சத்தர்பூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 24°54′57″N 79°34′56″E / 24.915709°N 79.582214°E / 24.915709; 79.582214
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தர்பூர் மாவட்டம் மாவட்டம்
छतरपुर जिला
சத்தர்பூர் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சாகர் கோட்டம்
தலைமையகம்சத்தர்பூர்
பரப்பு8,687 km2 (3,354 sq mi)
மக்கட்தொகை1,762,375 (2011)
மக்கள்தொகை அடர்த்தி203/km2 (530/sq mi)
படிப்பறிவு63.74 %
பாலின விகிதம்883
வட்டங்கள்11
மக்களவைத்தொகுதிகள்கஜுராஹோ
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சத்தர்பூர் மாவட்டம் (Chhatarpur District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் சத்தர்பூர் ஆகும். இது சாகர் கோட்டத்தில் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற கஜுராஹோ கோயில்களின் தொகுப்புகள் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

மாநிலத் தலைநகரம் போபாலிருந்து 336 கிலோ மீட்டர் தொலைவில், மத்தியப் பிரதேச - உத்தரப் பிரதேச மாநில எல்லையில் அமைந்த சத்தர்பூர் மாவட்டம், ஆறு உட்கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 8 ஊராட்சி ஒன்றியங்களும், 3 நகராட்சிகளும், 12 நகரப் பஞ்சாயத்துகளும் கொண்டது.

பொருளாதாரம்[தொகு]

வறண்ட வானிலை கொண்டடது இம்மாவட்டம். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 இந்திய மாவட்டங்களில் ஒன்றான சத்தர்பூர் மாவட்டமும் இந்திய அரசால் 2006- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வருகிறது.[1]

சுற்றுலா[தொகு]

கஜுராஹோ கோயில்

உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான கஜுராஹோ கோயில்களின் சிற்பங்களை காண உலகம் முழுவதிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்குள்ள கந்தாரிய மகாதேவர் கோயில் மற்றும் இலக்குமணன் கோயில்கள் இந்தியக் கோயில் கட்டிடக் கலைக்கும், சிற்பங்களுக்கும் புகழ் பெற்றவைகள் ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,762,375 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.36% மக்களும்; நகரப்புறங்களில் 22.64% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.51% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 936,121 ஆண்களும் மற்றும் 826,254 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 883 பெண்கள் வீதம் உள்ளனர். 8,687 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 203 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 63.74 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 72.66 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 53.59 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 282,794 ஆக உள்ளது. [2]

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,676,918 (95.15 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 70,351 (3.99 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்[தொகு]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மாவட்ட எல்லைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help); line feed character in |publisher= at position 28 (help)
  2. Chhattarpur (Chhatarpur) District : Census 2011 data

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தர்பூர்_மாவட்டம்&oldid=3552734" இலிருந்து மீள்விக்கப்பட்டது