உயிரலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரலகு முறை : பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட லோக்சோடோன்டா (Loxodonta) பேரினமானது, ஆப்பிரிக்க யானைகளைக் கொண்டுள்ளது.

உயிரியலகு (taxon, பன்மை : taxa) என்பது உயிரியல் வகைப்பாட்டியலில் பயனாகும் அடிப்படை அலகு ஆகும். 1926 ஆம் ஆண்டு அடோல்பு மேயர் (Adolf Meyer-Abich) இப்பெயரினைப் பயன்படுத்தினார். இந்த அலகு என்பது ஓர் உயிரினத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிகளின் தொகையாகும். எனவே, இத்தொகையானது, உயிரினங்களின் குழு ஆகும். இதனை வகைப்பாட்டியல் அறிஞர்களர்களால், ஓர் அலகு என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு உயிரினக் குழுவுக்கும் தனிப்பட்ட இயல்புகளைக் கொண்டு, வழக்கமாக ஒரு குறிப்பிட்ட, தனிப் பெயரால் அறியப்படுகிறது. மேலும், இப்பெயர் தனித்துவமான, ஒரு குறிப்பிட்ட தரவரிசையில் அமைக்கப்படுகிறது. அப்பெயர் அனைத்துலக உயிரியல் அறிஞர்களால், குறிப்பாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இப்பெயரினைப் பேண, பன்னாட்டு பெயரீட்டு முறை பின்பற்றப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரலகு&oldid=2882962" இலிருந்து மீள்விக்கப்பட்டது