குஷிட்டிக் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குஷிட்டிக் மொழிகள், ஆப்பிரிக்க-ஆசிய மொழிகளின் ஒரு துணைக் குழு ஆகும். இம்மொழிகள் ஆப்பிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் பகுதியில் பேசப்படுகின்றன. 25 மில்லியன் மக்கட் தொகை கொண்ட ஒரோமோ மொழி இவற்றுள் முதன்மையானது. அடுத்ததாக, சோமாலியா, எதியோப்பியா, ஜிபுட்டி, கெனியா ஆகிய நாடுகளில் சுமார் 15 மில்லியன் மக்களால் பேசப்படும் சோமாலி மொழி உள்ளது. இவற்றுடன், இரண்டு மில்லியன் மக்கள் பேசும், எதியோப்பியாவில் உள்ள சிடாமோ மொழி, எரித்ரியா, எதியோப்பியா, ஜிபுட்டி ஆகிய நாடுகளிலுள்ள சுமார் 1.5 மில்லியன் மக்களால் பேசப்படும் அஃபார் மொழி என்பனவும் குஷிட்டிக் மொழிகளே.

ஜோசெப் கிரீன்பெர்க் என்பவாரால் வகைப்படுத்தப்பட்டு, ஹரோல்ட் ஃபிளெமிங் என்பவரால் திருத்தம் செய்யப்பட்ட முறையின்படி, இம்மொழிகள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஷிட்டிக்_மொழிகள்&oldid=2785200" இலிருந்து மீள்விக்கப்பட்டது