சாந்தி சுவரூப் பட்நாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தி சுவரூப் பட்நாகர்
சாந்தி சுவரூப் பட்நாகர்
பிறப்பு(1894-02-21)21 பெப்ரவரி 1894
பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு1 சனவரி 1955(1955-01-01) (அகவை 60)
புது தில்லி, இந்தியா
வாழிடம்இந்தியா
குடியுரிமைஇந்தியா
தேசியம் இந்தியர்
துறைவேதியல்
பணியிடங்கள்அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பஞ்சாப் பல்கலைக் கழகம்
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
ஆய்வு நெறியாளர்பிரடெரிக் டொனன்
அறியப்படுவதுஅறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம்
விருதுகள்பத்ம பூஷன் (1954)
சர் (1941)
OBE (1936)

எஸ். எஸ் பட்நாகர் என்றறியப்படும் சாந்தி சுவரூப் பட்நாகர்(Sir Shanti Swaroop Bhatnagar:இந்தி: , OBE, FRS, 21 பிப்ரவரி, 1894 – 1 ஜனவரி, 1955) ஒரு நன்கறியப்பட்ட இந்திய இயற்பியலாளரும் அறிவியலறிஞரும் ஆவார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு அமைக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் முதல் இயக்குநராக பணியாற்றியவர். 1894 இல் தற்போது பாகிஸ்தானிலுள்ள ஷாப்பூர் எனுமிடத்தில் பிறந்தவர். ஓர் ஆங்கிலேய நிறுவனம் எண்ணெய்க் கிணறு தோண்டும்போது ஏற்பட்ட தொழில் நுட்பச் சிக்கலை எளிய முறையில் தீர்த்து வைத்தவர். இந்தியாவில் ஆய்வு மையங்கள் தோன்றக் காரணமானவர். பெட்ரோலியக் கழிவுகளைப் பயன்படு பொருளாக மாற்றுவதற்கு வழிமுறைகள் கண்டறிந்தவர். இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றவர். இவருடைய பெயரால் சாந்தி சுவரூப் பட்நாகர் விருது வழங்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_சுவரூப்_பட்நாகர்&oldid=3356933" இலிருந்து மீள்விக்கப்பட்டது