ஓணான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓணான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Squamata
துணைவரிசை:
Iguania
குடும்பம்:
பேரினம்:
Calotes
இனம்:
C. versicolor
இருசொற் பெயரீடு
Calotes versicolor
(Daudin, 1802)[1]

ஓணான் (ஆங்கிலம்: Oriental Garden Lizard) பல்லி வகையைச் சார்ந்தது. கரட்டாண்டி (திருநெல்வேலிப் பேச்சு) எனப்படும் இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப்போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° கோணத்தில் சுற்றாது. இவ்வகை ஓணான் ஆனது தமிழர் நிலைப்பாட்டில் விளையாட்டு பல்லி என்றும் சிறுவர்கள் இந்த ஓணானை கயிற்றால் கட்டியும், கிட்டி புல் எனப்படும் விளையாட்டு கருவியில் கல்லால் குறிவைத்து அடித்து விளையாடுவதும் உண்டு. பெரும்பாலும் இவை மரங்களிலும், செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை தனது நீண்ட நீக்கினால் இழுத்து பற்களால் கடித்து உண்ணும். மேலும் இது வேகமாக ஓடும் தன்மை உடையது. பொதுவாகவே ஓணான் இனமானது பகலில் வானில் உள்ள சூரியனை பார்த்து பலித்து காட்டும் தன்மை உடையது என்றும் தமிழர் நிலைப்பாட்டில் கூறுவர்.

பெண் ஓணான்

மேற்கோள்[தொகு]

  1. Calotes versicolor, Reptiles Database

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓணான்&oldid=3810923" இலிருந்து மீள்விக்கப்பட்டது