கெலார்ட்டின் நீண்ட நக மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெலார்ட்டின் நீண்ட நக மூஞ்சூறு
Kelaart's long-clawed shrew
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இயுலிபோடைப்ளா
குடும்பம்: சோரிசிடே
பேரினம்: பெரோகுலசு
இனம்: பெ. பெரோகுலசு
இருசொற் பெயரீடு
பெரோகுலசு பெரோகுலசு
கெலார்ட், 1850
கெலார்ட்டின் நீண்ட நக மூஞ்சூறு பரம்பல்

கெலார்ட்டின் நீண்ட நக மூஞ்சூறு (Kelaart's long-clawed shrew)(பெரோகுலசு பெரோகுலசு) என்பது சோரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாலூட்டிகளில் ஒரு வகை ஆகும். இது பெரோகுலசு பேரினத்தில் காணப்படும் ஒரே ஒரு சிற்றினமாகும். இது இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் மட்டுமே வாழக்கூடியது. இதன் இயற்கை வாழ்விடங்களாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகளும், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட தாழ் நில புல்வெளி மற்றும் சதுப்புநிலங்கள் ஆகும். இது வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. இது சிங்களத்தில் පිරි හික් මීයා (பிரி ஹிக் மியா) என அறியப்படுகிறது.

இந்த மூஞ்சூறுவின் விலங்கியல் பெயரானது விலங்கியல் நிபுணர் எட்வர்ட் ஃபிரடெரிக் கெலார்ட் நினைவாகப் பெயரிடப்பட்டது.

இதனுடைய தலை மற்றும் உடல் நீளம் 11–12 cm (4.3–4.7 அங்) வரையிலும், வாலின் நீளம் மட்டும் 7–8 cm (2.8–3.1 அங்) வரை உள்ளது. முன்பாதம் வெண்மையானது, நீளமான சிவப்பான நகங்களுடன் கூடியது. வால் மென்மையான மற்றும் ஒரு சில நீளமான முடிகளால் மூடப்பட்ட வால்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Molur, S.; Nameer, P.O.; de A. Goonatilake; W.I.L.D.P.T.S. (2008). "Feroculus feroculus". IUCN Red List of Threatened Species 2008: e.T8553A12922487. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T8553A12922487.en. https://www.iucnredlist.org/species/8553/12922487.