சாகேரி
சாகேரி
இரமாதேவி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°25′N 80°25′E / 26.41°N 80.41°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | கான்பூர் நகரம் |
அரசு | |
• நிர்வாகம் | நகர பகுதி மேம்பாட்டு ஆணையம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 5.21 km2 (2.01 sq mi) |
ஏற்றம் | 123 m (404 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,526 |
• அடர்த்தி | 1,647/km2 (4,270/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 208 007 |
வாகனப் பதிவு | உபி-78 |
அருகிலுள்ள நகரம் | கான்பூர் |
கல்வியறிவு | 95%% |
மக்களவைத் தொகுதி | கான்பூர் மக்களவைத் தொகுதி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | மகராஜ்பூர், கான்பூர் |
குடிமை நிர்வாகம் | சாகேரி நகராட்சி = |
சாகேரி (Chakeri) என்பது இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கான்பூர் நகரத்திலிருந்து கிழக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கான்பூர் பெருநகரப் பகுதியில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். ஒரு தொழில்துறை நகரமான இது, துணிகள் மற்றும் உணவுப் பொருட்களை அதன் முக்கிய தயாரிப்புகளாகக் கொண்டுள்ளது. வட இந்தியாவின் இரண்டாவது பெரிய விமானப்படை தளமான சாகேரி விமானப்படை நிலையம் இங்கு அமைந்துள்ளது. சாகேரி புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களையும், கல்லூரிகளையும் கொண்டுள்ளது. வட இந்தியாவில் உள்ள ஒரே அரசு தோல் ஆராய்ச்சி நிறுவனமான மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், இங்கு அமைந்துள்ளது. பேரரசர் சேர் சா சூரி உருவாக்கிய பெரும் தலைநெடுஞ்சாலை இங்கிருந்து செல்கிறது. இந்த நகரம் கான்பூர் பெருநகரப் பகுதியின் நகரப் பகுதியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
புள்ளிவிவரங்கள்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி சாகேரியின் மக்கள் தொகை 7,526 ஆகும். இதில் 3,803 ஆண்கள், 3,723 பெண்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 1116 ஆகும், இது சாகேரியின் மொத்த மக்கள் தொகையில் 14.83% ஆகும். பெண் பாலியல் விகிதம் மாநில சராசரியான 912 க்கு எதிராக 979 ஆகும். மேலும், உத்தரப்பிரதேச மாநில சராசரியான 902 உடன் ஒப்பிடும்போது சாகேரியில் குழந்தை பாலியல் விகிதம் 996 ஆகும். சாகேரி நகரத்தின் கல்வியறிவு விகிதம் மாநில சராசரியான 67.68% ஐ விட 89.63% அதிகமாகும். சாகேரியில், ஆண்களின் கல்வியறிவு 93.74% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 85.41% ஆகவும் உள்ளது. [1]
வரலாறு
[தொகு]சாகேரி, கங்கை ஆற்றங்கரையில் உள்ள யாச்சுமவுவின் ( யயாதி மன்னனால் ஆளப்பட்ட நகரம்) புறநகர்ப் பகுதியாகும். இந்த இடத்தின் நிறுவனர் கங்காதீன் யாதவ் என்பவராவார். அவர் தனது தாய் இரமாதேவியின் நினைவாக பயணிகளுக்காக கிணறுகள், கோயில் மற்றும் ஓய்வு அறை ஆகியவற்றைக் கட்டினார். இப்போது இது கான்பூரில் உள்ள பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும். பேரரசர் சேர் சா சூரி உருவாக்கிய ஒரு செயற்கைக் குளமும் இங்கு உள்ளது. இது ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. கங்கைக் கரையில் உள்ள சித்தநாத் கோயில் மற்றும் படித்துறை ஆகியவையும் சாகேரியின் முக்கிய சுற்றுலாத் ஈர்ப்புகளாகும். 1970 களில் நிறுவப்பட்ட சாகேரி விமானப்படை நிலையம் இந்தியாவின் இரண்டாவது பெரிய விமானப்படை தளமாக உள்ளது.