கோப்பு நீட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோப்பு நீட்சி (filename extension) என்பது கணினிக் கோப்புகளின் இறுதியில் ஒரு புள்ளிக்கு (period) அடுத்து அமையும் கோப்புப் பெயரின் இறுதிப்பகுதியாக அமைந்து இருக்கும். கோப்பினுள் இருக்கும் தரவு அமைப்பை, அக்கோப்பின் பெயர் நீட்சி தெரிவிக்கிறது. மேலும், அக்கோப்பினை, ஒரு பயனர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறது. சில கோப்புகளில் புள்ளிக்கு மாற்றாக, சிறு இடைவெளி (space)களுடனும் காணப்படுகின்றன. பெரும்பான்மையான கோப்பு முறைமைகளில் கோப்பு நீட்சி என்பது எந்தவித சிறப்புத் தன்மையும் இல்லாத, அக்கோப்புப் பெயரின் ஒரு பகுதியாகவே விளங்குகின்றன. சில கோப்பு முறைமைகளில், கோப்பு நீட்சியான சிறப்பியல்புகளைப் பெற்று, அக்கோப்பின் வடிவத்தையும், கோப்பின் அளவையும் தீர்மானிக்கிறது.

பயன்பாடு[தொகு]

ஒரு கோப்புநீட்சியானது, அக்குறிப்பிட்டக் கோப்பின் மீதரவாக உள்ளது. [1] பொதுவாக கோப்புநீட்சியானது, அது இருக்கும் கோப்பில், எம்முறையில் தரவை சேமிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது. ஒரு கோப்பு முறைமையே, அக்கோப்பின் நீட்சி எந்த இடத்தில் அமைய வேண்டும் என முடிவு செய்கிறது. பெரும்பான்மையானவை இறுதியில் தான் இருக்கும். எடுத்துக்காட்டாக, ' கோப்பின் பெயர்.txt ,கோப்பின்பெயர்.csv, .htmlmysite.index.html.

மேற்கோள்கள்[தொகு]

  1. Stauffer, Todd; McElhearn, Kirk (2006) (in en). Mastering Mac OS X. John Wiley & Sons. பக். 95–96. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780782151282. https://books.google.com.au/books?id=62xkJo6JXwAC&pg=PA95&lpg=PA95. பார்த்த நாள்: 2 October 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பு_நீட்சி&oldid=2468157" இலிருந்து மீள்விக்கப்பட்டது