ஊர்மிளா பவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் ஊர்மிளா பவார்

ஊர்மிளா பவார் (Urmila Pawar) என்பவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மராத்திய எழுத்தாளர். இவர் தன்னை பெண்ணியிலாளராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.[1] தர்மராஜனின் கூற்றின்படி, இவரது எழுத்துகள் பெண் மற்றும் ஒரு தலித் என்ற இரு தரப்பு துன்பங்களையும் அனுபவங்களையும் பிரதிபலிக்கின்றன.[2]

துவக்க வாழ்க்கை மற்றும் குடும்பப் பின்னணி[தொகு]

1945 ஆம் ஆண்டு பம்பாய் மாகாணத்தின் (இப்போது மகாராஷ்டிரா மாநிலம்) கொங்கன் மாவட்டத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் அட்கோன் கிராமத்தில் ஊர்மிளா பிறந்தார்.[3][page needed] அம்பேத்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களை, இந்து மதத்தைவிட்டு வெளியேறுமாறு அழைப்பு விடுத்தபோது இவரது 12 ஆவது வயதில், இவரும் இவரது குடும்பத்தினரும் பெளத்த மதத்தைத் தழுவினர்.

ஊர்மிளா தான் பயிலும் பள்ளி மற்றும் பிற இடங்களில் சந்தித்த பாகுபாடு மற்றும் அவமானம் ஆகியவற்றின் காரணமாக அவர் தன் குழந்தை பருவத்தில் இருந்தே தனது சாதி அடையாளத்தை நன்கு அறிந்திருந்தார். அவருடைய ஆங்கில ஆசிரியர்கள் அவருடைய குறைந்த ஆங்கில அறிவுக்காக அவரை அவமானப்படுத்திய ஒரு சம்பவத்தையும் அவர் விவரித்துள்ளார்.[4][full citation needed] கிராமத்தில் ஊர்மிளாவின் குடும்பம் வாழ்ந்த, மகர் தலித்துகளின் குடியிருப்பானது ஊரின் மத்தியில் அமைந்திருக்கும். எனவே, ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நான்கு புறமிருந்தும் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய பாதுகாப்பற்ற நிலையில் அந்த மக்கள் வாழத் தள்ளப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊர்மிளா மராத்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் இவர் மகாராட்டிர அரசின் பொதுப்பணித் துறையில் பணியாளராக பணிசெய்து ஓய்வு பெற்றார்.[சான்று தேவை]

இலக்கியப் பணிகள்[தொகு]

  • ஊர்மிளா பவார் மராத்திய தலித் இலக்கிய உலகில் தனிச் சிறப்பு கொண்டவராக கருதப்படுகிறார். இவரே தலித் வாழ்க்கையைச் சிறுகதை வடிவில் சொன்ன முதல் இந்திய பெண் எழுத்தாளர் என்றும் அறியப்படுகிறார்.
  • ஒரு நாடகம், இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கும் இவரது கதைகளில் சில, வீணா தேவ் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மதர்விட் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
  • ஆய்தான் என்ற பெயரில் இவர் எழுதிய சுயசரிதையை மாயா பண்டிட் என்பவர் ஆங்கிலத்தில் தி வீவ் ஆஃப் மை லைஃப் என்று மொழிபெயர்த்துள்ளார். தமிழில் இதை முடையும் வாழ்வு (விடியல் பதிப்பகம்) என்று மொழிபெயர்த்திருக்கிறார் போப்பு.
  • வீ ஆல்ஸோ மேட் ஹிஸ்டரி எனும் நூலை அம்பேத்கரியச் செயல்பாட்டாளர் மீனாட்சி மூன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அம்பேத்கரிய இயக்கத்தில் பங்கேற்ற பெண்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்.[5]

அங்கீகாரம்[தொகு]

மகாராஷ்டிரா சாகித்திய பரிஷத்தின் சிறந்த சுயசரிதத்திற்காக லக்ஷ்மிபாய் திலக் விருதை ஊர்மிளாவின் சுயசரிதையானஆய்தான் நூலுக்காக பெற்றார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Notes From the Margins: Dalit writer Urmila Pawar’s autobiography inspires a Marathi play". The Indian Express. 2014-07-20. http://indianexpress.com/article/lifestyle/notes-from-the-margins-dalit-writer-urmila-pawars-autobiography-inspires-a-marathi-play/. 
  2. Geeta Dharmarajan (2004). Separate journeys: short stories by contemporary Indian women. Univ of South Carolina Press. பக். 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57003-551-7. https://books.google.com/books?id=W3117FekmfoC&pg=PR18. பார்த்த நாள்: 10 March 2012. 
  3. Sharmila Rege (2006). Writing caste, writing gender: reading Dalit women's testimonies. Zubaan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89013-01-1. https://books.google.com/books?id=Msaki69NQHsC&pg=PA256. 
  4. Urmila Pawar's "Aayadan" - A New Perspective. http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/6880/12/12_chapter%207.pdf. 
  5. ந.வினோத் குமார் (5 மே 2018). "எழுத்தும் மனிதகுலத்தின் பாய்ச்சல்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 மே 2018.
  6. Sharmila Rege (2006). Writing caste, writing gender: reading Dalit women's testimonies. Zubaan. பக். 256–265. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89013-01-1. https://books.google.com/books?id=Msaki69NQHsC&pg=PA256. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்மிளா_பவார்&oldid=3576725" இலிருந்து மீள்விக்கப்பட்டது