நடத்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: yi:אויפפיר
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Мінез-құлық
வரிசை 55: வரிசை 55:
[[kaa:Minez-qulıq]]
[[kaa:Minez-qulıq]]
[[kbd:ЩытыкӀэ]]
[[kbd:ЩытыкӀэ]]
[[kk:Мінез-құлық]]
[[ko:행동]]
[[ko:행동]]
[[la:Mores]]
[[la:Mores]]

10:00, 16 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

நடத்தை என்பது ஒரு பொருளின் அல்லது உயிரினத்தின் செயலை அல்லது எதிர்ச் செயலைக் குறிக்கும்.

நடத்தை வகைகள்

நடத்தல், பேசுதல், உடை அணிதல் ஆகியவை வெளிப்படையாக அடையாளாப்படுத்தக்கூடிய நடத்தைகள். சிந்தித்தல், பயமடைத்தல் போன்றவை இலகுவாக அவதானிக்காமுடியாத தனிமை நடத்தைகள் ஆகும்.[1]

பொதுவாக ஒரு செயல் சூழல் தொடர்பிலேயே ஏற்படுகிறது. நடத்தை, உணர்வு நிலையிலோ, உணர்வற்ற நிலையிலோ நடைபெறலாம். அத்துடன் இது வெளிப்படையாக அல்லது மறைவாக, விரும்பி அல்லது கட்டாயப்படுத்தப்பட்டும் கூட நடைபெறக்கூடும்.

உயிரியல் விளக்கம்

விலங்குகளில் உயிரியல் நடத்தை அகச்சுரப்பித் தொகுதியினாலும் நரம்புத் தொகுதியினாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நடத்தையின் சிக்கல் தன்மை அதன் நரம்புத் தொகுதியின் சிக்கல் தன்மையில் தங்கியுள்ளது. பொதுவாக, சிக்கலான நரம்புத் தொகுதிகளுடன் கூடிய உயிரினங்கள், புதிய எதிர் வினைகளைக் கற்றுக்கொண்டு தமது நடத்தைகளை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் தகுதி கொண்டவையாக இருக்கின்றன.

சமூக அறிவியல் நோக்கில் நடத்தை

மனிதர் தொடர்பிலும், ஏனைய உயிரினங்கள், பொருள்கள் தொடர்பிலும், நடத்தைகளை வழமையானவை, வழமைக்கு மாறானவை, ஏற்றுக்கொள்ளத் தக்கவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை எனப் பிரித்துக் காண முடியும். மனிதர், நடத்தைகளின் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை சமூக நெறிமுறைகளின் அடிப்படையில் தீர்மானிப்பதோடு, அந் நடத்தைகளைச் சமூகக் கட்டுப்பாடுகளினால் நெறிப்படுத்துகின்றனர். சமூகவியலில், நடத்தை மனிதனின் முக்கிய அடிப்படைச் செயலாகக் கருதப்படுகிறது. விலங்கின நடத்தைகளை, ஒப்பீட்டு உளவியல், நடத்தையியல், நடத்தைச் சூழலியல், சமூக உயிரியல் ஆகிய துறைகள் ஆய்வு செய்கின்றன.

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

  1. கேரி மாட்டின், யோசப் பியர். (2005). நடத்தைத் திருத்தம். நியு யேர்சி: பிறன்டிசு கோல்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடத்தை&oldid=1023537" இலிருந்து மீள்விக்கப்பட்டது