உமா நாராயண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமா நாராயண் (Uma Narayan, பிறப்பு: ஏப்ரல் 16, 1958) ஒரு பெண்ணிய அறிஞர் மற்றும் வஸார் கல்லூரியில் தத்துவப் பேராசிரியர் ஆவார்.

பணி[தொகு]

இவர் டிஸ்லொக்கேடிங் கல்ச்சர்ஸ்: ஐடென்டிடிஸ், டிராடிசன்ஸ், அண்ட் தேர்ட் வேர்ல்டு ஃபெமினிசம் (Dislocating Cultures: Identities, Traditions and Third World Feminism) என்ற நுாலின் ஆசிரியர் ஆவார். இந்த நுாலில் இவர் பெண்ணியம் என்பது வெறும் மேற்கத்திய சொல்லாக்கம் மட்டுமே எனக் கூறுகிறார், அதே சமயம் கிழக்கு இந்திய பெண்ணியம் மேற்கு மாதிரிகள் அடிப்படையிலானது என்ற கருத்தினைக் கடுமையாக மறுக்கிறார். மேலும், இவர் மேற்கத்தியமயமாக்கல் என்பதன் உள்ளடக்கத்தை எது உருவாக்கியது? என்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியவை என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.

உமா நாராயண், மேரி எல். ஷான்லியுடன் இணை ஆசிரியராய் இருந்து ரீகன்ஸ்ட்ரக்டிங் பொலிடிகல் தியரி: பெமினிஸ்ட் பெர்ஸ்பெக்டிவ்ஸ் (Reconstructing Political Theory: Feminist Perspectives), ஜூலியா பார்ட்கோயியாக் உடன் இணைந்து ஹேவிங் அண்ட் ரைசிங் சில்ட்ரென் (Having and Raising Children) மற்றும் சாண்ட்ரா ஹார்டிங் உடன் இணைந்து டிசென்டெரிங் தி சென்டர்:பிலாசபி ஃபார் மல்டிகல்சுரல், போஸ்ட்காலனியல் அண்ட் ஃபெமினிஸ்ட் வேர்ல்டு (Decentering the Center: Philosophy for a Multicultural, Postcolonial, and Feminist World) ஆகிய நுால்களை எழுதியுள்ளார். இவர், மானிடவியல் துறையின் தலைவராக ஆஸ்ரூ சி. மெல்லன் உள்ள வசார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

கல்வி[தொகு]

நாராயண் தத்துவத்தில் இளங்கலைப் பட்டத்தை பம்பாய் பல்கலைக்கழகத்தில் இருந்தும் முதுகலைப் பட்டத்தை பூனா பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவர் 1990 ஆம் ஆண்டில் முனைவர் பட்டத்தை ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

துணை நூல்கள்[தொகு]

Narayan, Uma (1997), "Contesting cultures : "Westernization," respect for cultures, and Third-World feminists", in Nicholson, Linda (ed.), The second wave: a reader in feminist theory, New York: Routledge, pp. 396–412, ISBN 9780415917612. {{citation}}: Invalid |ref=harv (help)

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_நாராயண்&oldid=3235411" இலிருந்து மீள்விக்கப்பட்டது