ஊய் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹுய் மக்கள் خُوِذُو
回族
சாங் யுசுன்
ம புஃபாங்
ம ஃஇல்
ம சான்ஷன்
ஹுய் சன்னி முசுலிம்கள்
மொத்த மக்கள்தொகை
(10,586,087[1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 சீனா,  சீனக் குடியரசு (தைவான்)
மொழி(கள்)
மாண்டரின் சீன மொழி மற்றும் இதர சீன மொழிகள்
சமயங்கள்
சன்னி இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
டங்கன் மக்கள், பாந்தே மக்கள், டொங்சியாங் மக்கள் ஹான் சீனர்கள்,
இந்தோ-திபெத்திய மக்கள்
ஹுய் மக்கள்
சீனம் 回族

உய் மக்கள் அல்லது ஹுய் மக்கள் (சீனம்: பின்யின்: Huízú, (Xiao'erjing): خُوِذُو / حواري, ஆங்கில மொழி: Hui people, (டங்கன் மொழி): Хуэйзў/Huejzw) என்பவர்கள் சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட மாந்தரினக்குழுவினர். பெரும்பாலும் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்கள் பல நூற்றாண்டுகளாகச் சீனாவுடன் வணிகம் மற்றும் அரசியல் தொடர்புகள் கொண்டபோது சீனப்பெண்களை மணந்து சீனாவிலேயே நிரந்தரமாக குடியேறிய மத்திய ஆசிய, அரேபிய மற்றும் பாரசீக மக்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றனர்.

செங்கிஸ் கான் காலத்தில் இம்மக்கள் ”ஹுய் ஹுய்” என்று அழைக்கப்பட்டார்கள். ”ஹுய்” என்பதற்கு சீன மொழியில் வெளிநாட்டினர் எனப்பொருள்.[2]

சீனாவின் 56 இனக்குழுக்களில் ஹுய் இன மக்களும் அடங்குவர். ஹுய் மக்கள் சீனாவின் வடமேற்கு பகுதிகளான நிங்சியா ஹுய் தன்னாட்சி மண்டலம், கான்சு, ஃஇங்ஹை, சிங்சியாங் போன்ற இடங்களில் அடர்த்தியாகவும், மத்திய சீனா மற்றும் கிழக்கு சீனாவின் பகுதிகளான பெய்ஜிங், உள் மங்கோலியா, ஹெபெய், ஹைனான் மற்றும் உன்னானில் பரவலாகவும் வாழ்கின்றனர். தைவான் மற்றும் இந்தோனேசியா நாட்டில் இம்மக்கள் சிறுபான்மையாக உள்ளனர்.

சீன அரசின் 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி ஹுய் இன முஸ்லிம்களின் மக்கட்தொகை சுமார் பத்து மில்லியன்.[3].[4] உய்குர் முசுலிம் மக்களை விட மக்கட்தொகையில் கூடியவர்கள்.

இவர்கள் மாண்டரின் சீன மொழி பேசும் சன்னி இசுலாமியர்கள். மொழி மற்றும் பண்பாட்டுக் கூறுகளில் ஹான் சீனர்களைப் பின்பற்றுகின்றனர்.[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. [2011 census]
  2. "ஹுய் மக்கள்". Archived from the original on 2014-10-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-16.
  3. joshuaproject.net
  4. islamicpopulation.com
  5. travelchinaguide

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊய்_மக்கள்&oldid=3545454" இலிருந்து மீள்விக்கப்பட்டது