கரும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40: வரிசை 40:
File:Jiggery ball.jpg|உருண்டை வெல்லம்
File:Jiggery ball.jpg|உருண்டை வெல்லம்
படிமம்:A aesthetic sugarcane sales.JPG|கரும்பு விற்பனை
படிமம்:A aesthetic sugarcane sales.JPG|கரும்பு விற்பனை
படிமம்:Starr 030523-0142 Saccharum officinarum.jpg|வயலில் கரும்பு
</gallery></center>
</gallery></center>



22:25, 29 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கரும்பு
வெட்டப்பட்ட கரும்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
சக்கரம் ஆபிசினேரம்

கரும்புஎன்பது சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினேரம். இது 'கிராமினோ' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, உண்பதற்கு இனிக்கும் சர்க்கரை நிறைந்த ஒரு இடை தட்ப வெப்ப நிலைத் தாவரம் ஆகும்.வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரும் உலகெங்கும் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர்களில் வானிகப் பயிராக கரும்பு பயிரிடப்படுகிறது. இது நீண்ட இழைமத் தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாக வளரும் இயல்புடையது. கரும்பு 6 அடி முதல் 19 அடி உயரம் வரை வளரக் கூடியது. புல் இனத்தைச் சேர்ந்த தாவரமான கரும்பு. மக்காச்சோளம், கோதுமை, அரிசி, மற்றும் பல தீவனப் பயிர்கள் உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவமான தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கரும்பில் பல கலப்பினங்களை உருவாக்கியுள்ளனர். கரும்பு ஒரு பணம் கொழிக்கும் வாணிகப் பயிராகும்.பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன. கரும்பிலிருந்து பெறப்படும் முக்கியப் பொருள் சுக்ரோஸ் ஆகும். இது கரும்பின் தண்டுப்பகுதிகளில் சேர்த்து வைக்கப்படுகிறது. கரும்பாலைகளில் இதன் சாறினைப் பிழிந்து தூய்மைப்படுத்தப்பட்ட சுக்ரோஸ் பிரித்தெடுக்கப்படுகிறது.

வரலாறு

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது. 'சர்க்கரை' என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.


தமிழர் பண்பாட்டில் கரும்பு

கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்று தமிழர் கருதுவர். ஆகையால், தைப்பொங்கல் போன்ற விழா நாட்களில் கரும்பு பகிர்ந்து மகிழ்வது வழமை.

கரும்பு என ஆரம்பிக்கும் தமிழ் பெயர்கள்:
கரும்பு, கரும்பமுதம், கரும்பமுது, கரும்பரசி, கரும்பழகி, கரும்பிசை, கரும்பூராள், கரும்பெழிலி, கரும்பு, கரும்புநகை, கரும்புமொழி, கரும்புவில், கரும்புவிழி.

கரும்புடன் தொடர்புடைய பழமொழிகள்:

  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
  • கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?
கரும்பு
கரும்பு சாறெடுத்தல்

காட்சி

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்பு&oldid=1039755" இலிருந்து மீள்விக்கப்பட்டது