கலட்சு சுழல் கரணப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலட்சு சுழல் கரணப் புறா
ஆண் கலடி சுழல் கரணப் புறா
தோன்றிய நாடுருமேனியா
வகைப்படுத்தல்
மாடப் புறா
புறா

கலட்சு சுழல் கரணப் புறா அல்லது கலடி சுழல் கரணப் புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தது ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. கலட்சு கரணப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை ருமேனியாவின், கலடி மாகாணத்தில் உருவாயின. இவற்றின் வான் சாகசம் காரணமாக ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் பிரபலமான இனமாக உள்ளன. இவற்றின் வான் சாகசங்கள் கீழை சுழல் கரணப் புறா மற்றும் பர்மிங்கம் சுழல் கர்ணப் புறாக்களுக்கு இணையாக உள்ளன.

வான் சாகசங்கள்[தொகு]

  • பின்புறமாக குட்டிக்கரணம் அடித்தல் (இரண்டுக்கும் மேற்பட்ட குட்டிக்கரணம் அடிப்பதால் கர்ணப் புறாக்கள் என்றழைக்கப்படுகின்றன)
  • காற்றில் சுழலுதல் (பிரோவுட்)
  • திருகாணி போல் மேலிருந்து கீழே பறக்கும்போது காற்றில் சுழலுதல்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலட்சு_சுழல்_கரணப்_புறா&oldid=2654238" இலிருந்து மீள்விக்கப்பட்டது