சிரேயாஸ் ஐயர்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சிரேயாஸ் சந்தோஷ் ஐயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 6 திசம்பர் 1994 செம்பூர், மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | ஸ்ரீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 219) | 10 டிசம்பர் 2017 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 2 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 41 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 70) | 1 நவம்பர் 2017 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 8 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 41 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013/14- தற்போது வரை | மும்பை துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–தற்போதுவரை | டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 41) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 26 பெப்ரவரி 2021 |
சிரேயாஸ் சந்தோஷ் ஐயர் (Shreyas Santosh Iyer (பிறப்பு: டிசம்பர் 6, 1994 ) இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். வலது கை மட்டையாளரான இவர் அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராகவும் செயல்படுகிறார். 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியில் விளையாடினார். உள்ளூர்ப்போட்டிகளில் மும்பை மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக்கில் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவராக உள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்
[தொகு]பெப்ரவரி , 2015 ஆம் ஆண்டில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் 2.6 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. இந்தத் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 439 ஓட்டங்களை எடுத்தார். இவரின் சராசரி 33.76 ஆகும். இவரின் ஸ்டிரைக் ரேட் 128.36 ஆக இருந்தது. 2015 ஆம் ஆண்டிற்கான முக்கியமான வீரர்களில் (எமெர்ஜிங் பிளேயர்) இவருக்கு 9 ஆவது இடம் கிடைத்தது. [1]
2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி அணி நிர்வாகம் இவரை தக்கவைத்தது. ஏப்ரல் 25,2018 இல் கவுதம் கம்பீருக்குப் பதிலாக இவரை அணி நிர்வாகம் தலைவராக நியமித்தது.[2][3][4] இதன்மூலம் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் குறைந்த வயதில் டெல்லி அணித் தலைவர் ஆனவர்களில் முதலிடத்திலும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தையும் பிடித்து சாதனையைப் படைத்தார்.[5] அப்போது இவருக்கு வயது 23 ஆண்டுகள் 142 நாட்கள் ஆகும். இவர் முதன்முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தலைவராக விளையாடினார். இந்தப் போட்டியில் சிரேயாஸ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 93 ஓட்டங்கள் எடுத்து அணியின் மொத்த ஓட்டம் 219 ஆவதற்கு உதவினார். இதில் 10 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்தப் போட்டியில் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.[6][7]
சர்வதேச போட்டிகள்
[தொகு]மார்ச் , 2017 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. இதில் விராட் கோலிக்குப் பதிலாக நான்காவது போட்டியில் விளையாடினார். இவர் பிரதி விளையாட்டு வீரராக களத்தடுப்பாட்டத்தில் விளையாடி இசுடீபன் ஓ கீஃபேவை ரன் அவுட் ஆக்கினார்.[8]
அக்டோபர்,2017 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரில் விளையாடும் அணியில் இடம்பெற்றார்.[9] ஆனால் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் நவம்பர் 1 இல் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். ஆனால் துடுப்பாட வாய்ப்பு கிடைக்கவில்லை.[10][11] பின் நவம்பர் 4 இல் நடைபெற்ற போட்டியில் 21 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார்.
நவமப்ர், 2017 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் அறிமுகமானார்.[12]
சான்றுகள்
[தொகு]- ↑ "YouTube". பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
- ↑ "Iyer replaces Gambhir as Daredevils captain" (in en). Cricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1144342.html?object=642519.
- ↑ "Gambhir Steps Down as DD Captain, Iyer Handed Reigns" (in en). Delhi Daredevils. 2018-04-25 இம் மூலத்தில் இருந்து 2018-04-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180426145003/https://www.delhidaredevils.com/gambhir-steps-down-as-dd-captain-iyer-handed-reigns.
- ↑ "What are Shreyas Iyer's captaincy credentials?". ESPNcricinfo. http://www.espncricinfo.com/story/_/id/23314394/what-shreyas-iyer-captaincy-credentials?.
- ↑ NDTVSports.com. "IPL Highlights, DD vs KKR: Delhi Daredevils Beat Kolkata Knight Riders By 55 Runs – NDTV Sports" (in en). NDTVSports.com. https://sports.ndtv.com/indian-premier-league-2018/ipl-2018-delhi-daredevils-vs-kolkata-knight-riders-live-cricket-score-1843944.
- ↑ "Newly-crowned Iyer revives DD's campaign with a massive win" (in en). Cricbuzz. http://www.cricbuzz.com/cricket-news/101783/ipl-2018-delhi-daredevils-vs-kolkata-knight-riders-match-report-cricket-dd-vs-kkr-shreyas-iyer-prithvi-shaw-andre-russell-trent-boult.
- ↑ "IPL 2018: Shreyas Iyer smashes 40-ball 93 as Delhi Daredevils beat Kolkata Knight Riders" (in en). www.hindustantimes.com. 2018-04-27. https://m.hindustantimes.com/cricket/ipl-2018-shreyas-iyer-smashes-40-ball-93-to-power-delhi-daredevils-vs-kolkata-knight-riders/story-LuBa7NfeOYxK2HP2nNbBVI.html.
- ↑ "Shreyas Iyer called up as cover for Kohli". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 March 2017.
- ↑ "Iyer, Siraj called up for New Zealand T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
- ↑ "1st T20I (N), New Zealand tour of India at Delhi, Nov 1 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
- ↑ "Rohit, Dhawan break both records and New Zealand". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/series/18029/report/1120093/. பார்த்த நாள்: 1 November 2017.
- ↑ "Kohli rested for Sri Lanka ODIs; Rohit to lead". ESPN Cricinfo. 27 November 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
வெளியிணைப்புகள்
[தொகு]- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சிரேயாஸ் ஐயர்
- Player Profile: சிரேயாஸ் ஐயர் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து