உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்து நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபாரத இதிகாச கால நாடுகள்


சிந்து நாடு (Sindhu kingdom) பரத கண்டத்தின் மேற்குப் பகுதியில் சிந்து ஆறு கடலில் கலக்கும் தற்கால பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் அமைந்திருந்தது. சிந்து நாடு பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் உள்ளது. சிந்து நாட்டை சிபியின் மகன்களில் ஒருவரான வீரசதர்பன் நிறுவியதாக கருதப்படுகிறது. சிந்து நாட்டு மக்களை சைந்தியர்கள் என்றும் சைந்தவான்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.[1] சிந்து நாட்டின் புகழ் பெற்ற ஆட்சியாளன் ஜயத்திரதன், குரு நாட்டு இளவரசியும், துரியோதனனின் தங்கையுமான துச்சலையின் கணவன் ஆவான். சௌவீர நாடு மற்றும் சிவி நாடு, சிந்து நாட்டின் சிறந்த கூட்டாளிகள் ஆவார்.

மகாபாரதக் குறிப்புகள்

[தொகு]

விருத்தசத்திரனின் மகன் சிந்து நாட்டு மன்னர் ஜெயத்திரதன் ஆவார். (3:262) சிந்து, சௌவீர நாடு, சிவி நாடு மற்றும் சில நாடுகளுக்கு மாமன்னர் என ஜெயத்திரதன் அழைக்கப்பட்டான் (மகாபாரதம் 3:265). ஜெயத்திரதனுக்கு துச்சலை (1:117) தவிர, காந்தார நாடு மற்றும் காம்போஜ நாட்டு இளவரசிகளையும் மணந்தவர். (மகாபாரதம் 11: 22)

குருச்சேத்திரப் போரில், அபிமன்யு இறக்க காரணமான சிந்து நாட்டரசன் ஜயத்திரதனை அருச்சுனன் கொன்றார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "From Sindhu To Hindu". AncientVoice: Eternal Voices from the past. பார்க்கப்பட்ட நாள் 14 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_நாடு&oldid=2282256" இலிருந்து மீள்விக்கப்பட்டது