உள்ளடக்கத்துக்குச் செல்

கைமோர்

ஆள்கூறுகள்: 23°23′0″N 79°44′38″E / 23.38333°N 79.74389°E / 23.38333; 79.74389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைமோர்
Kymore
கைமோர்
நகரம்
கைமோர் Kymore is located in மத்தியப் பிரதேசம்
கைமோர் Kymore
கைமோர்
Kymore
Location in Madhya Pradesh, India
கைமோர் Kymore is located in இந்தியா
கைமோர் Kymore
கைமோர்
Kymore
கைமோர்
Kymore (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°23′0″N 79°44′38″E / 23.38333°N 79.74389°E / 23.38333; 79.74389
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்கட்னி மாவட்டம்
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்35,300
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
483880
தொலைபேசி குறியீடு07626

கைமோர் (Kymore) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொழில் நகரம் ஆகும். கட்னி மாவட்டத்தில் உள்ள விசயராகவ்கர் தாலுகாவில் ஒரு நகர் பஞ்சாயத்தாக இந்நகரம் அமைந்துள்ளது. 1921 ஆம் ஆண்டு இயே.கே பிசரால் நிறுவப்பட்ட சிமெண்ட் காரை தொழிற்சாலைகளுக்காக இந்நகரம் முக்கியமாக அறியப்படுகிறது.

புகழ்பெற்ற முரளிதர் கோவில் 1930 ஆம் ஆண்டு இங்கு நிறுவப்பட்டது.

பொருளாதாரம்

[தொகு]

சுண்ணாம்புச் சுரங்கம் உள்ளூர் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, சிமென்ட் தொழில் பணிகள் ஏசிசி எனப்படும் அசோசியேட்டடு சிமெண்ட் நிறுவனத்தின் வசம் வந்தன. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, இங்கு ஆண்டுக்கு 2.2 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.

பல பழைய கற்சுரங்கங்கள் குறைந்ததாலும் அல்லது போதிய தொழில்நுட்பம் இல்லாததாலும் கைவிடப்பட்டு நீர் தேக்கங்களாக மாற்றப்பட்டன. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மகேகான் சுரங்கங்களிலிருந்து சுண்ணாம்புக் கல் கிடைத்து வந்தது. இந்தியாவின் இரண்டாவது நீளமான நகரும் பாதை இந்த சுரங்கங்களில் இருந்து சுண்ணாம்புக் கல்லைப் பெறுவதற்காக இங்கு கட்டப்பட்டது.

பாக்சைட் மற்றும் பளிங்கு சுரங்கங்கள் மற்றும் ஒரு கல்நார் தாள் உற்பத்தி தொழிற்சாலை போன்றவை இங்குள்ள இதர தொழிற்சாலைகள் ஆகும்.

நிலவியல்

[தொகு]

கைமோர் மலைகள் முழு நகரத்தின் வடக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுகின்றன. 100 முதல் 200 மீட்டர்கள் (330 முதல் 660 அடி) வரை இவை உயரம் கொண்டுள்ளன.

கோவில்கள் மற்றும் திருவிழாக்கள்

[தொகு]

தசரா மிகப் பெரிய ஆண்டு விழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது. இராவணனின் 80–90 அடிகள் (24–27 m) ) உருவ பொம்மை 80-90 அடிகள் வரை இங்கு உருவாக்கப்படுகிறது. இது இந்தியாவில் மிக உயர்ந்தது ஆகும். தசரா நிகழ்வைக் காண மக்கள் இந்த நேரத்தில் வருகை தருகின்றனர். முரளிதர் கோவில் கைமோர் நகரின் மையத்தில் உள்ளது.

மக்கள்தொகையியல்

[தொகு]

2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] கைமோர் நகரம் 35,300 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. இம்மக்கள் தொகையில் ஆண்கள் 53% பேரும் பெண்கள் 47% பேரும் இருந்தனர். கைமோரின் சராசரி கல்வியறிவு விகிதம் 70.3% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% பேர் என்பதை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 78% மற்றும் பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். மக்கள் தொகையில் 13% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தார்கள்

கல்வி

[தொகு]

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைந்த பள்ளிகளான டிஏவி ஏசிசி பொதுப் பள்ளி, கைமோர் மேல்நிலைப் பள்ளி கைமோர் & ஏசிசி மேல்நிலைப் பள்ளி, சிரம்தம் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இங்குள்ளன. [2]

விளையாட்டு

[தொகு]

ஏசிசி சிம்கானா சங்கம் நகர மக்களுக்கான பொழுதுபோக்கை வழங்குகிறது. 60-70 அணிகளை ஒன்றிணைத்து ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான துடுப்பாட்டப் போட்டிகள் சிறீ ஆர்.கே.சர்மாவின் நினைவாக கொண்டாடப்படுகிறது. இந்த போட்டியில் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, மேசைப்பந்து, டென்னிசு, கபடி மற்றும் தடகளம் போன்ற மற்ற விளையாட்டுகளும் அடங்கும்.

போக்குவரத்து

[தொகு]

அருகில் சூகேகி இரயில் நிலையம் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கட்னி இரயில் நிலையம் 45  கிலோமீட்டர் தொலைவில் இடார்சி அலகாபாத் இரயில் பாதையிலும் கட்னி முர்வாரா 45 கி.மீ  தொலைவில் கட்னி பினா ரயில் பாதையில் 45 கி.மீ தொலைவிலும் உள்ளன. விமான நிலையங்கள் சபல்பூர் மற்றும் கசூராகோவில் உள்ளன. கைமோரிலிருந்து விசயராகவ்கர் (8 கிமீ) செல்லவும், கட்னி (45 கிமீ), மைகார் (40 கிமீ), சபல்பூர் (135 கிமீ), ரேவா (140 கிமீ) மற்றும் சத்னா (85 கிமீ) ஆகிய இடங்களுக்கு காலை தினசரி சேவையில் செல்லும் பேருந்துகள் காலை 5:45 மணிக்கு கிடைக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. "DAV ACC Public School, Kymore". Davacckymore.com. Archived from the original on 2 April 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைமோர்&oldid=3417447" இலிருந்து மீள்விக்கப்பட்டது