவல் அமைவும தகவல் மீட்பும் எளிதாகிறது.
இது குறித்து பல விவாதங்கள் ஆலமரத்தடியில் நடந்ததைத் தெரிந்துகொண்டேன். என்றாலும் இவை சிறிது சிறிதாகவே தேவை கருதி நடைபெறுகின்றன. கட்டுரைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்லும் இந்நிலையில் இது குறித்த பணிகள் நிறையவே உள்ளன. இது குறித்து உடனடியாக பரவலான கொள்கைகள் (Broader Policies) இருந்தால் நலம்.
பொருள் பகுப்புகளிலேயே (subject categories) சில முரண்பாடுகள் உள்ளன உதாரணமாக:
பகுப்பு:இந்தியக் கோயில்கள் -> துணைப் பகுப்புகள் [×] கேரள இந்துக் கோயில்கள்‎ (27 P), [+] தமிழ்நாட்டுக் கோயில்கள்‎ (5 C, 133 P), [×] மகாராட்டிர இந்துக் கோவில்கள்‎ (2 P)
தகவல் நாடும் முனைவு (Information seeking behaviour) எவ்வாறெனில் பயனர்கள் தங்களுக்குத் தெரிந்த கருத்தை (concept) தங்களுக்கு மிகவும் தெரிந்த திரவுச் சொற்களின் (keywords அல்லது descriptors) துணை கொண்டு தேடுகிறார்கள். நம் மொழி வளமிக்கது ஒரு கருத்துக்கு (concept) பல பொருள்கள் (meaning) உள்ளன (polysemy). ஒரு சொல் பல பொருளிலும் கையாளப் படுகின்றன. (homonyms). எனவே தான் கட்டுப் படுத்தப்பட்ட சொல் தொகுதிகள் (controlled vocabulary) விக்கிப்பீடியாவிற்கு மிகவும் இன்றியமையாததாகிறது. ஒப்பளிக்கப்பட்ட சொற்றொகை (authorized terms) படைக்க வேண்டிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது நல்லது. கொள்கைகளின் அடிப்படையில் தடுப்பு சொற்கள் (stop words) அமைக்கலாம்
கீழே சில எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன்

மாறுபட்ட எழுத்துக் கோர்வை (ஸ்பெல்லிங்)

(எ.கா) கோவில் கோயில், வமிசம், வம்சம்

கொள்கை தேவை

ஒருமை பன்மை

(எ.கா) கோவில் கோவில்கள், பெற்றோர் பெற்றோர்கள், பழம் பழங்கள், கொட்டை கொட்டைகள், கோட்டை கோட்டைகள், அரண்மனை அரண்மனைகள், குழு குழுக்கள், கொள்கை கொள்கைகள், விக்கிபீடியர் விக்கிபீடியர்கள், நிர்வாகி நிவாகிகள், கட்டுரை கட்டுரைகள், பிழை பிழைகள், பட்டியல் பட்டியகள், மேற்கோள் மேற்கோள்கள், இணைப்பு இணைப்புக்கள், உசாத்துணை உசாத்துணைகள்

கொள்கை தேவை

தனி நபர் பெயர் (விவரிப்புச் சொல் - Descriptors)

(எ.கா) ராமானுஜர், ராமானுசர், இராமானுஜர், இராமனுசர், தமிழ் நாடு, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் எம்.ஜி.ஆர், ஜி.கே.வாசன்,

கொள்கை தேவை

அலகுகள்

(எ.கா) மில்லியன், பில்லியன், அங்குலம் இஞ்சு இன்ச் சென்டிமீட்டர், மீட்டர், லிட்டர், காலன், கேலன், கிலோமீட்டர், கிலோவாட், கிலோ பைட், மெகா பைட், மெகாவாட், பிக்ஸெல், பாரன்ஹீட், செல்சியஸ், நானோ தொழில் நுட்பம்,

கொள்கை தேவை

தமிழில் குறுக்கம் (Abbreviations)

(எ.கா) சென்டிமீட்டர் செ.மீ., கிலோமீட்டர் கி.மீ., தமிழ்நாடு அரசு .த.அ,, கி.மு., கி.பி.,

கொள்கை தேவை [International vocabulary of metrology]

ஆண்பால் பெண்பால்

(எ.கா) நடிகர் நடிகையர், ஆசிரியர் ஆசிரியை, தலைவர் தலைவி

கொள்கை தேவை (gender inclusive or gender exclusive)

எண்கள்

(எ.கா) எண்ணால் எழுதுதல், எழுத்தால் எழுதுதல்

கொள்கை தேவை [Rules for writing numbers: Spelling out numbers]

இணைப்பெயர் (Related Terms)

(எ.கா) வண்டி, சக்கரம், பொறி, தடுப்பான்

ஒருபொருள் பன்மொழி (Synonym ) (Homonym)

(எ.கா) நடுவன் அரசு, மைய அரசு., பருவ இதழ், பருவ வெளியீடு,.

