இராசேந்திர பிரசாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ur:راجندرہ پرساد
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ka:რაჯენდრა პრასადი
வரிசை 193: வரிசை 193:
[[id:Rajendra Prasad]]
[[id:Rajendra Prasad]]
[[ja:ラージェーンドラ・プラサード]]
[[ja:ラージェーンドラ・プラサード]]
[[ka:რაჯენდრა პრასადი]]
[[kn:ಬಾಬು ರಾಜೇಂದ್ರ ಪ್ರಸಾದ್]]
[[kn:ಬಾಬು ರಾಜೇಂದ್ರ ಪ್ರಸಾದ್]]
[[la:Rajendra Prasad]]
[[la:Rajendra Prasad]]

16:59, 5 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

டாக்டர் இராசேந்திர பிரசாத்
படிமம்:Rajendra Prasad portrait.jpg
இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவர்
பதவியில்
சனவரி 26, 1950 – மே 13 1962
Vice Presidentசர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (1952-1962)
முன்னையவர்சி. இராஜகோபாலாச்சாரி
பின்னவர்சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1884-12-03)திசம்பர் 3, 1884
செராடெ, பீகார், இந்தியா
இறப்புபெப்ரவரி 28, 1963(1963-02-28) (அகவை 78)
துணைவர்ராஜ்வன்சி தேவி

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் Dr. Rajendra Prasad இந்தி: डा॰ राजेन्द्र प्रसाद; 3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர்.

இளமை

இவர் 1884ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பீகாரின் சிவான் எனுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மகாவீர சாகி பெர்சிய மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் தேர்ந்திருந்தார். இவரது தாயார் கமலேசுவரி தேவி சமயப் பற்றுள்ள ஒரு மாது ஆவார். சிறு வயதில் தன் குடும்பத்தாராலும் நண்பர்களாலும் ‘ராஜன்’ என அழைக்கப்பட்டார். தனது 12 ஆம் வயதில் ராஜவன்சி தேவி என்ற பெண்ணை மணந்தார். திருமணத்திற்குப் பின்பு பிரசாத் தனது தமையனார் மகேந்திர பிரசாத்துடன் வசித்து வந்தார்.

கல்வி

இராஜேந்திர பிரசாத்திற்கு ஐந்து வயதானபோது ஒரு இஸ்லாமிய மௌல்வியிடம் (tutelage of a Moulavi) பெர்சியம், இந்தி மற்றும் கணிதம் கற்க இவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.சாப்ரா மாவட்டத்திலுள்ள பள்ளியில் பிரசாத் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பின்னர் டி. கே கோஷ் அகாடமியில் இரண்டாண்டு பயின்றார். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி மாதம் ரூ.30 உதவித் தொகைப் பெற்று தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று 1907ம் ஆண்டு பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்தில் பீகார் மாணவர் அவையை உருவாக்கினார் இராசேந்திர பிரசாத். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும் பின்னர் கல்லூரி முதல்வராகவும் செயலாற்றியுள்ளார். பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே சட்டத்தில் மேற்படிப்பு படித்து தேர்வில் முதல் மாணவனாக தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர் சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.


விடுதலைப்போரில் ஈடுபாடு

மிகப் புகழ் பெற்ற வழக்குரைஞராக பணியாற்றி வந்த இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார். 'வெள்ளையனே வெளியேறு' என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைவாசத்திற்குப் பின் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி விடுதலையானார்.

பதவி

1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார்.

விருது

இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார்.

இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

எண் பெயர் படம் பதவி ஏற்றது பதவிக் காலம் முடிவு துறை தேர்தல்
01 டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் படிமம்:Dr Rajendra Prasad.jpg ஜனவரி 26, 1950 மே 13, 1962 விடுதலை வீரர் 1952, 1957
02 சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மே 13, 1962 மே 13, 1967 மெய்யியலாளர், கல்வியியலாளர் 1962
03 ஜாகீர் உசேன் படிமம்:Zahir Hussain.jpg மே 13, 1967 மே 3, 1969 கல்வியியலாளர் 1967
* வி. வி. கிரி படிமம்:Vvgiri.jpg மே 3, 1969 ஜூலை 20, 1969 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி
* முகம்மது இதயத்துல்லா ஜூலை 20, 1969 ஆகஸ்டு 24, 1969 உச்ச நீதிமன்ற நீதிபதி
04 வி. வி. கிரி படிமம்:Vvgiri.jpg ஆகஸ்டு 24, 1969 ஆகஸ்டு 24, 1974 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி 1969
05 பக்ருதின் அலி அகமது படிமம்:Fakhruddin Ali Ahmed.jpg ஆகஸ்டு 24, 1974 பெப்ரவரி 11, 1977 அரசியல்வாதி 1974
* பஸப்பா தனப்பா ஜட்டி பெப்ரவரி 11, 1977 ஜூலை 25, 1977 வழக்கறிஞர், அரசியல்வாதி
06 நீலம் சஞ்சீவி ரெட்டி படிமம்:Neelam Sanjeeva Reddy.jpg ஜூலை 25, 1977 ஜூலை 25, 1982 விவசாயி, அரசியல்வாதி 1977
07 ஜெயில் சிங் படிமம்:Giani Zail Singh.jpg.jpg ஜூலை 25, 1982 ஜூலை 25, 1987 விடுதலை வீரர், அரசியல்வாதி 1982
08 ரா. வெங்கட்ராமன் ஜூலை 25, 1987 ஜூலை 25, 1992 தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி 1987
09 சங்கர் தயாள் சர்மா ஜூலை 25, 1992 ஜூலை 25, 1997 விடுதலை வீரர், அரசியல்வாதி 1992
10 கே. ஆர். நாராயணன் ஜூலை 25, 1997 ஜூலை 25, 2002 எழுத்தாளர், வெளிநாட்டுத் தூதுவர், அரசியல்வாதி 1997
11 ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஜூலை 25, 2002 ஜூலை 25, 2007 அறிவியலாளர், பொறியாளர் 2002
12 பிரதீபா பட்டீல் ஜூலை 25, 2007 பதவியில் அரசியல்வாதி 2007

இவற்றையும் காண்க



"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசேந்திர_பிரசாத்&oldid=1080495" இலிருந்து மீள்விக்கப்பட்டது