காக்ஸ் பஜார் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேசத்தில் காக்ஸ் பஜார் மாவட்டத்தின் அமைவிடம்

காக்ஸ் பஜார் மாவட்டம் (Cox's Bazar) (வங்காள மொழி: কক্সবাজার জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சிட்டகாங் கோட்டத்தில் உள்ளது. சிட்டகாங் நகரத்திலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கில் காக்ஸ் பஜார் மாவட்டம் உள்ளது. வங்காள தேசத்தின் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவின் வடக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் காக்ஸ் பஜார் நகரம் ஆகும். காக்ஸ் பஜார் நகரத்தின் பரப்பளவு 6.85 சதுர கிலோ மீட்டராகும்.[1]பிரித்தானிய இந்தியாவில் படைத் தலைவராக இருந்த கேப்டன் ஹிரம் காக்ஸ் (இறப்பு:1798) என்பவரின் பெயரால் இந்நகரத்திற்கு பெயர் காக்ஸ் பஜார் என பெயர் சூட்டப்பட்டது. இதற்கு முன்னர் காக்ஸ் பஜார் நகரத்தின் பெயர் பனோவா (மஞ்சள் பூ) என இருந்தது. காக்ஸ் பஜார் மீன் பிடி துறைமுகமாகும். உலகின் இயற்கையான நூற்றி இருபது கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை கொண்டதும், சுற்றுலாத் தலாமாகவும் காக்ஸ் பஜார் விளங்குகிறது.

புவியியல்[தொகு]

காக்ஸ் பஜார் மாவட்டம் 2491.86 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் வடக்கில் சிட்டகாங் மாவட்டம், தெற்கிலும், மேற்கிலும் வங்காள விரிகுடா, கிழக்கில் பந்தர்பன் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. இம்மாவட்டத்தின் முக்கிய ஆறுகளாகவும், கால்வாய்களாகவும் மாதாமுகுரி ஆறு, பக்காளி ஆறு, ரேஜு கால் ஆறு, நப் கால் ஆறு, மகேஷ்காளி கால்வாய் மற்றும் குதுப்தியா கால்வாய்கள் உள்ளது. இம்மாவட்டம் 1984-இல் புதிதாக உருவாக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

இனானி கடற்கரை, காக்ஸ்பஜார்

காக்ஸ் பஜார் மாவட்டம் நிர்வாக வசதிக்காக எட்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்: சக்காரியா, காக்ஸ் பஜார் சதர், குடுப்தியா, மகேஷ்காளி, ராமு, தேக்னாப், உக்கியா, பெகுவா என்பனவாகும். மேலும் இம்மாவட்டம் 71 ஊராட்சி ஒன்றியங்களும், 989 கிராமங்களையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2491.85 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 22,89,990 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,69,604 ஆகவும், பெண்கள் 11,20,386 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 104 ஆண்ககளுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 919 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 39.3% ஆக உள்ளது. 4,15,954 வீடுகளும் உள்ளது. [2]

தட்ப வெப்பம்[தொகு]

காக்ஸ் பஜார் மாவட்டத்தின் குறைந்த வெப்பநிலை 16.1° செல்சியாகவும், அதிக வெப்பநிலை 32.8° செல்சியஸாகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழி 4285 மில்லி மீட்டராகும்.

பொருளாதாரம்[தொகு]

காக்ஸ் பஜார் மாவட்டத்தின் முக்கிய வருவாய் சுற்றுலாத் துறை, வேளாண்மை மற்றும் மீன் பிடித்தல் மூலம் கிடைக்கிறது.

போக்குவரத்து[தொகு]

காக்ஸ் பஜார் உள்ளூர் வானூர்தி நிலையம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்திற்கு உதவுகிறது.[3] நீர் வழி தடங்கள் மூலம் படகு போக்குவரத்து அதிக அளவில் உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்ஸ்_பஜார்_மாவட்டம்&oldid=3239085" இலிருந்து மீள்விக்கப்பட்டது