பலபொருள் ஒருசொல் (Polysemes)

(எ.கா) வானிலை, தட்ப வெப்ப நிலை, காலநிலை; படைத்துறை, படையாள், பட்டாளம், பட்டாளர், படையாட்கள்; கோவில் கோயில், ஆலயம், வழிபாட்டுத் தலம்

கிரந்தம்

(எ.கா) அகதி, அகராதி, அகிம்சை, அங்கத்தினர், அஞ்சலி, ஆசனம், ஆசை, ஆச்சரியம், ஆதாரம், ஆபாசம், ஆயுதம், ஆலயம், ஊனம், ஏலம், ஐக்கியம், கலசம், கலாசாலை, கலாச்சாரம், சக்கரம், சக்தி, சந்தர்ப்பம், நகல், நவீன, நாத்திகம், மண்டபம், மரணம், மரியாதை, ருசி, லாபம், வக்கிரம், வங்கி,

[Information seeking behavior] (தகவல் நாடும் முனைவு (Information seeking behavior) அடிப்படையில் கொள்கை தேவை)

மேலதிக தகவல்களுக்கு சில ஆங்கிலக் கட்டுரைகள்

  1. [Controlled vocabulary/terminology concepts]
  2. [Keywords and Controlled Vocabulary Terms]
--Iramuthusamy (பேச்சு) 19:45, 6 ஏப்ரல் 2012 (UTC)

"Imagine a world in which every single human being can freely share in the sum of all knowledge."

"Imagine a world in which every single human being can freely share in the sum of all knowledge." என்ற விக்கியூடக வாசகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு தேவை. பகிருங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:08, 7 ஏப்ரல் 2012 (UTC)

மொத்த அனைத்து அறிவையும் ஒவ்வொரு தனி மனிதனும் இலவசமாக பகிரக்கூடிய உலகத்தை கற்பனை செய்க ! --மணியன் (பேச்சு) 01:48, 7 ஏப்ரல் 2012 (UTC)
"can freely share" என்பதில் "freely" என்பது இலவசமாக என்னும் பொருளை மட்டும் குறிப்பதில்லை. காப்புரிமை போன்ற கட்டுப்பாடுகள் இன்றிப் பகிர்ந்து கொள்வதையே இது குறிக்கிறது. எனவே மணியனின் மொழி பெயர்ப்பில் "இலவசமாக" என்பதற்குப் பதிலாக "கட்டின்றிப்" என்று மாற்றவேண்டும் என்பது எனது கருத்து. "மொத்த அனைத்து அறிவையும்" என்பதையும் சற்று மாற்றினால் நல்லது என்று தோன்றுகிறது. "அனைத்து அறிவுகளின் திரளையும்" என்பது எனது முன்மொழிவு. அனைத்து அறிவுகளின் திரளையும் ஒவ்வொரு தனி மனிதனும் கட்டின்றிப் பகிரக்கூடிய உலகத்தை கற்பனை செய்க!--- மயூரநாதன் (பேச்சு) 03:53, 7 ஏப்ரல் 2012 (UTC)
“ஒவ்வொரு தனி மனிதனும் அனைத்து அறிவுத் திரள்களையும் கட்டின்றி பகிரக்கூடிய உலகத்தைக் கற்பனை செய்க!” என்றிருந்தால் சரியாக இருக்குமா?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 07:35, 7 ஏப்ரல் 2012 (UTC)

திரள்கள் என்று சொல்வது பொருத்தமானதாக அமைவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் அறிவுத் திரள் முழுவதையும் கட்டின்றிப் பகிரக்கூடிய உலகொன்றைக் கற்பனை செய்க! என அமையலாமே. --மதனாஹரன் (பேச்சு) 09:23, 7 ஏப்ரல் 2012 (UTC)


அனைவருக்கும் நன்றி. மதனாஹரனின் இறுதி வடிவம் பொருத்தம் போல் எனக்குப் படுகிறது. இப்போதைக்குப் பயன்படுத்திக் கொள்கிறென். பிறகு இறுதி செய்யலாம். --Natkeeran (பேச்சு) 14:13, 7 ஏப்ரல் 2012 (UTC)
sum of all knowledge என்பதற்கு "அறிவுத் திரள் முழுவதையும்" என்ற மொழி பெயர்ப்புச் சரியாகத் தெரியவில்லை. "உலகிலுள்ள எல்லா அறிவுகளினதும் மொத்த அளவு" என்னும் பொருள் வரவேண்டும் என்பது எனது கருத்து ---மயூரநாதன் (பேச்சு) 18:05, 8 ஏப்ரல் 2012 (UTC)

அறிவுகள் என்று சொல்வது என்னவோ பொருத்தமானதாகத் தெரியவில்லை. அறிவு என்பது பன்மை விகுதி பெற்று வருமா? --மதனாஹரன் (பேச்சு) 13:30, 9 ஏப்ரல் 2012 (UTC)

Picture archiving and communication system - DICOM

ஆங்கிலத்தில் PACS மற்றும் DICOM என்று குறிப்பிடப்படும் இதனை குறித்த கட்டுரைகளை தொடங்கலாமென்று எண்ணி உள்ளேன், இதற்கு பொருத்தமான தமிழ் பெயர் தேவை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 09, ஏப்ரல், 2012.

