சலுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலுக்கி
இந்தியாவிலுள்ள சலுக்கி நாய்
தோன்றிய நாடு நாகரிகத்தின் தொட்டில்
தனிக்கூறுகள்
எடை 40–60 pounds (18–27 kg)
உயரம் 23–28 அங்குலங்கள் (58–71 cm)
வாழ்நாள் 12–14
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

சலுக்கி (Saluki; Persian Greyhound; Tazi) என்பது அரேபிய வேட்டை நாய் ஆகும். இதன் தாயகமாக வட ஆப்பிரிக்கா கருதப்படுகிறது. குறிப்பாக மொராக்கோ, லிபியா, அல்ஜீரியா நாடுகளைச் சொல்லலாம். இது பழம்பெருமை மிக்க நாயாகும். ஏனெனில், அரேபிய நாகரிகத்தின் தொட்டில் (Fertile Crescent) காலத்திலேயே, இதனை வளர்த்து உள்ளதற்குச் சான்றுகள் உள்ளன.[1] அரபு நாடுகளில் இன்றளவும் இதனை வேட்டையாடும் விளையாட்டிற்கு பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் நாய்களுக்கான ஓட்டப் பந்தயத்திற்கு பயன்படுத்துகின்றனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், ஐரோப்பாவிலும், இது சிறந்த நட்பு விலங்காகப் பேணப்படுகிறது. இருப்பினும் உலகில் சில நாடுகளின் விலங்குக் காட்சிச்சாலைகளில், இவைப் பேணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பகுரைன் நாட்டிலுள்ள அல் அரீன் வனவிலங்கு பூங்காவினைக் கூறலாம்.[2]

வளரியல்பு[தொகு]

இந்த நாயினம், எதிரியைப் பார்த்தவுடன் (sighthound) வேட்டையாடும் குணம் கொண்டவை ஆகும். அவ்வாறு வேகமாகத் துரத்திப் பிடிக்கும் போது, விரட்டப்படும் இலக்கைக் கொன்று விடும். பயிற்சி கொடுக்கப் பட்டிருந்தால், பிடித்து விடும். இதன் நெஞ்சுப் பகுதி தனித்துவமாக அகன்று காணப்படும். பாலைவன வெப்பத்திலும், களைப்படையாமல் ஓடும் உடல் திறன் மிக்கதாக உள்ளது. அதற்கு ஏற்ப இதன் கால்களும் நீண்டு காணப்படும்.[3]இவை நான்கைந்து வண்ணங்களில் இயற்கையாகவே உள்ளன.[4] பெர்சியா என்று அழைக்கப்படும், தற்போதுள்ள ஈரானின் பழங்குடி மக்கள்(nomadic tribes) வேட்டையாட, இந்த நாயினத்தைப் பயன்படுத்தினர். அவ்வேட்டையில் மான், முயல், நரி, குள்ள நரி ஆகியவை அடங்கியிருந்தன. [3] இவைகள் மென்மையான நடைமுறைகளால் மட்டுமே பழக்க முடியும். துன்புறுத்தியோ, பயமுறுத்தியோ பழக்க முடியாது. இவற்றின் முடி பள பளப்பாக இருக்கும். மற்ற வேட்டைநாய்களோடு ஒப்பிடும் போது, முடிஉதிர்வு மிகக் குறைவாகவே இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்த இனமானது, பாலைவனங்களில் இருக்கும் நாய்களை விட சற்று பருத்தே காணப்படுகிறது. எங்கு வளர்ந்தாலும், அது தன்னை வளர்க்கும் / பேணும் நபருக்கு மிகவும் நன்றி உடையதாக இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்தான் இவை அதிகம் வளர்க்க படலாயிற்று. எவ்வாறு என்றால், போருக்கு சென்ற ஆப்பிரக்கப் படைவீரர்கள், ஆப்பிரிக்காவின் உட்பகுதியில் இருந்து, ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தனர். 1935 ஆம் ஆண்டுக்கு பிறகு, மேற்கத்திய நாயினங்களுக்கான கூட்டமைப்பு இதனை ஏற்றது. அமெரிக்காவுக்கு 1973களில் வந்தாலும், 1995களில் தான், அந்நாட்டின் விலங்குகள் அமைப்பு இந்த இனத்தை ஏற்றது.

