உள்ளடக்கத்துக்குச் செல்

கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
California Institute of Technology
குறிக்கோளுரை"The truth shall make you free"[1]
வகைதனியார்
உருவாக்கம்1891
நிதிக் கொடைUS $1.55 பில்லியன்]][2]
கல்வி பணியாளர்
294 professorial faculty
1207 other faculty[3]
மாணவர்கள்2175[4]
பட்ட மாணவர்கள்967[4]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்1208[4]
அமைவிடம்
பசதேனா
, ,
வளாகம்நகர்ப்புறம், 124 ஏக்கர்கள் (50 ha)
நிறங்கள்செம்மஞ்சள், வெள்ளை         
இணையதளம்caltech.edu

கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் அல்லது கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம் (California Institute of Technology) (வழக்கமாக கால்டெக் (Caltech) என்று அழைக்கப்படுகிறது) ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பசதேனாவில் உள்ள ஒரு தனியார் ஆய்வுப் பல்கலைக்கழகம். கால்டெக் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் வலிமையான ஆறு கல்வி பிரிவுகளை கொண்டிருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடகிழக்கில் சுமார் 11 மைல் (18 கிமீ) தொலைவில் அதன் முதன்மை வளாகம் 124 ஏக்கர் (50 ஹெக்டேர்) பரப்பில் அமைந்துள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படும் இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தொகை சிறியதாக இருந்த போதிலும் அவர்கள் 31 நோபல் பரிசுகளையும் 66 தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பதிற்கான பதக்கங்களையும் இதுவரை வென்றுள்ளனர் .இதன் பல ஆராய்ச்சியாளர்கள் நாசா போன்ற அமெரிக்காவின் முன்னணி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றார்கள் .2011 இல் இக்கால்லூரிக்கு 1.77 பில்லியன் மானியதொகையும்332 மில்லியன் அராய்ச்சி தொடக்க நிதியும் கிடைத்துள்ளது.இக்கல்லூரிக்கும் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையதிற்கும் இடையே நீண்ட காலமாக கல்வித்துறையில் போட்டிநிலவி வருகிறது

வரலாறு

[தொகு]

த்ரூப் கல்லூரி

[தொகு]

கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியானது ஆரம்பத்தில் ஒரு தொழிற்பயிற்சி பள்ளியாக 1891 இல் உள்ளூர் அரசியல்வாதியும் தொழிலதிபரும் ஆன அமோஸ்.ஜி.த்ரூப் என்பவரால் பசதீனா(Pasadena) நகரில் தொடங்கப்பட்டது . 1920 ஆம் ஆண்டு கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரி எனும் பெயரை பெறமுன் இக்கல்லூரியானது த்ரூப் பல்கலைகழகம் , த்ரூப் பலதொழில்நுட்பப் பயிலகம், மற்றும் த்ரூப் தொழில்நுட்ட்பக் கல்லூரி எனும் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.

அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சிகளின் தொடக்க காலங்களில் சிக்காகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜோர்ஜ் ஏலரி ஹேல் எனும் சூரிய வானியலாளர் ,மவுண்ட் வில்சன் அவதானிப்பு நிலையத்தை 1904 இல் உருவாக்கினார்.1907 இல் அவர் த்ரூப்பினுடைய வாரிய அறங்காவலர்களுள் ஒருவராவார் இணைந்து கொண்டார் .விரைவில் இவர்கள் பசதீனா நகரை ஒரு பிரதான அறிவியல் மற்றும் கலாச்சார பெறுமதியான இடமாக உருவாக்க தொடங்கினர்.ஜோர்ஜ் ஹேல்,1908 இல் ஜேம்ஸ்.ஏ.சேரர் என்பவரை நிர்வாகி மற்றும் நிதி திரட்டுனராக நியமித்தார். ஜேம்ஸ் சேரரின் முயற்சியால் கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாவது அறிவியல் ஆய்வுகூடம் கட்டப்பட்டது .இதற்கு சார்லஸ் கேட்ஸ் என்பவர் 25 ,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கி உதவினார்.

உலகப்போர்கள்

[தொகு]

1910 ஆம் ஆண்டில், த்ரூப் கல்லூரி அதன் தற்போதைய இடத்திற்கு நகர்த்தப்பட்டது . ஆர்தர் பிளெமிங் என்பவர் நிரந்தர வளாகத்திற்கான நிலத்தை நன்கொடையாக வழங்கினார். அப்போதைய ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் மார்ச் 21, 1911 அன்று த்ரூப் கல்லூரியை மேற்கோள் காட்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .அதில் அவர் கல்லூரியையும் , ஜோர்ஜ் ஹெலையும் பாராட்டி பேசினார் .

அதே வருடத்தில் கலிபோர்னியா சட்டமன்றம் ஒரு மில்லியன் டாலர் வரவு செலவு திட்டத்தில் பொதுவாக நிதியளிக்கப்பட்டு இயங்கும் "கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம்" எனும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

வளாகம்

[தொகு]
மிளிக்கன் நூலகம்

இது 124 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முதன்மை வளாகம், கலிபோர்னியாவின் பசதேனா பகுதியில் உள்ளது.

கஹில் வானியல், வானியற்பியல் மையம் புதிதாக கட்டப்பட்டது. லியோனோர் அன்னென்பேர்க் தொழில்நுட்ப, அறிவியல் மையம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[5] வாரன், காத்ரீன் வேதியியல் ஆய்வு மையம் 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[6] சூரிய சக்தியில் இயங்குவதற்காக, அதிகளவில் சூரிய மின்சாரமும் தயாரிக்கப்பட்டது.