"புகைப்பட காப்பக மற்றும் தொடர்பு அமைப்பு(PACS)", "மருத்துவத்துறையின் எண்முறை படமாக்கல் மற்றும் தொடர்பு (DICOM)" என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். (குறிப்பு இவை இரண்டும் அஃகுப்பெயர்(acronym) ஆதலால் என்னைப்பொறுத்தவரையில் பெக்ஸ், டைகாம் என பெயரிடுவதே சரியாக இருக்கும். எ-கா லேசர், எய்ட்ஸ்) கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:01, 10 ஏப்ரல் 2012 (UTC)

தங்களுடைய தகவலுக்கு நன்றி. இவை இரண்டிற்கும் தமிழில்,
  • படிமங்கள் சேமிப்பகம் மற்றும் பறிமாற்றகம் (PACS - Picture archiving and communication system)(பேக்ஸ்)
  • மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கம் மற்றும் பறிமாற்றம் (DICOM - Digital Imaging and Communication in Medicine) (டைகாம்)
என பெயர் சூட்ட எண்ணியுள்ளேன்; அஃகுப்பெயராக இருந்தாலும், தமிழில் பெயர் சூட்டி விட்டு ஆங்கில பெயரை வழிமாற்றம் செய்துவிடலாம். (எ- கா எண்ணிம முறை). கருத்து தேவை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 10, ஏப்ரல், 2012.

தமிழில் பெயர் சூட்டுவதே சிறந்தது. கட்டுரையின் உள்ளே ஆங்கில அஃகுப் பெயரையும் அடைப்புக்குள் கொடுத்து விடுங்கள். PACS என்பதற்கு படிம ஆவணமாக்கலும் தொடர்பாடல் முறைமையும் என்றும் DICOM என்பதற்கு மருத்துவத்தில் எண்ணிமப் படிமமாக்கலும் தொடர்பாடலும் என்று பயன்படுத்துவதே மேலும் பொருத்தமாக இருக்கும். மற்றும் என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமானதாகத் தோன்றவில்லை. Archiving என்பது ஆவணமாக்குதலையே குறிக்கும். --மதனாஹரன் (பேச்சு) 11:09, 10 ஏப்ரல் 2012 (UTC)

ஆவணமாக்கல் என்ற சொல் நேரடியாக documentation என்ற பொருளையே சுட்டி நிற்கிறது. ஆவணகமயமாக்கல் !! --Natkeeran (பேச்சு) 14:32, 10 ஏப்ரல் 2012 (UTC)
மதனாஹரன் மற்றும் Natkeeran இருவருக்கும் நன்றிகள், வேண்டுமானால் PACS என்பதனை படிமங்கள் சேமிப்பகமும் பறிமாற்றகமும் எனவும், DICOM என்பதை மருத்துவ படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பறிமாற்ற முறையும் எனவும் பெயர் சூட்டலாம். மேலும் Natkeeran சொன்னது போல ஆவணமாக்கல் என்ற சொல் நேரடியாக documentation என்ற பொருளை குறிக்கும். முறைமை என்ற சொல் PACS-ற்கு பொருந்தாது, வேண்டுமானால் DICOM-ற்கு பொருந்தும். மேலும் கருத்துகளும் கலைச் சொற்களும் தேவை. -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 10, ஏப்ரல், 2012.
சமூகவியல் தளங்களில் system என்பதற்கு முறை, முறைமை போன்ற சொற்களும் அறிவியல் தளங்களில் தொகுதி, அமைப்பு, ஒருங்கியம் போன்ற சொற்களும் பொதுவாக வழங்குகின்றன. ஆவணகம், ஆவணக் காப்பகம், ஆவணக்குவை போன்ற சொற்கள் archive குறிக்கப் பயன்படுகின்றன. --Natkeeran (பேச்சு) 17:28, 10 ஏப்ரல் 2012 (UTC)

