சித்தோர்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தோர்கர்
சித்தூர்

चित्तौड़गढ़ शहर
நகரம் & கோட்டை
அடைபெயர்(கள்): பெருமையும் மகிமையும் கொண்ட நகரம், शौर्य नगरी, சித்தூர்
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்சித்தோர்கார் மாவட்டம்
தோற்றுவித்தவர்சித்திராங்கத மோரி
பெயர்ச்சூட்டுசித்திரங்கத மோரி
அரசு
 • நிர்வாகம்சித்தோர்கர் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்28 km2 (11 sq mi)
ஏற்றம்3,946 m (12,946 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,84,439
 • தரவரிசை121
 • அடர்த்தி6,600/km2 (17,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, மேவாரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்312001
தொலைபேசி குறியீடு+91-01472-XXXXXX
வாகனப் பதிவுRJ-09
இணையதளம்www.chittorgarh.rajasthan.gov.in
uitchittorgarh.nic.in

சித்தோர்கார் அல்லது சித்தூர் (Chittorgarh) (இந்தி: चित्तौड़गढ़) ஒலிப்பு மேற்கு இந்திய மாநிலமான இராஜஸ்தானின் சித்தோர்கார் மாவட்டத்தின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். காம்பிர் ஆற்றாங்கரையில் அமைந்த இந்நகரம் முன்னர் மேவார் சிசோடியா இராசபுத்திர குலத்தின் தலைநகராக விளங்கியது. மேவார் இராச்சியத்தின் தலைநகராக சித்தூர் விளங்கியது.[1]

ராணி பத்மினி மற்றும் ராணி கர்ணாவதி, சித்தூர் கோட்டையை எதிரிகளிடமிருந்து போரிட்டுக் காத்தனர். 1303இல் அலாவுதீன் கில்சி சித்தூர் கோட்டையை முற்றுகையிட்டார், 1598இல் முகலாயப் பேரரசர் அக்பர் சித்தூரை கைப்பற்றினார். சித்தூர் கோட்டை இந்தியாவின் பெரிய கோட்டைகளில் ஒன்றாகும். சித்தூரின் மீராபாய் சிறந்த கிருஷ்ண பக்தை ஆவார்.

கூட்டுத் தீக்குளிப்பு[தொகு]

சித்தூர் கோட்டையை இசுலாமிய மன்னர்கள் கைப்பற்றும் போது, இராசபுத்திர அரச குலப் பெண்கள் எதிரி மன்னர்களின் கையில் சிக்கிச் சீரழிவதைவிட, பெரும் தீ வளர்த்து அதில் கூட்டுத்தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்கள்.

போக்குவரத்து[தொகு]

தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் சித்தூர் நகரம் அமைந்துள்ளதால், நாட்டின் அனைத்து நகரங்களுடன் இருப்புப்பாதை மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்கள்[தொகு]

சித்தோர்கார் கோட்டையின் உட்புறக் காட்சி
சித்தோர்கார் கோட்டையில் கோயில்

கல்வி[தொகு]

  1. மேவார் பல்கலைக்கழகம்
  2. சைனிக் பள்ளி
  3. கேந்திரிய வித்தியாலம்
  4. புனித பவுல் உயர்நிலை பள்ளி
  5. தில்லி பப்ளிக் ஸ்கூல்
  6. ஜவஹர் நவோதய வித்தியாலயம்
  7. பிர்லா மேனிலைப் பள்ளி Birla Shiksha Kendra, Chanderiya, Chittorgarh
  8. மகாராணா பிரதாப் அரசு மேற்படிப்பு கல்லூரி
  9. ஆர் என் டி சட்டக் கல்லூரி
  10. இராஜஸ்தான் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி (RIET)

தொழிற்சாலைகள்[தொகு]

  • இந்துஸ்தான் சிங்க் தொழிற்சாலை
  • பிர்லா சிமெண்ட் தொழிற்சாலை

சித்தூர் காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chittorgar

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chittorgarh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Chittorgarh
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தோர்கார்&oldid=3618082" இலிருந்து மீள்விக்கப்பட்டது