சிட்டி ஹால், லண்டன்

ஆள்கூறுகள்: 51°30′17.26″N 0°4′43.13″W / 51.5047944°N 0.0786472°W / 51.5047944; -0.0786472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்டி ஹால்
City Hall
சிட்டி ஹால்
Lua error in Module:Mapframe at line 384: attempt to perform arithmetic on local 'lat_d' (a nil value).
பொதுவான தகவல்கள்
முகவரிஐக்கிய இராச்சியம்,
இலண்டன்,
த குயின்ஸ் வாக்
ஆள்கூற்று
தற்போதைய குடியிருப்பாளர்இலண்டன் பெருநகர குழுமம்
நிறைவுற்றது2002; 22 ஆண்டுகளுக்கு முன்னர் (2002)
உரிமையாளர்இலண்டன் பெருநகர வளர்ச்சி லிமிடெட்
உயரம்45 m[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)நார்மன் ஃபாஸ்டர்
கட்டிடக்கலை நிறுவனம்ஃபோஸ்டர் மற்றும் பங்குதாரர்கள்
அமைப்புப் பொறியாளர்அரூப் குரூப் லிமிடெட்
வலைதளம்
www.london.gov.uk/city-hall

சிட்டி ஹால் (City Hall) என்பது லண்டன் பெருநகர அமைப்பு, லண்டன் மேயர் அலுவலகம், லண்டன் சட்டமன்ற அரங்கு ஆகியவை அமைந்த கட்டிடம் ஆகும். இது கோபுரப் பாலம் அருகே தேம்சு ஆற்றின் தென்பகுதியில், சவுத்வெர்க்கில் அமைந்துள்ளது. கட்டிடக்கலை நிபுணரான நார்மன் ஃபாஸ்டரால் வடிவமைக்கப்பட்ட இக் கட்டிடமானது லண்டன் பெருநகர அமைப்பு உருவாக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2001 சூலையில் திறக்கப்பட்டது.

பின்னணி[தொகு]

லண்டன் பெருநகர அமைப்பு அதன் முதல் இரண்டு ஆண்டுகள், வெஸ்ட்மின்ஸ்டரில் ரோம்னே ஹவுஸ், மார்ஷம் தெருவில் இயங்கியது.[2] லண்டன் சட்டமன்றக் கூட்டங்கள் மார்மன் தெருவில் உள்ள ஈமானுவேல் சென்டரில் நடந்தன.[3]

சிட்டி ஹால் £43 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.[4] இந்தக் கட்டிடமானது லண்டன் பெருநகர அமைப்புக்கு சொந்தமானது அல்ல என்றாலும், அதற்கு 25 ஆண்டு வாடகை குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.[5]   2011 சூனில், இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், இக்கட்டிடமானது 2012 இலண்டன் ஒலிம்பிக் காலத்தில் லண்டன் ஹவுஸ் என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.[6]

வடிவமைப்பு[தொகு]

லண்டன் சிட்டி ஹாலின் உட்புறம் உள்ள வளைந்த மாடிப்படி
லெகோலாண்ட் வின்ட்சர் நகரில் உள்ள லண்டன் சிட்டி ஹாலின் மாதிரி
கூடம்

சிட்டி ஹால் கட்டிடமானது, 19,000 சதுர அடி பரப்பில் கட்டுப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 2,100 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. பந்து போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும் இந்தக் கட்டிடம் இரவில் மின் விளக்குகளின் வெளிச்சத்தில் தன்னுடைய பிரம்மாண்ட வடிவமைப்பை காட்டுவதாக உள்ளது. இதன் வெளிபுற கட்டுமானத்துக்கு மூன்றடுக்குக் கண்ணாடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடம், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதால், லண்டன் நகரில் உள்ள மற்ற கட்டிடங்களுடன் ஒப்பிடும்போது இந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேறும் கார்பன் டைஆக்சைடின் அளவு மிகவும் குறைவு. இதில் பொருத்தப்பட்டுள்ள சூரியத் தகடுகளில் இருந்து பெறப்படும் மின்சாரமானது சிட்டி ஹால் முழுவதும் உள்ள மின்சாரத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மின்சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டிடத்தில் குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி இரண்டுமே பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. City Hall on Emporis.com
  2. "Greater London Authority – Press Release". Legacy.london.gov.uk. 15 March 2001. Archived from the original on 21 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
  3. "London Assembly meeting – 24 May 2000". Legacy.london.gov.uk. Archived from the original on 17 August 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
  4. "SPICe Briefing" Retrieved on 2010-03-01
  5. "Inside City Hall" Retrieved 2010-03-01 பரணிடப்பட்டது 4 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம்
  6. London SE1 website team London SE1 community website. "City Hall to be renamed 'London House' during 2012 Olympics [15 April 2011]". London-se1.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  7. ரேணுகா (10 நவம்பர் 2018). "சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநகராட்சிக் கட்டிடம்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டி_ஹால்,_லண்டன்&oldid=3577209" இலிருந்து மீள்விக்கப்பட்டது