சல்வீன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சல்வீன்
Salween
River
பர்மாவுக்கும் தாய்லாந்திற்கும்
இடையில் பாயும்
சல்வீன் ஆறு
நாடுகள் சீனா, பர்மா, தாய்லாந்து
மாநிலம் யுனான்
பகுதி திபெத்து
கிளையாறுகள்
 - இடம் மோயெய் ஆறு
நகரம் மாவ்லாமியாயிங்
உற்பத்தியாகும் இடம் கிங்காய் மலைகள்
 - அமைவிடம் Unknown glacier, திபெத்து, சீனா
 - உயர்வு 1,578 மீ (5,177 அடி)
கழிமுகம் அந்தமான் கடல்
 - அமைவிடம் மாவ்லாமியாயிங், பர்மா
 - elevation மீ (0 அடி)
நீளம் 2,815 கிமீ (1,749 மைல்)
வடிநிலம் 3,24,000 கிமீ² (1,25,100 ச.மைல்)
Discharge
 - சராசரி [1]
சல்வீன் வடிகால் பகுதி
சல்வீன் வடிகால் பகுதி
சல்வீன் வடிகால் பகுதி

சல்வீன் ஆறு (Salween river) 2,815 கி.மீ. (1,749 மைல்) நீளமுடையதாகும். இது ஆசியாவின் பன்னிரண்டாவது நீளமான ஆறாகும். திபெத் மேட்டுநிலத்தில் உற்பத்தியாகி சீனா, மியான்மார், தாய்லாந்து ஆகிய நாடுகள் வழியாகப் பாய்ந்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அந்தமான் கடலில் கலக்கிறது.

குறுகிய மலைப்பாங்கான இதன் படுகையின் பரப்பு 324,000 சதுர கிமீ (125,000 சதுர மைல்). மழைக் காலங்களில் மட்டும் இதன் கழிமுகத்திலிருந்து 90 கி.மீ. வரை கலங்கள் செல்ல முடியும்.

பொது[தொகு]

1930-இல் இந்த ஆற்றைக் கடந்து செல்லும் வணிகப் பாதை தொடர்பாகச் சீனாவுக்கும் மியான்மாருக்கும் ஏற்பட்ட தகராறு சல்வீன் இயக்கம் என்ற பெயரில் இரண்டாம் உலகப்போர் காலத்தி்ல் சண்டையாக உருவெடுத்தது.

இச்சண்டையில் சீன மற்றும் சப்பானிய படைவீரர்கள் ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சல்வீன் ஆறு பாயும் பகுதிகளில் உள்ள மலைகளில் வணிகத்துக்காக மரம் வெட்டும் போக்கு அதிகரித்தது. இதனால் ஆற்றின் சூழியல் பாதிப்படைந்தது.

வட மியான்மார் வழியாக பாயும் சல்வீன் ஆறு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Water Resources of Myanmar". AQUASTAT. பார்க்கப்பட்ட நாள் 2010-09-21. Website gives Salween discharge as 157 cubic kilometers per year, which translates to roughly 4,876 m3/s

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்வீன்_ஆறு&oldid=3524330" இலிருந்து மீள்விக்கப்பட்டது