நிர்வாகம்

[தொகு]

இது லாப நோக்கமற்ற நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. இதை தேர்ந்தெடுக்கப்பட்ட 46 பேர் கொண்ட குழுவினர் நிர்வகிப்பர். ஒவ்வொருவரும் ஐந்து ஆண்டு காலம் பணியாற்றுவார். கல்வி நிறுவனத்தின் தலைவரை, இந்த குழு வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கும். பத்து துணைத் தலைவர்களும், பிற அலுவலர்களும் இவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அனைத்து ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் வாக்களிக்க உரிமை உடைவர்கள் ஆவர். ஒரு திட்டத்தை செயல்படுத்த இவர்கள் வாக்களிக்கலாம். மாணவர் சேர்க்கை, கல்வித் தரத்தைக் கண்காணித்தல், பாடத்திட்டத்தை உருவாக்குதல் ஆகியன ஆசிரியர்களின் பணி.

கல்வி

[தொகு]

இது ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது உயிரியல், வேதியியல், பொறியியல், புவியியல், சமூகவியல், கணிதம், வானியல் ஆகியன. இது உலகின் முன்னணி கல்வி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பிடத்தக்க ஆய்வுப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று.

மாணவர்கள்

[தொகு]

இங்கு மாணவர்களுக்கான தங்குமிடம் உள்ளது. மாணவர்கள் தங்களின் தங்குமிடத்திற்கு ஏற்ப, குழுக்களாகப் பிரிக்கப்படுவர். பிளாக்கர் ஹவுஸ், டேப்னி ஹவுஸ், இல்யோடு ஹவுஸ், ரிக்கெட்ஸ் ஹவுஸ் ருடோக் ஹவுஸ் என்ற குழுக்கள் உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.

விளையாட்டு

[தொகு]

கூடைப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், நீச்சல், டென்னிஸ், கைப்பந்தாட்டம், நீர் போலோ உள்ளிட்ட விலையாட்டுகள் உண்டு. இவற்றிற்கான ஆண், பெண் குழுக்கள் உண்டு. என்.சி.ஏ.ஏ போட்டிகளிலும் பங்கெடுப்பர். கால்டெக் பீவர்ஸ் என்பது இதன் விளையாட்டுக் குழுவின் பெயர்.

குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]

இங்கு நோபல் பரிசு பெற்ற 32 நபர்கள் உள்ளனர். இவர்களுள் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் அடக்கம். இதுதவிர, அமெரிக்க தேசிய அறிவியல், இயற்பியல் கழகங்களில் பரிசு பெற்றோரும் உளர்.

ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

மாணவர்கள்

[தொகு]

கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் 2012-2013 கல்வி ஆண்டில் 997 பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் 1246 பட்டதாரி மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் பெண்கள் மொத்த மாணவர் தொகையில் பட்டப்படிப்பு மாணவர்களில் 38% ஆகவும் பட்டதாரி மாணவர்களில் 29% ஆகவும் உள்ளனர். இங்கு சர்வதேசத்தைச் சாராத புதியவர்கள் 68% ஆனோர் கலிபோர்னியா மாநிலத்திற்கு வெளியே இருந்து வருகின்றனர். கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் 2017 ஆம் வருட வகுப்பிற்காக 5.535 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 584 மாணவர்கள் (10.6%) அனுமதிக்கப்பட்டனர். அத்தோடு 249 மாணவர்கள் தற்போதே பதிவுசெய்துவிட்டனர். முதல் ஆண்டு மாணவர்கள் 'SAT மதிப்பெண்கள் இண்டர்குவார்டைல் ​​எல்லை 2340 வரை 2230 இருந்தது. இங்கு முதல் ஆண்டு மாணவர்களை உள்ளெடுப்பதற்கான இசட் மதிப்பெண் வீச்சானது 2230 தொடக்கம் 2340 வரை உள்ளது. இவர்களுள் 98% ஆனோர் தமது மேல் நிலைப் பள்ளிகளில் முதற் பத்து இடங்களிற்குள் வந்தவர்களாவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The motto is largely unused since 1990, when the logo displaying it was replaced by the Centennial logo.
  2. As of FY 2010. "U.S. and Canadian Institutions Listed by Fiscal Year 2010 Endowment Market Value and Percentage Change in Endowment Market Value from FY 2009 to FY 2010" (PDF). 2010 NACUBO-Commonfund Study of Endowments. National Association of College and University Business Officers. Archived from the original (PDF) on ஜூலை 1, 2012. பார்க்கப்பட்ட நாள் Jan 30, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "Caltech: At a Glance". California Institute of Technology. Archived from the original on ஜூன் 26, 2013. பார்க்கப்பட்ட நாள் Feb 9, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 4.2 "Caltech Office of the Registrar Enrollment Statistics". Archived from the original on 2010-06-10. பார்க்கப்பட்ட நாள் 2010-12-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Quantum leap: Caltech facility combines astronomy, astrophysics". AllBusiness. January 26, 2009. பார்க்கப்பட்ட நாள் July 7, 2010.
  6. "Caltech Cuts the Ribbon on Schlinger Laboratory". Caltech. March 9, 2010. பார்க்கப்பட்ட நாள் July 7, 2010.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கால்டெக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.