வேட்டைத் திறன்[தொகு]

வேட்டையாடும் நாய்களிலே இந்த இனம் மிகவேகமாக ஓடும் உடற்திறனைப் பெற்றுள்ளன. 1996 ஆம் ஆண்டு மணிக்கு 68 கிலோ மீட்டர் ஓடி கின்னஸ் உலக சாதனைகள் செய்தது.[5] இதன் அகன்ற கால்கள் ஓடும் போது, அதன் உடல் எடையை எளிதாகத் தவிர்த்து மிக வேகமாக ஓட உறுதுணையாக விளங்குகின்றன. இதன் உடலும் வலுவாக இருப்பதால், எளிதில் களைப்படையாமல் ஓடும் திறன் பெற்றுள்ளது.[6] வேட்டைத்திறன் மிக்கதாக இருந்தாலும், இது முரட்டுதனமாக நடந்து கொள்வதில்லை. நாமும் அதனிடம் முரட்டுதனாமாக நடந்து கொள்வதை, இந்நாய்கள் விரும்புவத்தில்லை. வீட்டில் வளர்க்கும் போது, இதனுடன் உறவாடி கொண்டு இருப்பதையே இது விரும்புகிறது. வீட்டில் உள்ள ஒருவரிடம் மட்டுமே மிகவும் நெருக்கமாகப் பழகும். சிறு குழந்தைகளிடம் பழகுவதில்லை. ஓரளவு வளர்ந்த குழந்தைகளிடம் மட்டுமே, ஓரளவு பழகும் தன்மையானது. தனிமையை அதிகம் விரும்பாது. வளர்ப்பு விலங்காக இருக்கும் போது, கவனியாமல் பல நாட்கள் இருக்க முடியாது.[7] புதியவர்களிடம் பழகவே பழகாது. அவர்களை சந்தேகமாவே பார்க்கும். தான் சிறுவயதில் இருந்து பழகியவர்களிடம் மட்டுமே வரவேற்கும். எனவே, இதனை சிறந்து பாதுகாவலனாகக் கொள்ளலாம். வாரம் ஓரிரு முறை முழுமையாக பராமரிக்க வேண்டும். குறைந்த செலவில் இதனைப் பேணலாம். ஆனால், இதனை பழக்குவது மிகவும் கடினமான பணியாகும். ஏனெனில், இதனை பழகுவதற்கு அதீத பொறுமையும், காலமும் தேவைப் படுகிறது.

ஊடகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Freedman, A (2014). "Genome Sequencing Highlights the Dynamic Early History of Dogs". PLoS Genet. 10: e1004016. doi:10.1371/journal.pgen.1004016. பப்மெட்:24453982. 
  2. "Saluki dogs at Al Areen Park". Gulf Daily News. 18 July 2007. http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=188092. பார்த்த நாள்: 28 June 2012. 
  3. 3.0 3.1 Case, Linda P. (2005). The Dog: Its Behavior, Nutrition, and Health. Wiley-Blackwell. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8138-1254-0. https://books.google.com/books?id=2e_AToP1yREC&pg=PA26&lpg=PA26&dq=saluki+sumerian#v=onepage&q&f=false. 
  4. Hale, Rachel (2008). Dogs: 101 Adorable Breeds. Andrews McMeel. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7407-7342-6. https://archive.org/details/dogs101adorableb0000mcke. 
  5. Murgai, R. P. (1996). Hand Book of Dogs. New Age International. பக். 108. https://books.google.com/books?id=cPPTZvzNNHMC&pg=PA108&dq=saluki#v=onepage&q=saluki&f=false. 
  6. Alderton, David (2006). Top to Tail: The 360 Degrees Guide to Picking Your Perfect Pet. David & Charles. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7153-2589-6. https://books.google.com/books?id=1KOVN40Y0-0C&pg=PA71&dq=saluki#v=onepage&q=saluki&f=false. 
  7. "Saluki". The Kennel Club. Archived from the original on 29 November 2010. பார்க்கப்பட்ட நாள் 6 January 2011.


இவற்றையும் காணவும்[தொகு]


மேலும் கற்க[தொகு]

+Goodman, Gail (1995). The Saluqi: Coursing Hound of the East. Midbar, Inc. ISBN 0-9639224-0-8

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
saluki
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலுக்கி&oldid=3586860" இலிருந்து மீள்விக்கப்பட்டது