சியாம் செல்வதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாம் செல்வதுரை (2011)

சியாம் செல்வதுரை (பி. 1965) கனேடிய எழுத்தாளர். இவருடைய ஃபன்னி போய் (Funny Boy, 1994) நாவலுக்கு கனேடிய விருதான Books in Canada First Novel Award கிடைத்தது. இவரது அடுத்த நாவல் சினமன் கார்டன்ஸ் (Cinnamon Gardens, 1998).

இவர் கொழும்பு, இலங்கையில் பிறந்தவர். தமிழ் மற்றும் சிங்கள குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர். சமபால் உறவுக்காரர்.

1983-இல் கொழும்பில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து குடும்பத்தோடு கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். யோர்க் பல்கலைக்கழகத்தில் B.F.A. பட்டம் பெற்றிருக்கிறார். இவர் தற்போது டொராண்டோவில் வசித்து வருகிறார்.

விருதுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_செல்வதுரை&oldid=2689371" இலிருந்து மீள்விக்கப்பட்டது