கவனிப்புப்பட்டியல் மாற்றம் - மின்னஞ்சல்

நமது கவனிப்ப்புப்பட்டியலில் உள்ள கட்டுரைகளில் மாற்றம் ஏற்பட்டால் மின்னஞ்சல் மூலம் தகவல் பெற wgEnotifWatchlist என்ற தெரிவு மீடியாவிக்கியில் உள்ளது - தற்போது பயனர் பேச்சுப்பக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை மின்னஞ்சல் மூலம் பெறுவது போல. காமன்ஸ், மேல்விக்கி போன்ற திட்டங்களில் பயன்படுத்துகின்றனர். தமிழ் விக்கியிலும் அதைக் கொண்டு வருதல் பயனுள்ளதாக இருக்கும் (சில நாட்களுக்கு முன்னர் புதிய பயனர் ஒருவர் இவ்வசதி போல ஒன்று வேண்டுமென்று கேட்டுள்ளார்). இதனை தமிழ் விக்கிக்கும் செயல்படுத்த (பக்சில்லாவில் வழு பதிய வேண்டும்) சமூகத்தின் இணக்க முடிவு தேவைப்படுகிறது. இதற்கு சமூகத்தின் இசைவைக் கோருகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:47, 10 ஏப்ரல் 2012 (UTC)


 ஆதரவு

 எதிர்ப்பு

தமிழ் விக்கிப்பீடியா நூல் - தமிழ்நாடு அரசு பரிசு - நன்றி

படிமம்:Tamil wikpedia book cover.jpg
தமிழ் விக்கிப்பீடியா நூல்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ‎31 வகைப்பாடுகளில் சிறந்த நூல் மற்றும் நூலாசிரியர், பதிப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நூல்களில் தமிழ் விக்கிப்பீடியா பயனர் தேனி எம்.சுப்பிரமணி என்கிற நான் எழுதிய தமிழ் விக்கிப்பீடியா நூல் கணினியில் துறையின் கீழான வகைப்பாட்டில் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான செய்தி தமிழ்நாடு அரசால் வெளியிடப் பெற்றுள்ளது.பார்க்க தமிழ்நாடு அரசு செய்தி. சென்னையில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் பரிசு வழங்கி சிறப்பிக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறப்பு எனக்குக் கிடைக்க உதவிய அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியா பயனர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள் பல.

சென்னையில் நடைபெற்ற விக்கிப்பீடியா 10 ஆம் ஆண்டு விழா நிகழ்வில் இந்நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது குறித்தும் நன்றியுடன் இங்கு நினைவு கூற விரும்புகிறேன். இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் என் நன்றியை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள் பல.

2010 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் விக்கிப் பக்கப் போட்டிக்கான குழுவிலும் என்னை ஒருவராக இடம் பெறச் செய்த தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள் பல.

தமிழ் இணைய மாநாட்டில் “தமிழ் விக்கிப்பீடியா எனும் தகவல் கலைக்களஞ்சியம்” எனும் தலைப்பில் என் கட்டுரை வாசிப்பு நிகழ்வு இருந்தது என்பதையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

மேலும் இம்மாநாட்டில் “தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ் வலைப்பூக்கள்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்விலும் தமிழ் விக்கிப்பீடியா சார்பில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டதையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

தொடர்ந்து என் சிறப்பிற்கு உதவி வரும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கும், என்னுடன் இணைந்து செயல்படும் அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியா பயனர்களுக்கும் மீண்டும் என் இதயப்பூர்வமான நன்றிகள் பல.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:37, 10 ஏப்ரல் 2012 (UTC)


வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 17:29, 10 ஏப்ரல் 2012 (UTC)
நண்பரே! மிகவும் மகிழ்ச்சி. மேலும் பற்பல நூல்களை எழுதுங்கள். இப்பரிசு தமிழ் விக்கிப்பீடியாவின் பெயரை பல்வேறு மட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறேன்.--பரிதிமதி (பேச்சு) 01:16, 11 ஏப்ரல் 2012 (UTC)
வாழ்த்துகள் தேனியார்.--Kanags \உரையாடுக 01:25, 11 ஏப்ரல் 2012 (UTC)

வாழ்த்துக்கள்! --மதனாஹரன் (பேச்சு) 01:43, 11 ஏப்ரல் 2012 (UTC)

வாழ்த்துக்கள் தேனி எம்.சுப்பிரமணி.மேலும் மேலும் தங்கள் புகழ் வளரட்டும். தமிழ்விக்கிபீடியாவில் பங்களித்தவன் என்ற வகையில் தமிழ்விக்கிபீடியாவிற்கு தங்களால் ஆற்றப்படும் பணிபற்றி நான் நன்கு அறிவேன். தங்கள் பணி தொடரப் பிரார்த்திக்கின்றேன்.
இந்த வாரக் கூட்டு முயற்சியான மார்க்சியம் கட்டுரையை மேம்படுத்தி உதவுங்கள். நன்றி.