அழகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: my:အလှတရား
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Әсемдік
வரிசை 46: வரிசை 46:
[[it:Bellezza]]
[[it:Bellezza]]
[[ja:美]]
[[ja:美]]
[[kk:Әсемдік]]
[[kn:ಸೌಂದರ್ಯ]]
[[kn:ಸೌಂದರ್ಯ]]
[[ko:미]]
[[ko:미]]

10:44, 16 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

மேலைத்தேசக் கலையில் அழகுக்கு முதன்மை இடம் உண்டு. மேலுள்ள ஓவியம் ஒரு எடுத்துக்காட்டு.

அழகு என்பது, ஒருவருக்கோ, இடத்துக்கோ, பொருளுக்கோ அல்லது ஒரு எண்ணத்துக்கோ இருக்கக்கூடிய ஒரு இயல்பு ஆகும். இவ்வியல்பு அவற்றைக் காண்போருக்கு மகிழ்ச்சி, திருப்தி என்பவற்றைக் கொடுக்கக்கூடிய காட்சி அநுபவத்தை வழங்கக்கூடியது. அழகியல், சமூகவியல், சமூக உளவியல், பண்பாடு ஆகிய துறைகளின் ஒரு பகுதியாக அழகு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு பண்பாட்டு உற்பத்தி என்றவகையில் அழகு பெருமளவு வணிகமயமாகி விட்டது. மனிதர்கள் தொடர்பில் சிறந்த அழகு என்பது மற்றவர்களால் விரும்பப்படும் அல்லது ஒரு பண்பாட்டில் அழகு என்று ஏற்றுக்கொள்ளப்படும் அம்சங்களைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு உள்ள இயல்பு எனலாம். வரலாற்றில், ஏழாம் கிளியோபாட்ரா, டிரோயின் ஹெலன், மர்லின் மன்றோ போன்ற பலர் அழகின் சின்னங்களாக விளங்கியிருக்கின்றனர்.


தற்சார்புத் தன்மை கொண்ட அழகு என்னும் உணர்வு, அவ்வுணர்வைத் தூண்டும் பொருள் இயற்கையுடன் இயைபும், சமநிலையும் கொண்டதாக இருக்கும் நிலையுடன் தொடர்புபட்டது. இந்நிலை, கவர்ச்சியையும், உணர்வு சார்ந்த நலத்தையும் கொடுக்கக்கூடியது.

அழகின் வரலாறு

அழகு தொடர்பான மிகவும் முந்திய கோட்பாடுகள் சாக்கிரட்டீசுக்கு முந்திய கால கிரேக்க மெய்யியலாளர்களான, பித்தாகரஸ் போன்றவர்களின் ஆக்கங்களில் காணப்படுகின்றன. பித்தாகரஸ் சார்ந்த சிந்தனையாளர்கள் அழகுக்கும், கணிதத்துக்கும் வலுவான தொடர்பு இருப்பதாக நம்பினர். சிறப்பாக, தங்க விகிதம் (golden ratio) எனப்படும் விகிதத்தில் அளவு விகிதம் கொண்ட பொருட்கள் கூடுதல் அழகுள்ளனவாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகு&oldid=1023571" இலிருந்து மீள்விக்கப்பட்டது