குதிக்கும் காய்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : செபாஸ்டினியா பால்மெரி Sebastiania palmeri

குடும்பம் : யுபோர்பியேசியீ (Euphorbiaceae)

இதரப் பெயர்[தொகு]

மெக்சிக்கோ குதிக்கும் காய்கள் (Mexican Jumping beans)

மரத்தின் அமைவு[தொகு]

இது ஒரு குறு மரமாகும். இதிலிருந்து பால் வருகிறது. இப்பால் அதிக விசத்தன்மை உடையது. இதனுடைய விதை மிகவும் பிரபலமானது. இதன் விதை அவரை விதைபோல் உள்ளது. இவ்விதையின் உள்ளே கார்போகேப்சா சால்டிடன்ஸ் என்கிற அந்துப் பூச்சியின் புழு வாழ்கிறது. விதையின் ஓடு சூடு ஏறும் போது விதையின் உள்ளே உள்ள புழுவிற்கு சூடு படுவதால் புழு சுருங்கி உடலை நீட்டுவதால் விதை குதித்து கொண்டு இருப்பதால் இவ்விதையை குதிக்கும் விதை என்கின்றனர். இப்படி வித்தியாசமான செயல் நடப்பதால் இவ்விதையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்ட். இதை விலை கொடுத்தும் வாங்குகிறார்கள். இதன் பூ பூக்கும் போது பூவில் அந்து பூச்சி முட்டையிடுகிறது. பிறகு காய் உண்டாகும்போது அதனுள்ளே புழுக்கள் உண்டாகிவிடும். இச்சாதியில் 75 இனங்கள் உள்ளன. ஆனால் இந்த இன விதை மட்டுமே குதிக்கிறது.

காணப்படும் பகுதிகள்[தொகு]

இது மெக்சிகோவில் வளர்கிறது.

செபாஸ்டினியா பால்மெரி

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிக்கும்_காய்கள்&oldid=3630961" இலிருந்து மீள்விக்கப்பட்டது